சென்னை காவல்துறையில் இளநிலை செய்தியாளர் வேலை: 54 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு* - Agri Info

Adding Green to your Life

March 21, 2024

சென்னை காவல்துறையில் இளநிலை செய்தியாளர் வேலை: 54 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு*

 காவல்துறையில் காலியாக உள்ள 54 இளநிலை செய்தியாளர் (Junior Reporters) காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை Police Shorthand Bureau, SBCID  Chennai வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும்  ஏப்ரல் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலிப்பணியிடங்கள் விவரம்: மொத்தம் 54 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

முக்கியமான நாட்கள்: இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: 15.04.2024;

இணைய வழியில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 04-05-2023; நள்ளிரவு 11 மணி வரை

தேர்வு தேதி :  பின்னர் அறிவிக்கப்படும்

நேர்காணல் தேர்வு தேதி: பின்னர் அறிவிக்கப்படும்.

வயது வரம்பு: SC / ST / SC(A) பிரிவினருக்கு 18 முதல் 37 வரை வயது வரம்பு. BC / BC(M) / MBC / DC பிரிவினருக்கு 18 முதல் 34 வரை வயது வரம்பு. பிற வகுப்பினைச் சார்ந்த SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs and BCMs பிரிவினருக்கு 18 முதல் 32 வரை வயது வரம்பில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்: தமிழை ஒரு பாடமாக எடுத்து  12-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் ஆங்கிலத்தில் முதுநிலை (Higher / Senior Grade in English ) முடித்திருக்க வேண்டும். கணினி அறிவு இருத்தல் வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? இதற்கான விண்ணப்பப்படிவத்தை eservices.tnpolice.gov.in / என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி :  The Chairman, Selection Committee,
Police Shorthand Bureau, HQ, 2 nd floor, Old Coastal Security Group Building,
DGP office complex, Mylapore, Chennai- 600 004 ஆகும்.  விண்ணப்பம் வந்துசேர வேண்டிய கடைசி நாள்  15.04.2024 ஆகும்.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment