Search

சமூகப் பாதுகாப்புத் துறையில் பணிபுரிய வாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!

 Chairperson, Member ஆகிய பணிகளுக்கென  சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ்வரும் கிருஷ்ணகிரி மற்றும் தேனி மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சமூகப் பாதுகாப்புத் துறை காலிப்பணியிடங்கள்:

சமூகப் பாதுகாப்புத் துறையில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Chairperson (கிருஷ்ணகிரி) – 01 பணியிடம்

Member (கிருஷ்ணகிரி) – 01 பணியிடம்

Member (தேனி) – 01 பணியிடம்

Chairperson / Member கல்வி தகுதி:

Child Psychology, Psychiatry, Law, Social Work, Sociology, Human Health ஆகிய பாடப்பிரிவில் Bachelor’s Degree-ஐ அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.

Chairperson / Member வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 35 வயது முதல் அதிகபட்சம் 65 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Chairperson / Member சம்பளம்:

இந்த  சமூகப் பாதுகாப்புத் துறை சார்ந்த பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.

SWD தேர்வு முறை:

Chairperson, Member பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SWD விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ச சமூகப் பாதுகாப்புத் துறை அலுவலக முகவரிக்கு இறுதி நாளுக்குள் (07.03.2024) தபால் செய்ய வேண்டும்.

0 Comments:

Post a Comment