Search

Benefits of Citrus Fruits : தினமும் உணவில் சிட்ரஸ் பழங்கள்! நீர்ச்சத்து முதல் நோய் எதிர்ப்பு வரை இத்தனை நன்மைகளா?

 

Benefits of Citrus Fruits : தினமும் ஒரு சிட்ரஸ் பழக்தையாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன என்று தெரியுமா? இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

தினமும் பழங்கள் சாப்பிட வேண்டியதன் அவசியத்தை நமது முன்னோர்கள் காலங்காலமாக வலியுறுத்தி வந்துள்ளனர். பழங்களில் எண்ணிலடங்கா ஆரோக்கியமும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. ஆனாலும், சிட்ரஸ் பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுவது ஏன் தெரியுமா?

ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துக்கள்

சிட்ரஸ் பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை ஃப்ளேவனாய்ட்கள் மற்றும் கரோட்டனாய்ட்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை உங்கள் உடலில் உள்ள செல்கள் சேதம் அடையாமல் காக்கின்றன. நாட்பட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்துக்களை தடுக்கிறது. இவற்றை தினமும் உட்கொண்டாலே உடல் ஆரோக்கியம் மேம்படும்.

உடலில் நீர்ச்சத்து பராமரிக்கப்படுகிறது

சிட்ரஸ் பழங்கள் அதிக நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இவற்றை நீர்ச்சத்து நிறைந்த ஸ்னாக்ஸ்களாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நீர்ச்சத்துடன் இருப்பது மிகவும் அவசியம் ஆகிறது.

கேன்சர் தடுப்பு

சில வகை புற்றுநோய்கள் வருவதையும் தடுக்கிறது. குறிப்பாக வாய், வயிறு, உணவுக்குழாய் புற்றுநோய் வருவது ஆகியவற்றில் இருந்த உடலை காக்கிறது.

எடை மேலாண்மை

சிட்ரஸ் பழங்களில் குறைந்தளவு கலோரிகளே உள்ளன. அவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அது உங்களை நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வுடன் வைத்திருக்கிறது. இதனால் எடையும் கூடாமல் காக்கப்படுகிறது. அதிகம் சாப்பிடுவதையும் கட்டுப்படுத்துகிறது.

ஜீரணத்தை அதிகரிக்கிறது

சிட்ரஸ் பழங்களில் உள்ள நார்ச்சத்துக்கள், ஆரோக்கியமான ஜீரணத்தை கொடுக்கின்றன. மலச்சிக்கலை போக்குகின்றன. குடலில் தேவையான நுண்ணுயிர்களை தக்க வைக்கின்றன.

சரும ஆரோக்கியம்

கொலோஜென் உற்பத்திக்கு வைட்டமின் சி தேவைப்படுகிறது. அது உங்கள் சருமத்தை இளமையுடனும் ஆரோக்கியத்துடனும் வைத்திருக்கிறது. சருமத்தின் நிறம் மற்றும் பொலிவுக்கு காரணமாகிறது. வயதான தோற்றத்தையும் குறைக்கிறது.

வைட்டமின் சி சத்து அதிகம்

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்ச், எலுமிச்சை, திராட்சை பழங்களில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. இந்த வைட்டமின்தான் உங்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உங்கள் உடலை தொற்று மற்றும் நோய்களில் இருந்து எதிர்த்து போராட உதவுகிறது.

நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது

உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறனுக்கு உதவுவதில் வைட்டமின் சி சத்து நிறைந்த சிட்ரஸ் பழங்கள் உதவுகின்றன. இது உங்கள் உடல் காய்ச்சல் மற்றும் நோய்தொற்றுகளில் இருந்து விடுபட உதவுகிறது. சளி இருக்கும் காலத்தை குறைக்கிறது. ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவுகிறது.


0 Comments:

Post a Comment