Search

UPSC IFS தேர்வு அறிவிப்பு 2024 – 150 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

UPSC IFS தேர்வு அறிவிப்பு 2024 – 150 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது தற்போது வனத்துறையில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக புது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, இந்திய வன சேவைகள் – IFS ல் பல்வேறு பதவிகளுக்கு என்று 150 காலியிடங்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

UPSC IFS காலிப்பணியிடங்கள்:

இந்திய வன சேவை தேர்வின் மூலம் மொத்தம் 150 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

IFS கல்வி தகுதி:

இந்தியாவில் மத்திய அல்லது மாநில சட்டமன்றத்தின் சட்டம் அல்லது பாராளுமன்றச் சட்டத்தால் நிறுவப்பட்ட அல்லது பல்கலைக்கழக மானியக் குழு சட்டம், 1956 இன் பிரிவு 3 இன் கீழ் பல்கலைக்கழகமாகக் கருதப்படும் அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதியைப் பெற்றுள்ள பிற கல்வி நிறுவனங்களில் இருந்து விண்ணப்பதாரர்கள் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், புவியியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் விலங்கியல் அல்லது வேளாண்மை, வனவியல் அல்லது பொறியியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.08.2024 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் மற்றும் 32 வயதை எட்டாமல் இருக்க வேண்டும். அதாவது, அவர் 02.08.1992 முதல் 01.08.2003 க்கு இடையில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

UPSC IFS தேர்வு செயல் முறை:

Indian Forest Service (Preliminary) Examination (Objective type)

Indian Forest Service (Main) Examination (Written and Interview)

Interview/Personality Test

விண்ணப்பக் கட்டணம்:

பெண்/SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது

மற்ற அனைவருக்கும் – ரூ.100/-

கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் UPSC இணையதளத்தில் உள்ள தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவில் அதாவது https://upsc.gov.in/ என்ற இணைப்பின் மூலம் 14.02.2024 முதல் 05.03.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2024 Pdf

Apply Online

🔻🔻🔻

0 Comments:

Post a Comment