Search

மைதா கலந்த உணவுப்பொருள்கள் சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் இத்தனை மாற்றங்கள் நடக்குமா..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

 

இன்றைக்கு நாம் சாப்பிடக்கூடிய 80 சதவீத உணவுகளில் மைதா நிச்சயம் இடம் பெற்றிருக்கும். ரொட்டி, பிஸ்கட், புரோட்டா , பேக்கரி திண்பண்டங்கள் என அனைத்திலும் மைதா தான் பிரதானப் பொருளாக உள்ளது. ஆனால் இதை தொடர்ச்சியாக நாம் சாப்பிட்டு வரும் போது உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே தான் இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். குறிப்பாக ஊட்டச்சத்து நிபுணரான நூபுர் பாட்டீலின் கூற்றுப்படி, நீங்கள் ஒரு மாதத்திற்கு மைதாவை முழுவதுமாக கைவிடும்போது, உங்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார். இதோ என்னென்ன பலன்கள்? என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்துக் கொள்வோம்.

மேம்பட்ட செரிமானம்: பொதுவாகவே சுத்திகரிக்கப்பட்ட மாவில் பெரும்பாலும் நார்ச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைவாக காணப்படும். இதனால் செரிமானப் பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதே போன்று மைதாவிலும் நன்கு சுத்திகரிக்கப்பட்ட மைதா மூலம் தயார் செய்யப்படும் உணவுப்பொருள்களை சாப்பிடும் போது செரிமானம் ஆகாமல் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். எனவே தான் ஒருமாத காலத்திற்காவது இதை நீங்கள் உணவு முறையில் தவிர்க்கும் போது செரிமான பிரச்சனையின்றி வாழ முடியும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

இரத்த சர்க்கரை அளவை சீராக்குதல்: மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட மாவை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது இது உடலில் விரைவாக குளுக்கோஸாக மாற்றப்படுகிறது. இதனால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வழிவகுக்கிறது. எனவே மைதாவை தவிர்ப்பதால்,இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்தவும், இன்சுலின் எதிர்ப்பின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.

எடை மேலாண்மை: சுத்திகரிக்கப்பட்ட உணவுப்பொருள்களில் கலோரிகள் அதிகளவில் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருந்தால் பிஸ்கட், புரோட்டோ போன்ற மைதா கலந்த பொருள்கள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இதற்கு மாற்றாக சிறு தானியத்தில் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருள்கள் சாப்பிடுவதை வழக்கமாக வைத்து கொள்ளுங்கள்.

அதிக ஆற்றல் வழங்குதல்: சுத்திகரிக்கப்பட்ட மாவில் கார்போஹட்ரேட்டுகள் அதிகளவில் இருக்கும். இவற்றை நீங்கள் உட்கொள்ளும் போது உடலில் ஆற்றலை செயலிழக்கச் செய்கிறது. எனவே தான் மைதா போன்ற பொருள்களை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.

அதிகரித்த ஊட்டச்சத்து உட்கொள்ளல்: சுத்திகரிக்கப்பட்ட மாவுக்குப் பதிலாக தினை (ஜோவர், பஜ்ரா, ராகி, முதலியன) மற்றும் பிற ஆரோக்கியமான மாற்றுகளைப் பயன்படுத்துவதன் மூலம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை நீங்கள் உட்கொள்ளலாம்.


வீக்கத்தைக் குறைத்தல்: சுத்திகரிக்கப்பட்ட மாவு உடலில் வீக்கத்திற்கு பங்களிக்கும். அதே நேரத்தில் தினை உள்ளிட்ட முழு உணவுகள் நிறைந்த உணவு ஒட்டுமொத்த வீக்கத்தைக் குறைக்க உதவும்.

மைதாவைத் தவிர்க்கும் போது, இது போன்ற பல நன்மைகள் உங்களுக்கு ஏற்படும். எனவே ஒருமாத காலத்திற்கு மட்டுமில்லாது, வாழ்நாள் முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட மாவுக்குப் பதிலாக பாதாம் மாவு, தேங்காய் மாவு, ஓட்ஸ் மாவு, கினோவா மாவு, கொண்டைக்கடலை மாவு, தினை மாவு அல்லது பழுப்பு அரிசி மாவு ஆகியவற்றைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் பாட்டீல். இது உணவில் பலவிதமான மாற்று உணவுகளைச் சேர்த்துக்கொள்வது, சுத்திகரிக்கப்பட்ட மாவு மீதான உங்கள் நம்பிக்கையை குறைக்கும் அதே வேளையில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுவைகளை வழங்க முடியும் என்கிறார்.



0 Comments:

Post a Comment