Search

விழிப்போடு செயல்படுவதற்கு நீங்கள் கடைபிடிக்க வேண்டிய மூன்று பழக்க வழக்கங்கள்!

 ஒருவருடைய பழக்கவழக்கம் என்பது வெற்றிகரமான வாழ்க்கையின் வலிமையான அடையாள அறிகுறியாக செயல்படுகிறது. தொடர்ச்சியாக நாம் எந்த விஷயத்தை செய்ய வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கிறோமோ அதுவே எதிர்காலத்தில் நம்முடைய வெற்றி மற்றும் சாதனைகளுக்கு பங்களிக்கிறது.

பழக்கவழக்கங்கள் ஒருவரது கவனம், மன தெளிவு போன்றவற்றை ஊக்குவித்து முன்னோக்கி நகர்ந்து, இலக்குகளை அடைவதற்கு உதவி புரிகிறது. ஆனால் நீங்கள் தவறான பழக்க வழக்கங்களை தேர்ந்தெடுத்து விட்டால் அதுவே உங்களுக்கு பாதகமாக அமைந்து விடுகிறது. எனவே உங்கள் அன்றாட வழக்கத்தில் கவனத்தை ஊக்குவித்து விழிப்போடு செயல்படுவதற்கு உதவக்கூடிய மூன்று முக்கியமான பழக்கங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

தியானம் : 

தியானம் செய்வதற்கான மேட்-ல் நீங்கள் அமரும் பொழுது உங்கள் உள்எண்ணங்கள் மற்றும் யோசனைகளுக்கான ஒரு இடம் மற்றும் நேரத்தை நீங்கள் அமைத்துக் கொள்கிறீர்கள். தியானம் செய்யும் பொழுது பல யோசனைகள் மேகங்கள் போல் வந்து கலைவதை நீங்கள் கவனிப்பீர்கள். உங்களுடைய எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை ஏற்றுக் கொண்டு அவற்றை எளிமையாக கடந்து செல்வீர்கள். இனியும் அவற்றை ஒரு சுமையைப் போல சுமந்து செல்ல தேவையில்லை என்று எண்ணம் உங்களுக்கு தோன்றும். இன்னும் சொல்லப்போனால் உங்கள் யோசனைகளுக்கு நீங்கள் ஒரு பார்வையாளர் போல செயல்படுவீர்கள்.

தினமும் தியானம் செய்வதால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்று பார்த்தால் மன அழுத்தம் குறையும், கவனம் மேம்படும் மற்றும் கவனிப்பு, நினைவாற்றல் போன்ற உணர்ச்சி செயலாக்கத்துடன் தொடர்புடைய மூளையின் கட்டமைப்பில் நேர்மறை மாற்றங்கள் ஏற்படுகிறது.

திராதகா (Trataka) : 

விழிப்போடு செயல்படுவதற்கு நீங்கள் பயிற்சி செய்ய வேண்டிய முக்கியமான ஒரு பழக்கவழக்கம் என்றால் அது திராதகா. திராதகா என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு “சீரான பார்வை” என்று அர்த்தம்.

திராதகாவை பயிற்சி செய்வது எப்படி?

  • முதலில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி அதனை உங்களிடமிருந்து 16 முதல் 20 இன்ச் தூரத்தில் வைக்கவும்.

  • மெழுகுவர்த்தி ஒளியின் நுனியானது உங்கள் கண்களின் நேர்கோட்டிற்கு சற்று கீழே இருக்க வேண்டும்.

  • மெழுகுவர்த்தி ஒளியின் நுனியை தொடர்ந்து சீராக பார்த்துக் கொண்டே இருங்கள்.

  • கண்களை சிமிட்டுவதால் தவறொன்றும் இல்லை.

  • இப்பொழுது கண்களை மூடி பொருளை கற்பனை செய்து பாருங்கள்.

  • இந்த பிம்பம் பொறுமையாக மறைய தொடங்கும் பொழுது கண்களை திறக்கவும்.

  • பலன்கள் : 

    • ஆழ்சிந்தனை திறனுக்கு அவசியமான கவனத்தை மேம்படுத்துகிறது.

    • தலைவலி, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தருகிறது.

    • விழிப்புடன் செயல்படுவதற்கு உதவுகிறது.

    • தன்னம்பிக்கை, பொறுமை மற்றும் மன தைரியத்தை அதிகப்படுத்துகிறது.

    கவனத்துடன் பேசுதல் : 

    உங்களுடைய சிந்தனை திறனை அதிகப்படுத்தி எப்பொழுதும் விழிப்போடு இருப்பதற்கு நீங்கள் பயிற்சி செய்ய வேண்டிய மூன்றாவது பழக்கம் எப்பொழுதும் கவனத்தோடு பேச வேண்டும். கோபம், பயம் அல்லது எரிச்சலின் காரணமாக நீங்கள் எந்த ஒரு வார்த்தைகளையும் விட்டு விடாமல் மிகவும் எச்சரிக்கையோடு பேச வேண்டும். ஆனால் பொதுவாக இதுபோன்ற சூழ்நிலைகளில் நம்முடைய வார்த்தைகள் பிறரை எவ்வாறு காயப்படுத்தும் என்பதை யோசிக்காமல் தவறான வார்த்தைகளை விட்டுவிட்டு பின்னர் வருத்தப்படுவோம். எனினும் கவனத்துடன் பேசுதல் பழக்கத்தை நீங்கள் கடைபிடிக்கும் பொழுது பேசுவதற்கு முன்பு நிறுத்தி நிதானமாக பேசுவீர்கள். உடனடியாக ரியாக்ட் செய்வதற்கு பதிலாக வார்த்தைகளை தேர்ந்தெடுத்து எச்சரிக்கையுடன் நீங்கள் கூற நினைப்பதை பிறருக்கு வெளிப்படுத்துவீர்கள்.

கவனத்துடன் பேசுவதற்கு உதவும் டிப்ஸ் : 

  • பேசுவதற்கு முன்பு சிறிய இடைவெளி எடுத்துக் கொள்ளவும்.

  • உங்களுடைய வார்த்தைகள் நிலைமையை மோசமாக்குமா அல்லது மேம்படுத்துமா என்பதை ஒரு முறை யோசித்து பார்க்கவும்.

  • தெளிவாக பேசவும், அதே நேரத்தில் கனிவான வார்த்தைகளை பயன்படுத்தவும்.

  • கோபம், பிறரை குற்றம் சாட்டுதல் அல்லது பிற வகையான எதிர்மறையான உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்.

  • அதிகமாக கவனிக்கவும்.


🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment