Search

8ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. புதுக்கோட்டையில் அரசு வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!

 புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை சுகாதார மாவட்ட துணை இயக்குனர் அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பணியிடத்துக்கு எம்.சி.ஏ., பிஇ, பிடெக் முடித்த 45 வயதுக்குட்பட்ட ஓராண்டு பணி அனுபவம் கொண்டோர் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியம் ரூ.16,500 வழங்கப்படும்.

ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார கணக்கு உதவியாளர் பணியிடத்துக்கு பிகாம் மற்றும் டேலி முடித்த 35 வயதுக்குள்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ. 16 ஆயிரம் வழங்கப்படும்.

திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடமாடும் மருத்துவ குழு ஓட்டுநர் பணியிடத்துக்கு 8ஆம் வகுப்பு முடித்த 45 வயதுகுட்பட்ட 2 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டோர் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.13 ஆயிரத்து 500 வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு புதுக்கோட்டை அல்லது அறந்தாங்கி சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் செப்டம்பர் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் கதிர்பட பதிவாளர் பணியிடத்துக்கு பிஎஸ்ஸி ரேடியாலஜி முடித்த 45 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.13,500 வழங்கப்படும். அறுவை சிகிச்சை பிரிவு உதவியாளர் பணியிடத்துக்கு 45 வயதுக்குட்பட்ட தொடர்புடைய கல்வி பயின்றோர் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.11,200 வழங்கப்படும்.

சுகாதார பணியாளர், பல்நோக்கு பணியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடங்களுக்கு 8ஆம் வகுப்பு முடித்த 45 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.8,500 வழங்கப்படும்.

இந்த வேலைக்கான விண்ணப்பங்களை நீங்கள் pudukkottai.nic.in. என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 12ஆம் தேதிக்குள் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் வழியாகவோ சமர்பிக்கலாம். முற்றிலும் தற்காலிகமான பணியிடங்கள் என்பதால் எந்த வகையிலும் பணி நிரந்தரம் கோர முடியாது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment