Search

DRDO பணிக்கான அறிவிப்பு... 204 காலிப்பணியிடங்கள்!

 பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவான டிஆர்டிஓ , வேலை தேடுபவர்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளது. இதன் மூலம் விஞ்ஞானி-பி வகைப் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது. தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.drdo.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த காலக்கெடு செப்டம்பர் 29 வரை மட்டுமே உள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) முக்கியமாக DST, ADA, CME போன்ற துறைகளில் Scientist-B பதவிகளை நிரப்புகிறது.

காலி பணியிடங்கள் 204

தகுதிகள்

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் முதல் வகுப்பு பொறியியல் முடித்திருக்க வேண்டும். கிராஜுவேட் ஆப்டிட்யூட் டெஸ்ட் (கேட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தகவல் விண்ணப்ப படிவத்தில் வழங்கப்பட வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களின் வயது 18 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். பட்டியல் பிரிவினருக்கு மத்திய அரசின் விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு முறை

தனிப்பட்ட நேர்காணலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நேர்காணல் தேதி மற்றும் இடம் பற்றிய விவரங்கள் தனி அழைப்புக் கடிதம் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.

சம்பளம்

DRDO Scientist-B ஆட்சேர்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் சம்பளம் மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை. இதற்கிடையில், தேசிய பாதுகாப்புத் துறையில் டிஆர்டிஓ-வின் பங்கு முக்கியமானது. நாட்டிற்கு பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மேம்பட்ட ஆயுதங்கள் தயாரிப்பிலும் தன்னிறைவு அடைந்துள்ளது. DRDO நாடு முழுவதும் 51 ஆராய்ச்சி மையங்களைக் கொண்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆயுதங்கள், மின்னணுவியல், ஏவுகணைகள், போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் போன்றவைகளில் இந்த மையங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எப்படி அப்ளை செய்வது?

படி 1: முதலில் DRDO அதிகாரப்பூர்வ இணையதளமான www.drdo.gov.in பக்கத்திற்குச் செல்லவும். முகப்புப் பக்கத்திற்குச் சென்று, விளம்பர எண் 145-ஐ கிளிக் செய்து, விஞ்ஞானி-பி வேலைக்கான அறிவிப்பு விவரங்களைச் சரிபார்க்கவும்.

படி 2: அதன் பிறகு 'Apply Now' என்பதை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். முதலில் பெயர், பிறந்த தேதி போன்ற விவரங்களை உள்ளிட்டு பதிவு செய்துக் கொள்ளவும். அதன் பிறகு பதிவு ஐடி மற்றும் கடவுச்சொல் உதவியுடன் உள்நுழைந்து விண்ணப்பப் படிவத்தை ஓபன் செய்யவும்.

படி 3: அதில் அனைத்து விவரங்களையும் உள்ளிடவும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

படி 4: தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி இறுதியாக விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment