Search

ஆண்களை பாதிக்கும் பொதுவான நோய்கள் என்ன..? அபாயங்களை குறைப்பது எப்படி.?

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை பெண்களை விட ஆண்கள் சில நேரங்களில் தனித்துவ சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். தவிர சில குறிப்பிட்ட நோய்களுக்கு எளிதில் பாதிக்கப்படுகின்றனர். இந்த அபாயங்களை கருத்தில் கொண்டு நோய்களால் எளிதில் பாதிக்கப்படாமல் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆண்களின் ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தும். இங்கே ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான நோய்கள் பற்றியும், நோய் அபாயங்களை குறைப்பதற்கான வழிகளை பற்றியும் பார்ப்போம்.

கார்டியோவாஸ்குலர் நோய்:

இதய நோய் மற்றும் ஸ்ட்ரோக் உள்ளிட்ட கார்டியோவாஸ்குலர் நோய்கள் ஆண்களிடையே ஏற்படும் மரணத்திற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. உயர் ரத்த அழுத்தம், ஹை கொலஸ்ட்ரால், புகைபழக்கம், உடல் பருமன் மற்றும் உடல் செயல்பாடுகளற்ற உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை போன்ற காரணிகள் இந்த ஆபத்தான நிலைமைகளின் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன. கார்டியோவாஸ்குலர் நோய் ஆபத்தை குறைக்க, ஆண்கள் கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் இங்கே பட்டியலிடப்படுள்ளன.

 • ஆரோக்கியமான உணவுமுறை - ஆண்கள் தங்கள் டயட்டில் ஊட்டச்சத்துக்கள் மிக்க பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், லீன் ப்ரோட்டீன்களை சேர்த்து கொள்ள வேண்டும்.சேச்சுரேட்டட் ஃபேட்ஸ் , கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் உட்கொள்ளலை கட்டுப்படுத்த வேண்டும்.
 • வழக்கமான உடல் செயல்பாடுகள் - ஸ்ட்ரென்த் ட்ரெயினிங் பயிற்சிகளுடன் இணைந்து வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான தீவிரம் கொண்ட ஏரோபிக் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
 • புகை மற்றும் மது - ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மது மற்றும் புகைப்பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் அல்லது கணிசமாக கட்டுப்படுத்த வேண்டும்.
 • ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் - சீரான இடைவெளியில் ஆண்கள் தங்களது ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் லெவலை கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும். இதற்காக வழக்கமான பரிசோதனைகள் மற்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை பின்பற்றுவது அவசியம்.

ப்ராஸ்டேட் கேன்சர்:

ஆண்களை பாதிக்கும் மிக பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாக இருக்கிறது ப்ராஸ்டேட் கேன்சர். இதனை துவக்கத்திலே கண்டறிவது பாதிப்புகளை குறைத்து வெற்றிகரமான சிகிச்சைக்கு உதவும். குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் அல்லது குடும்பத்தில் ஏற்கனவே இந்த வகை கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் ஆண்கள் வழக்கமான பரிசோதனையை கருத்தில் கொள்ள வேண்டும். கூடுதலாக, பின்வரும் நடவடிக்கைகள் இந்த கேன்சர் ஆபத்தை குறைக்க உதவும்:

 • ஆரோக்கியமான எடை - உடல் பருமன் ப்ரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி மூலம் ஆரோக்கியமான எடையை பராமரிக்க முக்கியத்துவம் கொடுங்கள்.
 • சத்தான உணவுகள் - பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த டயட்டை பின்பற்றுங்கள். இதன் மூலம் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் கிடைக்கும். கேன்சர் அபாயம் குறையும்.
 • பதப்படுத்தப்பட்ட உணவுகளை கட்டுப்படுத்துங்கள்- சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும். ஏனெனில் இவை ப்ரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடையவை.
 • ஸ்கிரீனிங் ஆப்ஷன்ஸ் - prostate-specific antigen டெஸ்ட்டிங் போன்ற ப்ரோஸ்டேட் கேன்சர் ஸ்கிரீனிங் சோதனைகளின் நன்மைகள் மற்றும் சாத்திய அபாயங்களை புரிந்து கொள்ள நிபுணர்களை கலந்தாலோசிக்கலாம்.
 • நுரையீரல் புற்றுநோய்:

  ஆண்களிடையே காணப்படும் புகைப்பழக்கம் காரணமாக அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே கேன்சர் அபாயத்தை குறைக்க புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும். கூடுதல் தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்

  • செகண்ட் ஹேண்ட் ஸ்மோக்கிங்கிற்கு வெளிப்படுவதை தவிர்க்க வேண்டும்.
  • தொடர் இருமல், மூச்சுத் திணறல், மார்பு வலி அல்லது விவரிக்க முடியாத எடை இழப்பு உள்ளிட்ட அறிகுறிகளை பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை அனுபவிக்க நேர்ந்தால் உடனடியாக சுகாதார நிபுணரை சந்திக்க வேண்டும்.

  நீரிழிவு நோய்:

  பெண்களை விட ஆண்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த நிலையை சரியாக நிர்வகிக்கப்படாவிட்டால் கடும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே நீரிழிவு அபாயத்தைக் குறைக்க ஆரோக்கியமான எடையை பராமரிப்பது, சர்க்கரை பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை கட்டுப்படுத்துவது, ரத்த சர்க்கரை அளவை சீரான இடைவெளியில் பரிசோதித்து கொள்வது உள்ளிட்டவற்றை பின்பற்றுவது அவசியம்.

 • ஆண்கள் தங்கள் ஆரோக்கியத்தை பற்றி எச்சரிக்கையாக இருப்பது தீவிர பாதிப்பு ஏற்படுத்தும் நோய்களின் அபாயங்களை தவிர்த்து கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கும். தவிர வழக்கமான சோதனைகள் மற்றும் எச்சரிக்கை அறிகுறிகளைப் புரிந்து கொள்வது தங்கள் நல்வாழ்வை ஆண்கள் உறுதிப்படுத்தி கொள்ள சிறந்த வழி.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment