Search

தினமும் இரவில் குளித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

 நமது உடலின் அனைத்து பாகங்களையும் தூய்மையை வைத்திருக்க தினமும் குளிப்பது மிகவும் அவசியம். அதேபோல் சரியான நேரத்தில் குளிப்பது உடல் பாகங்களை மட்டுமில்லாது உடல் சூட்டையும் சரி செய்ய உதவும்

அவசரமான இந்த கால கட்டத்தில் தினமும் தலைக்கு குளிப்பதால் சரியாக துவட்டமுடியாமல் தலைக்கு சரியாக எண்ணெய் வைக்க முடியாமல் தலைவலி, சைனஸ் போன்ற பிரச்னைகள் நமக்கும் ஏற்படும்.

இந்நிலையில், இரவில் குளித்தால் பல நன்மைகள் ஏற்படும். அப்படி இரவில் குளிப்பது சுகாதாரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பல உளவியல் ரீதியான மாற்றங்களையும் ஏற்படுத்தும்.


சரும ஆரோக்கியம் :  தினமும் இரவில் குளிப்பதன் மூலம் சருமத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும். கோடைக்காலத்தில் ஏற்படும் சரும பாதிப்புகள் நீங்கி சருமம் பொலிவடையும்.

நல்ல தூக்கம் : தூக்கமின்மை மற்றும் உடல் சோர்வால் அவதிப்படுபவர்கள் தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ரத்த ஓட்டம் சீராகும் : தூங்க செல்வதற்கு முன் குளித்தால் உடலில் ரத்த ஓட்டம் சீராகும். மேலும் மனதை புத்துணர்ச்சியடைய செய்யும்.

தூங்கும் முன் தலையை சுத்தம் செய்யாமல் தூங்கினால் தலையில் உள்ள சில பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் தலையணையில் பரவி அங்கேயே தங்கிவிடும். இதை தவிர்க்க படுக்கைக்கு செல்வதற்கு முன் தலையை சுத்தம் செய்வது அல்லது குளிப்பது நல்லது.

நம் உடலும், தசைகளும் சோர்வாக இருக்கும் இரவில் அவற்றை ரிலாக்ஸ் செய்யும் விதமாக வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது நல்ல பலனை தரும்.

அதே சமயம் கோடை காலம் என்றால் சுடு தண்ணீரில் குளிக்க முடியாது. இந்த மாதிரி சமயங்களில் குளிர்ந்த தண்ணீரில் குளிப்பது நல்ல அனுபவத்தை தரும்.

பொதுவாக உறங்க செல்வதற்கு 1 அல்லது 2 மணி நேரத்திற்கு முன் குளிப்பது நமது உடல் வெப்பநிலையை சீராக வைத்திருக்க உதவும்.


🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment