Search

நீங்க ரெடியா மக்களே... குறைந்த வட்டியில் தொழில் துவங்க சூப்பர் திட்டம் அறிவிப்பு...

 புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல துறை மூலம் தமிழக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் ,கடன் உதவிகள், பள்ளி மாணவர்களுக்கு உதவித் தொகை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது குறைந்த வட்டியில் சிறு தொழில் செய்வதற்கு கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து  புதுக்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் அமீர் பாஷா கூறுகையில், இந்த பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர், சீர் மரபினர் துறை மூலம் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அங்கு அளிக்கப்படும் மனுக்களுக்கு உடனே தீர்வு காணப்பட்டும் வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் சுகாதார மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலமாக சிறு தொழில், காய்கறி கடை ,துணிக்கடை, முடி திருத்தம் செய்யும் கடை போன்ற தொழில்களுக்கு குறைந்த வட்டியில் அதாவது 4 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை மட்டுமே வட்டி விகிதத்தில் கடனுதவி உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது.

எனவே  இதனை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மேலும் இது குறித்த விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தில் தெரிந்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news



0 Comments:

Post a Comment