Search

இளநீரை விட வழுக்கைதான் நல்லதா..? கோடைக்கால சூட்டை தனிக்க சிறந்த வழி..!

 கோடைக்காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைப்பதில் இளநீரை தவிற சிறந்த பானம் இருக்க முடியாது. அதனால்தான் இதன் விலை அதிகமாக இருந்தாலும் கூட நன்மைகள் கருதி வாங்கி குடிக்கின்றனர். இளநீரின் நன்மைகளை அறிந்த பலருக்கும் அதன் வழுக்கையில் உள்ள நன்மைகள் தெரிவதில்லை. எனவேதான் பலரும் இளநீரை மட்டும் குடித்துவிட்டு தேங்காயை தவிர்த்துவிடுகின்றனர்.

ரேபரேலியின் ஆயுஷ் மருத்துவ அதிகாரி டாக்டர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா (BAMS ஆயுர்வேதா) கூறுகையில், இளநீர் மருத்துவ குணங்களின் களஞ்சியமாக கூறப்படுகிறது. இது புத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் கருதப்படுகிறது. ஆனால், அதில் உள்ள வழுக்கை தேங்காய் இளநீரை விட நமக்கு நன்மை பயக்கும். வழுக்கையில் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், நார்ச்சத்து, (வைட்டமின் ஈ, சி) போன்ற பல்வேறு வகையான சத்துக்கள் காணப்படுகின்றன.

கோடைக்காலத்தில் வரும் பல உடல்நல தொந்தரவுகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று டாக்டர் கூறுகிறார் . கோடைக்காலத்தில் உங்கள் செரிமானம் சீராக இல்லை, நெஞ்சு எரிச்சல், வயிற்று மந்தமாக உணர்கிறீர்கள் எனில் தேங்காய் வழுக்கை இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் பலன் தருகிறது. வழுக்கை குறைந்த கலோரி என்பதால் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

ஆயுஷ் மருத்துவ அதிகாரி டாக்டர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா, இளநீரை குடித்த பிறகு, அதை இரண்டாக பிளந்து வெட்டி, கரண்டியால் அதன் வழுக்கையை வழித்து சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்.


இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் ஏராளமாக காணப்படுவதால், பல தீவிர நோய்களில் இருந்து நம்மை காக்கும் திறன் வாய்ந்தது. தினமும் தேங்காய் வழுக்கையை உட்கொள்வதால், நம் உடலுக்கு போதுமான ஆற்றல் கிடைக்கிறது. இது உங்களை பலவீனமான உடலுக்கு உற்சாகமூட்டுகிறது. குறிப்பாக கர்ப்பிணிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.


🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment