கனரா வங்கி செக்யூரிடீஸ் லிமிடெட். (CBSL), ஆனது Deputy Manager-Company Secretary பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 20.02.2024 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
CBSL காலிப்பணியிடங்கள்:
கனரா வங்கி செக்யூரிடீஸ் லிமிடெட்டில் (CBSL) Deputy Manager-Company Secretary பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 50 % மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கனரா வங்கி வயது வரம்பு:
31.01.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பள விவரம்:
Deputy Manager-Company Secretary பதவிக்கு என தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.31800-1300(4), 37000-1400-(5), -44000 (Pay scale 31800-44000) + D.A,/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
வங்கி பணிக்கான தேர்வு செயல் முறை:
மேற்கூறிய பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
www.canmoney.in என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனை வரும் 20.02.2024 க்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
🔻🔻🔻
No comments:
Post a Comment