Search

இதயத்தை பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும்..?

 மனித உடலில் இதயம் மிக முக்கியமான உறுப்பு. உண்மையில், இது உடலின் மிகவும் ஆற்றல் மற்றும் கடினமாக உழைக்கும் உறுப்பு ஆகும். ரத்த நாளங்கள் வழியாக உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தை கொண்டு செல்வது தான் இருதயத்தின் முக்கிய வேலை. உடலில் ஓய்வின்றி எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் உறுப்பும் இதுவாகும்.

இதய ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது என்பதை மறுப்பதற்கில்லை. சரியான உணவுகளைத் தேர்ந்தெடுப்பதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை நம்மால் பாதுகாப்பான வரம்பிற்குள் வைத்திருக்க முடியும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல உணவுகள் உள்ளன.

இந்த வேளையில், இதயத்தை குறித்த சில முக்கிய தகவல்களை அறிந்து வைத்திருப்பது அவசியம். இதில் கூறப்படும் சிலத் தகவல்கள் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.

இதயத்தின் எடை : 

ஒரு ஆண் இதயத்தின் சராசரி எடை 300 கிராம் முதல் 350 கிராம் வரை இருக்கும். அதுவே, ஒரு பெண் இதயத்தின் சராசரி எடை 250 கிராம் முதல் 300 கிராம் வரை இருக்கும்.

இதயத் துடிப்பு :

சராசரியாக வளர்ந்த நபரின் இதயம் நிமிடத்திற்கு 70 முதல் 80 தடவை துடிக்கும். பொதுவாக, வளர்ந்தோரில் 60 முதல் 100 வரை இயல்பான துடிப்பு எனக் கருதப்படுகின்றது.

இதயம் நன்றாகச் செயல்பட்டு ஆக்ஸிஜன், ரத்தம், தாதுப் பொருட்களை உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்லக் கூடிய வேலையை இயல்பான இருதயத் துடிப்பு உணர்த்துகிறது.

ரத்த பரிமாற்றம் :

இதயம் என்பது நுரையீரலுக்கு இடையில், மார்பின் நடுவில், மையத்துக்குச் சற்று இடதுபுறமாக அமைந்திருக்கும். ஒவ்வொரு நாளும் இதயம் சுமார் 100,000 முறை துடிக்கிறது. மேலும், 7,570 லிட்டர் ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு அனுப்பும் வேலையை செய்கிறது.

இதயம் குறித்து மேலும் சில சுவாரஸ்யமான தகவல்கள் : 

  • அதிகமான மகிழ்ச்சி, அதிகம் சிரிப்பவர்களின் ரத்த நாளங்கள் சரியாக வேலை செய்யும். மற்றவரை விட இவர்களின் உடலில் 20% அதிக ரத்தத்தை இதயம் பம்ப் செய்கிறது.
  • அதிகளவில் உடலுறவு கொள்வது இதயத்திற்கு நல்லதாக பார்க்கப்படுகிறது. அதிக உடலுறவு கொள்பவர்களுக்கு இதயம் சார்ந்த நோய்களுக்கான வாய்ப்புகள் குறைவு என மருத்துவ ஆய்வுகள் தெளிவுப்படுத்துகின்றன.
  • ஒரு வாகனத்தை நிலாவிற்கு கொண்டு சென்று, பின் பூமிக்கு கொண்டு வருவதற்கு தேவைப்படும் ஆற்றலை, ஒரு நபரின் இதயம் தனது ஆயுள்காலத்தில் உருவாக்குகிறது.
  • சாகும் வரை ஒரு விநாடி கூட ஓய்வில்லாமல் உழைப்பது இதயம் தான்.
  • பொதுவாக, திங்கள்கிழமைகளில் தான் அதிகமான நபர்களுக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது என பகுப்பாய்வு முடிவுகளின் தரவுகள் கூறுகின்றன.
  • ஒரு வீட்டில் உள்ள மின்சார வயரிங் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உடலில் முக்கியமாக திகழ்கிறது இருதயம். இதன் வேலையை நிறுத்திவிட்டால், மனிதனால் உயிர்வாழ முடியாது.

0 Comments:

Post a Comment