Search

Badness of Coffee : காலையில் காஃபியுடன் விழிப்பவரா? அச்சச்சோ இத்தனை ஆபத்துக்கள் அதில் உள்ளதா?

 

Badness of Coffee : காலையில் காஃபியுடன் உங்கள் நாளை துவங்குவீர்கள் என்றால், அந்த பழக்கத்தை உடனடியாக தூக்கி எறிந்துவிடுங்கள். ஆரோக்கியமான வழியில், கஃபைன் இல்லாமல் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

தினமும் காஃபி குடிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது கிடையாது. ஏசியன் விளையாட்டு மருத்துவ ஆராய்ச்சி பத்திரிகையில் 2022ம் ஆண்டு வெளியான ஆய்வறிக்கையில், கலந்துகொண்ட பங்கேற்பாளர்களை வைத்து பார்க்கும்போது, அவர்களுக்கு காலையல் காஃபி குடித்தவுடன் பயம், பதற்றம் அதிகரிப்பது பதிவு செய்யப்பட்டது. காஃபி இல்லாமல் உங்கள் நாளை எனர்ஜியுடன் துவங்கும் வழிகள்.

காலையில் காஃபி குடிப்பதால் ஏற்படும் பிரச்னைகள்

காஃபி ஒருவரை சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. அதனால்தான் பெரும்பாலானோர் அதை உபயோகிக்கிறார்கள். அது மூளையில் அடினோசின் என்ற வேதிப்பொருளின் நலன்களை தடுத்து, அட்ரினலைன் வெளியேற்றத்தை அதிகரிக்கிறது. அந்த ஹார்மோன் அதிகப்படியான எனர்ஜியுடன் தொடர்புடையது. இந்த பாதிப்புகள், பயம், பதற்றம் ஆகியவற்றை நீங்கள் வழக்கமாக கெபைஃன் எடுத்துக்கொள்ளும்போது ஏற்படுத்துகிறது.

மன அழுத்த ஹார்மோன்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது

அதிகம் காஃபி எடுத்துக்கொள்ளும்போது, கார்டிசால் என்ற மனஅழுத்த ஹார்மோன்கள் உற்பத்தி அதிகமாகிறது. எனவே கஃபைன் இல்லாத ஹார்மோன்களை சமப்படுத்தும் எனர்ஜி பானங்களை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது

அதிகளவிலான கஃபைன் பொருட்களை உட்கொள்வது, தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது. அதிகம் கஃபைன் எடுத்துக்கொண்டீர்கள் என்றால், அதிகம் பாதிக்கப்படுவீர்கள்.

ஒரு சிலர் சோர்வடைந்துவிடுவார்கள். அவர்களுக்கு காஃபி ஒரு சிறந்த பானமாக நினைக்கிறார்கள். ஆனால், அதற்கு மாற்றாக சில உள்ளன.

ஆரோக்கிமான காலை உணவு

நல்ல காலை உணவு அல்லது பழங்கள், நட்ஸ்களை உங்கள் முதல் உணவாக எடுத்துக்கொள்வது மிக முக்கியமானது. உங்கள் காலை உணவில் கட்டாயம் மாவுச்சத்து, புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இதுபோல் இருப்பது உங்கள் உடலில் ரத்தச்சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. முட்டைகள், பிரட் டோஸ்ட், அவல், இட்லி சாம்பார், தோசை, சட்னி மற்றும் பால் ஆகியவற்றில் ஏதாவது உங்களுக்கு பிடித்ததை எடுத்துக்கொள்ளலாம்.

நீர்ச்சத்தை அதிகரிக்கும் வழிகள்

தண்ணீர் சிறந்தது. அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து எடுத்துக்கொண்டீர்கள் என்றால், அது உங்கள் உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட்களை பெறுவதற்கு உதவுகிறது.

காலையில் நடப்பது

காலை சூரிய ஒளியில் சிறிய நடை செல்வது நல்லது. கண்ணாடிகள் மற்றும் குளிர் கண்ணாடிகள் அணியாமல் சூரிய ஒளி உங்கள் கண்கள் மீது படுவது உங்கள் உடலை உள்ளிருந்து உறுதிப்படுத்தி, உங்களுக்கு தேவையான எனர்ஜியை அளிக்கிறது.

வழக்கமான உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்கொள்வது நல்லது. ஒரு மிதமான உடற்பயிற்சியை தினமும் அரை மணி நேரம் செய்ய வேண்டும். எல்லா நாட்களும் செய்வது நல்லது.

மனஅழுத்தத்தை கையாள்வது

உங்கள் உற்சாகத்தை குறைப்பது அல்லது அதிகரிப்பதில் மனஅழுத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. யோகா, தியானம் செய்யுங்கள். இயற்கையுடன் இணைந்திருங்கள். உங்களால் காஃபியை விட முடியவில்லையென்றால், காஃபி குடித்த அரை மணி நேரத்தில் காலை உணவை உட்கொண்டுவிடுங்கள் அது உங்கள் உடலில் ரத்தச்சர்க்கரை அளவை பராமரிக்க உதவும்.


0 Comments:

Post a Comment