Search

ஐஐஎஸ் நிறுவனங்களில் புதிய திறன் பயிற்சிகள் - பட்டதாரி மாணவர்களுக்கு ஏஐசிடிஇ அழைப்பு

 சென்னை: ஏஐசிடிஇ திட்ட ஆலோசகர் மம்தா ஆர்.அகர்வால், அனைத்து தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

மாணவர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் ஒரு முயற்சியாக மும்பை மற்றும் ஹைதரா பாத் நகரங்களில் இந்திய திறன் நிறுவனங்களை ( ஐஐஎஸ் ) அமைத்துள்ளது. பொது, தனியார் கூட்டாண்மை முறையின் கீழ் டாடா கல்வி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளையுடன் இணைந்து அமைக்கப் பட்டுள்ள இந்நிறுவனங்களில் முதல் கட்டமாக வரும் மே மாதம் முதல் புதிய திறன் படிப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, மேம்பட்ட தொழில் துறை ஆட்டோமேஷன் மற்றும் ரோபாட்டிக்ஸ் ( 12 வாரம் ), தொழில் துறை ஆட்டோமேஷனுக்கான அடிப்படைகள் ( 12 வாரம் ), மேம்பட்ட ஆர்க் வெல்டிங் நுட்பங்கள் ( 10 வாரம் ), சேர்க்கை உற்பத்தி ( 10 வாரம் ), மின்சார வாகன பேட்டரி நிபுணர் ( 12 வாரம் ), இருசக்கர மின்சார வாகன தொழில் நுட்ப வல்லுநர் ( 12 வாரம் ) ஆகிய படிப்புகளுக்கு பட்டதாரி மாணவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

கூடுதல் விவரங்கள் மற்றும் கட்டணங்கள் குறித்து 9587097821, 7597953987 என்ற செல்போன் எண்களையும், www.iisahmedabad.org என்ற இணைய தளத்தையும் தொடர்பு கொள்ளலாம்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment