வேலூர் மாவட்ட சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் இளைஞர் நீதிக்குழுமத்திற்கு (Juvenile Justice Board) உதவியாளர் கலந்த கணிணி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. முற்றிலும் தற்காலிக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்படும் இந்த பதவிக்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (Senior Grade In Tamil and English). கணினி இயக்குவதில் டிப்ளமோ/சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பணியில் முன்னனுபவம் உள்ளோர்க்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு: 01.07.2023 அன்றுள்ளபடி 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
தொகுப்பூதியம்: ரூ.11,916/- PM.
மேற்குறிப்பிட்ட தகுதிவாய்ந்த நபர்கள் இப்பதவிக்கான விண்ணப்பம் மற்றும் தகவல்களை தகவல்களை வேலூர் மாவட்ட இணையத்தில் http:/vellore.nic.in இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை உரியசான்றுகளின் ஒளி நகலுடன் வரும் 16.10.2023 மாலை 5.45 மணிக்குள் கீழ்குறிப்பிட்ட முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அண்ணாசாலை, வேலூர் - 632 001 ஆகும்.
16ம் தேதி மாலை 5.45 மணிக்குள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் உரியசான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here for latest employment news
No comments:
Post a Comment