திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும், இந்த மெகா வேலைவாய்ப்பு முகாமில், 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 10 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்கிறது.
எப்போது முகாம்...!
டாக்டர் கலைஞர் நுாற்றாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, ஸ்ரீ தனலெட்சுமி ஸ்ரீனிவாசன் தொழில் நுட்ப கல்லூரியில் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது.
முகாமில் பங்கு பெறும் முன்னணி நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் பல்வேறு துறைகளில், காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்கிறது.
10 முதல் பி.இ., வரை
இந்த முகாமில் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, நர்ஸிங், பார்மஸி மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்களும் பங்கேற்கலாம்.
முகாமில் 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைதேடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் பங்கேற்கலாம்.
ப்ளீஸ் மறக்காதீங்க...!
பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் கயவிவரக் குறிப்புடன் (Bio-Data) ஆகியவற்றை நேர்காணலின்போது, உடன் எடுத்து செல்ல வேண்டும்.
முகாமில் 150க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட நபர்களை தேர்வு செய்து பணி ஆணை வழங்கவுள்ளனர்.
வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.
ஊதியம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை ஆகிய இடங்களில் உள்ள Cube Enterprises, WHEELS INDIA LTD, Jai Nidhi Automation, DELPHI TVS TECHNOLOGIES PVT LTD ஆகிய நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியம் குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். பணி திறனை பொறுத்து கூடுதல் ஊதியம் பெறவும் வாய்ப்புள்ளது.
முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள்https://www.tnprivatejobs.tn.gov.in/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DHஎன்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்க்கை க்ளிக் பண்ணுங்க ப்ளீஸ்...
🔻🔻🔻
Click here for latest employment news
0 Comments:
Post a Comment