Search

ரூ.1,38,000 வரை சம்பளம்... மாநகராட்சி, நகராட்சியில் 1,933 காலிப்பணியிடங்கள்... விண்ணப்பிப்பது எப்படி?

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் காலியாக உள்ள 1,933 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள் :

பணியின் பெயர்

காலிப்பணியிடங்கள்

சம்பளம்

உதவிப்பொறியாளர் (மாநகராட்சி)

146

ரூ.37,700-1,38,500

உதவிப்பொறியாளர் (சிவில்/மெக்கானிக்கல்)

145

ரூ.37,700-1,38,500

உதவிப்பொறியாளர் (நகராட்சி)

80

ரூ.37,700-1,38,500

உதவிப்பொறியாளர் (சிவில்)

58

ரூ.37,700-1,38,500

உதவிப்பொறியாளர் (மெக்கானிக்கல்)

14

ரூ.37,700-1,38,500

உதவிப்பொறியாளர் (எலக்டிரிக்கல்)

71

ரூ.37,700-1,38,500

உதவிப்பொறியாளர் (திட்டம்) (மாநகராட்சி)

156

ரூ.37,700-1,38,500

நகரமைப்பு அலுவலர் (நிலை-2/ உதவிப்பொறியாளர் (திட்டம்) (நகராட்சி)

12

ரூ.35,900-1,31,500

இளநிலை பொறியாளர்

24

ரூ.35,900-1,31,500

தொழில்நுட்ப உதவியாளர்

257

ரூ.35,400-1,30,400

வரைவாளர் (மாநகராட்சி)

35

ரூ.35,400-1,30,400

வரைவாளர் (நகராட்சி)

130

ரூ.35,400-1,30,400

பணி மேற்பார்வையாளர்

92

ரூ.35,400-1,30,400

நகரமைப்பு ஆய்வாளர் / இளநிலை பொறியாளர் (திட்டம்)

102

ரூ.35,400-1,30,400

பணி ஆய்வாளர்

367

ரு.18,200-67,100

துப்பரவு ஆய்வாளர் (மாநகராட்சி & நகராட்சி)

244

ரூ.35,400-1,30,400

மொத்தம்

1,933

இப்பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு முறைகளும் அரசாணையின் படி, அண்ணா பல்கலைக் கழகம், சென்னை மூலம் மேற்கொள்ளப்படும். விருப்பமுள்ளவர்கள் https://tnmaws.ucanapply.com/ என்ற இணைய முகவரியில் 09.02.2024 முதல் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் : 

விண்ணப்பிக்க கடைசி நாள்

12/03/2024 மாலை 05.45

திருத்தங்கள் மேற்கொள்ள

13/03/2024 காலை 10 மணி முதல் 15/03/2024 மாலை 5.45 மணி வரை

எழுத்து தேர்வு விவர்ங்கள் :

பணி

தேதி

உதவிப்பொறியாளர், நகரமைப்பு ஆய்வாளர்/இளநிலை பொறியாளர் (திட்டம்) (திட்ட பிரிவில் டிகிரி முடிந்தவர்கள்) மற்றும் துப்பரவு ஆய்வாளர்

30.06.2024

இளநிலை பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், வரைவாளர், பணி மேற்பார்வையாளர், நகரமைப்பு ஆய்வாளர்/இளநிலை பொறியாளர் (திட்டம்) (சிவில் மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றில் டிப்ளமோ படித்தவர்கள்) மற்றும் பணி ஆய்வாளர்

29.05.2024

விண்ணப்பதார்கள் விவரங்களுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநரக அலுவலகத்தில் நேரிலோ அல்லது 044 - 29864451 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது application.maws@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெரிந்துகொள்ளலாம்.

🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news
Click here for latest employment news


0 Comments:

Post a Comment