Search

புரண்டு புரண்டு படுப்பதிலேயே இரவு கழிகிறதா..? நல்ல இரவு தூக்கத்திற்கு உதவும் டிப்ஸ்..!

 அதிக வேலை நேரம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை அல்லது மனஅழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் நம்மில் பெரும்பாலோர் ஏதோ ஒரு கட்டத்தில் இரவு நிம்மதியாக தூங்க முடியாமல் தவித்திருப்போம். இரவு முழுவதும் புரண்டு புரண்டு படுத்து தூங்க முடியாமல் தவிப்பது அடுத்த நாளை உற்சாகமாக எதிர்கொள்ள பெரும் தடையாக இருக்கும்.

இரவு நன்கு தூங்காமல் விடுவதால் அடுத்த நாள் முழுவதும் உடல் சோர்வு, எரிச்சல் உணர்வு, தூக்க கலக்கம் உள்ளிட்ட பல பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஆனால் நீண்ட மாதங்கள் இது போல இரவு தூங்க முடியாமல் அவதிப்பட்டால் அது இதய நோய், பக்கவாதம், நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் அல்சைமர் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும்.

சுருக்கமாக சொன்னால் நல்ல இரவு தூக்கம் என்பதை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும். இரவு 7 - 8 மணி நேரம் இடையூறு இன்றி தூங்குவது அடுத்த நாளை உற்சாகமாக, புத்துணர்ச்சியுடன் எதிர்கொள்ள உதவும். நல்ல உடல் மற்றும் மனஆரோக்கியம், சுறுசுறுப்பு, சிறந்த உற்பத்தி திறனுக்கு முக்கியமான இரவு தூக்கத்தை எப்படி பெறுவது? இரவு தூங்க முடியாமல் அவஸ்தைப்படுபவரில் நீங்களும் ஒருவர் என்றால் உங்களுக்கான டிப்ஸ்களுக்கு தொடர்ந்து படியுங்கள்...

நல்ல தூக்கத்திற்கு உதவும் ப்ராப்பர் ரொட்டீன்: குழந்தைகள் மற்றும் சிறுவர்களை தூங்க வைக்க தினசரி குறிப்பிட்ட நேரத்திற்கு பெற்றோர்கள் பழக்கப்படுத்தி வைத்திருப்பார்கள். அந்த நேரம் வந்ததும் தானாகவே குழந்தைகள் தூங்க செல்வதை அல்லது அவர்களது கண்களை தூக்கம் தழுவுவதை நாம் பார்த்திருப்போம். பெரியவர்களாகிய நமக்கும் இது பொருந்தும். நாமும் தினசரி இரவு குறிப்பிட்ட நேரத்திற்கு படுக்கைக்கு செல்வதை வழக்கமாக்கி கொள்வது நல்ல இரவு தூக்கத்திற்கு உதவும். என்ன வேலையாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்க வேண்டும் என்பதை வழக்கமாக்கி கொண்டு அதனை சில நாட்களுக்கு பின்பற்றி பாருங்கள், நல்ல பலன் கிடைக்கும்.

நேர்மறை எண்ணங்கள்: ஒருநாள் முழுவதும் உங்கள் மனது பல எதிர்மறை விஷயங்களை யோசித்திருக்கலாம், ஆனால் படுக்கைக்கு செல்லும் முன்பும் இதனை கடைபிடிப்பது நிச்சயம் தூங்க விடாமல் இடையூறு ஏற்படுத்தும். எனவே அன்றைய நாளில் நடைபெற்ற மகிழ்ச்சியான தருணங்களை மட்டுமே நினைவில் வைத்து நேர்மறை எண்ணங்களோடு தூங்க செல்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். அமைதியான இரவு தூக்கத்திற்கு உங்களது நேர்மறை எண்ணங்கள் காரணமாக மனதில் எழும் மகிழ்ச்சி கணிசமாக உதவும்.

ஆல்கஹால் & ஜங்க் ஃபுட்ஸ்களுக்கு நோ... இரவு தூங்க செல்வதற்கு முன்பு காரமான உணவு, ஜங்க் ஃபுட்ஸ், அதிகமாக சாப்பிடுவது மற்றும் மது குடிப்பது உள்ளிட்ட பழக்கங்கள் இருந்தால் முதலில் அதனை கட் செயுங்கள். அதே போல மாலை நேரத்தில் காஃபின் எடுப்பது கூட இரவு நிம்மதியாக தூங்குவதற்கு தடையாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். அதே போல இரவு நேரத்தில் சர்க்கரை அடங்கிய உணவுகள் மற்றும் பானங்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை உருவாக்கும் energy surge மற்றும் subsequent collapse உங்கள் பயோலாஜிக்கல் கிளாக்-ஐ குழப்ப கூடும்.

மொபைல், டிவி, லேப்டாப்பிற்கும் நோ... தூங்க செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே மொபைல், டிவி, கம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்டவைற்ற பயன்படுத்துவது மற்றும் பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். குறிப்பாக கேஜெட்ஸ்கள் வெளியிடும் நீல ஒளி தூக்க ஹார்மோனான மெலடோனின் உற்பத்தியை தடுக்கிறது. எனவே இது போன்ற டிவைஸ்களை உங்கள் பெட்ரூமிற்கு வெளியே வைத்து விட்டு தூங்க செல்லுங்கள்.

வாசிப்பு பழக்கம்: படுக்கையில் படுத்து கொண்டு சிறிது நேரம் நல்ல புத்தகங்களை படிப்பது நேர்மறை எண்ணத்தை மனதில் விதைப்பதோடு, அமைதியான தூக்கத்திற்கும் வழிவகுக்கும். படுக்கையில் படுத்து கொண்டு மொபைலை பயன்படுத்துவதை விட புத்தகம் வாசிக்கும் பழக்கம் இரவு தூக்கத்திற்கு மிகவும் நல்லது. தூங்குவதற்கு முன் படுக்கையில் அமர்ந்தபடியோ அல்லது படுத்தபடியோ படிப்பது ஒட்டுமொத்த தூக்க தரத்தை மேம்படுத்துகிறது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment