Search

TNPSC குரூப்-4 தேர்வுக்கு தயாராகிறீர்களா? உங்களுக்கான ஈஸி டிப்ஸ் இது...

 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜனவரி 30, 2024 அன்று அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜுன் மாதம் 6ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதன் மூலம் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தேர்வு எழுத விரும்புவோர் டிஎன்பிஎஸ்சி விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதளத்தில் 28.02.2024, இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களை சரிபார்க்க 04.03.2024 அதிகாலை 12.01 மணியில் இருந்து 06.03.2024, இரவு 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பதவிகள் மற்றும் வயது வரம்பு கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்கள்..

TNPSC குரூப் 4 தேர்வு மூலம், கிராம நிர்வாக அலுவலர் (VAO), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், ஜூனியர் அசிஸ்டண்ட், பில் கலெக்டர், வன காப்பாளர், வன கண்காணிப்பாளர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தேர்வுக்கான வயது வரம்பு:

குரூப் 4 தேர்வுக்கு 18 முதல் 37 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், சில பதவிகளுக்கு வயது வரம்பு மாறுபடும். அதன்படி, கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு 21 முதல் 32 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VAO தேர்வுக்கான குறைந்தபட்ச தகுதி என்ன:

TNPSC VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-வது தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

TNPSC குரூப் 4 தேர்வுக்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜூனியர் அசிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கு தயாராகுவது எப்படி?

குரூப் 4 தேர்விற்கு தயாராகுவது குறித்து திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் போட்டித் தேர்வு மையங்களில் பயிற்சி ஆசிரியர்கள் அருள்தாஸ் மற்றும் சத்தியசீலன் கூறும் டிப்ஸ்கள் சிலவற்றை பார்க்கலாம்.

1) புத்தகங்களை சேகரித்தல்:

இந்த குரூப் 4 போட்டித் தேர்வில் தேர்வு எழுதும் மாணவர்கள் முதலாவதாக பாடத்திட்டங்களுக்கு ஏற்ப 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான புத்தகங்களை சேகரித்து கொள்வது மிக அவசியமானதாகும்.

2) நேரத் திட்டமிடல்:

தேர்வுக்கு தயாராகும் நேரத்தை திட்டமிடல் மிகுந்த அவசியமானதாகும்.இதில் தமிழ் மற்றும் பொது அறிவு கணிதம் உள்ளிட்ட பாடங்கள் படிப்பதற்கான நேரங்களை திட்டமிட்டு பின்பற்றுதல் முக்கியமானவை.

3) தமிழ் பாடத்தில் முக்கியத்துவம்:

6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் உள்ள தமிழ் பாட புத்தகங்களை முழுவதுமாக படிப்பது தேர்விற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். செய்யுள் பகுதியில் நூல் குறிப்பு, நூல் ஆசிரியர் குறிப்பு, நூல் ஆசிரியரின் பிற நூல்கள் கவனம் செலுத்துவது நல்லது மேலும் தேர்வில் 50 சதவீத வினாக்கள் தமிழ் பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படுவதால் அதிக கவனம் தமிழ் பாடத்திற்கு முக்கியமானது.

4) கணித பாடம்:

கணிதத்தில் மாதிரி வினாக்களை பயிற்சி செய்வது பயனுள்ளதாக அமையும் இதில் 25 வினாக்கள் பாடத்திட்டங்கள் மற்றும் முந்தைய வினாக்களில் இருந்து தேர்வில் கேட்கப்படுவதால் தமிழைப் போலவே கணிதத்திற்கு கவனம் முக்கியமானது.

5) மாதிரி தேர்வுகள்:

மாதிரி தேர்வுகளை பயிற்சி செய்வது தேர்வு அன்று மிகவும் பயனுள்ளதாக அமையும். வாரத்தின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை மாதிரி தேர்வுகளை எழுதி பார்ப்பது நல்லது. இதனை தொடர்ந்து தேர்வு நேரங்களில் ஓய்வு உடலுக்கு மிகவும் அவசியமானவை.  அதிக நேரம் விழித்திருப்பது சோர்வை ஏற்படுத்தும் ஆகையால் தேர்வுக்கு முந்தைய நாட்களில் ஓய்வு எடுத்துக் கொள்வது தேர்வு அன்று புத்துணர்ச்சி ஏற்பட பயனுள்ளதாக அமையும்.

6)  மாதிரி வினாக்கள்:

கடைசி மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்களை சேகரித்து அதை மாதிரியாக கொண்டு பாடத்திட்டங்களை படிப்பது பயன் தரும்.

7) கலந்துரையாடல்:

தேர்விற்கு தயாராகும் போது ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் வினாக்களில் மீதான கலந்துரையாடல்களை சக போட்டியாளர்களுடன் விவாதிப்பது செய்வது மேலும் பல்வேறு சந்தேகங்களை தீர்க்க வல்லதாக அமையும்.

8) இறுதியான டிப்ஸ்:

மேலும் தினசரி செய்தித்தாள்கள் படிப்பது மிகவும் பயனுள்ளதாக அமையும். இத்தேர்வில் பாடத்திட்டம் பள்ளி பாடப் புத்தகங்களில் பெரும்பாலும் உள்ளது. அதனால் பள்ளி பாடப்புத்தகங்களை நன்றாக படித்து கொள்வது காட்டாயம். பள்ளிப் புத்தகங்களை முழுவதுமாகப் படித்து முயற்சி செய்தால் தேர்வுகளுக்கு நல்ல முறையில் தயாராகலாம்.

🔻🔻

Click here to join Group4 whatsapp group

0 Comments:

Post a Comment