Search

ஓராண்டு படிக்க வைத்து வேலை கொடுக்கும் ஐடிபிஐ வங்கி- ரூ.6.50 லட்சம் வரை சம்பளம் - இளைஞர்களே அப்ளை பண்ணுங்க!

 

மத்திய அரசின் தொழில் வளர்ச்சி வங்கியான  ஐடிபிஐ வங்கி லிமிடெட் (இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி) இளநிலை உதவி மேலாளர் (Junior Assistant Manager) காலிப்பணியடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த ஆள்சேர்க்கை மூலம் சுமார் 600 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள்: 600 

 பணி விபரங்கள்:  

 முக்கியமான நாட்கள்:

செப்டம்பர் 15 முதல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே  அனுப்பப்பட வேண்டும்.

அடிப்படை நிபந்தனைகள்:

பெங்களூரில் இயங்கும் மணிப்பால் கல்வி சேவைகள் பிரைவேட் லிமிடெட் , கிரேட்டர் நொய்டாவில் Nitte ஆகிய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஐடிபிஐ வங்கி, வங்கியியல் மற்றும் நிதியியல் துறையில்  1 ஆண்டு முதுகலை டிப்ளமோ சான்றிதழ் படிப்பை வழங்கி வருகிறது. 9 மாதங்கள் பாடக்கல்வி வாயிலாகவும், 3 மாதங்கள் பயிற்சி வகுப்பாகவும் இருக்கும்.

இந்த முதுகலை படிப்புச் சான்றிதழ் பெற்றவர்கள், அவசியங்கள் அடிப்படையில் இளநிலை உதவி மேலாளர் பணிக்கு நியமிக்கப்படுவார்கள் (Recruitment of Junior Assistant Manager through Admissions to IDBI Bank PGDBF)

ஆண்டு பயிற்சிக் கட்டணம் ரூ. 3 லட்சம் வரை. ஒரேபடியாக இல்லாமல், ஓராண்டிற்குள் தவனை முறையில் செலுத்திக் கொள்ளலாம்.

மாணாக்கர்களுக்கு கல்வி உதவித் தொகையும் அளிக்கப்படுகிறது . 6 மாத பயிற்சி காலத்திற்கு மாதம் ரூ, 5000-ம், இரண்டு மாத பயிற்றுனர் காலத்திற்கு மாதம் ரூ. 15,000-ம் வழங்கப்படும். பயிற்சிக் காலத்திற்க்கு பின்பு நியமிக்கப்படும் இளநிலை உதவி மேலாளர் பதவிக்கு ஆண்டுக்கு ரூ. 6.5 லட்சம் வரை ஊதியமாக வழங்கப்படும்.

கல்வித் தகுதி:  இதற்குவிண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பல்கலைக்கழக மானியக் குழுவால்  அங்கீகரிக்கப்பட்ட உயர்க்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 31.08.2023 அன்று 20-25-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.1000ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், ரூ.200 ஐ விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும். ஆகவே, பொதுப் பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.1000 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும் .

விண்ணப்பம் செய்வது எப்படி?

ஆன்லைன் மூலமாக 15.09.2023 முதல் 30.09.2023  இரவு மணி 11.59 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களை அறிவதற்கான இணையதளம் https://www.idbibank.in/  ஆகும்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment