Search

ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி.. உடனே அப்ளை பண்ணுங்க!

 விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை மாணவர்களின் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பு ஊதியத்தில் ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறியதாவது, "மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர் நிலையில் 2 காலிப் பணியிடங்களும் (கணிதம்-2), பட்டதாரி ஆசிரியர் நிலையில் 3 காலிப்பணியிடங்களும் (அறிவியல்-2, சமூக அறிவியல்-1), இடைநிலை ஆசிரியர் நிலையில் 37 காலிப்பணியிடங்களும் உள்ளன.

இதற்கு மாதாந்திர தொகுப்பூதியமாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் நிலையில் ரூ.18,000, பட்டதாரி ஆசிரியர் நிலையில் ரூ.15,000, இடைநிலை ஆசிரியர் நிலையில் ரூ.12,000 வழங்கப்படும். மேலும் வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள் (இல்லையெனில்), வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள், இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் பட்டியல் இனத்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பதாரர்களிடமிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் வரும் செப்டம்பர் 8(8.9.2023) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதற்கு பின்பு வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது" என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி கூறியுள்ளார்.



 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment