இந்திய விமானப்படையில் அக்னிவீர் வேலைவாய்ப்பு 2024 – 12ம் வகுப்பு / Diploma தேர்ச்சி போதும்! - Agri Info

Adding Green to your Life

January 3, 2024

இந்திய விமானப்படையில் அக்னிவீர் வேலைவாய்ப்பு 2024 – 12ம் வகுப்பு / Diploma தேர்ச்சி போதும்!

 இந்திய விமானப்படை (IAF) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இதில் அக்னிபாத் பிரிவின் கீழ் வரும் அக்னிவீர்வாயு Intake 01 / 2025 பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 17.01.2024 அன்று முதல் இணையவழி மூலம் பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்திய விமானப்படை காலியிடங்கள்:

இந்திய விமானப்படையில் (IAF) 2024 ஆண்டில் அக்னிவீர்வாயு Intake 01 / 2025 பணிக்கென தோராயமாக 3500 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

IAF Agniveervayu Intake 01 / 2025 கல்வி:

அக்னிவீர்வாயு Intake 01 / 2025 பணிக்கு 10ம் / 12ம் வகுப்பு, Diploma அல்லது Vocational Coruse-ஐ அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

IAF Agniveervayu Intake 01 / 2025 வயது:

இந்த IAF Agniveervayu Intake 01 / 2025 பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 21 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 02.01.2004 அன்று முதல் 02.07.2007 அன்றுக்குள் பிறந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

IAF Agniveervayu மாத ஊதியம்:  

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

IAF தேர்வு செய்யும் விதம்:

இந்த இந்திய விமானப்படை (IAF) சார்ந்த பணிக்கு பொருத்தமான நபர்கள் பின்வரும் தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Phase I –  Online Test

Phase II – Physical Fitness Test, Adaptability Test II

Phase III – Medical Fitness Test

IAF விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களிடம் ரூ.550/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

IAF விண்ணப்பிக்கும் விதம்:

இந்த IAF Agniveervayu Intake 01 / 2025 பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 17.01.2024 அன்று முதல் 06.02.2024 அன்று வரை https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணைப்பில் இப்பணிக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.



🔻🔻🔻

No comments:

Post a Comment