ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க! - Agri Info

Adding Green to your Life

October 15, 2023

ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

 

தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழக அரசின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (TNSRLM) தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் 25.10.2023 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வட்டார ஒருங்கிணைப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் சமர்பிக்க வேண்டும்.

முகவரி: இணை இயக்குனர்/ திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இரண்டாவது தளம், கோரம்பள்ளம், தூத்துக்குடி – 628101.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.10.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2023/10/2023101275.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.



🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment