தொப்பை கொழுப்பை அகற்றுவது எப்படி: தற்போது பெரும்பாலானோர் தொங்கும் தொப்பையால் அவதிப்படுகின்றனர். வயிற்றில் படிந்துள்ள கொழுப்பை வெளியேற்ற அனைவரும் விரும்புகின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில், சிலர் ஜிம், உடற்பயிற்சி செய்து தொப்பையை குறைக்க முயற்ச்சிக்கின்றனர், இருப்பினும் நினைத்த பலனை பெறுவதில்லை. எனவே வாருங்கள், தொப்பையை குறைக்க அனைவரும் பின்பற்ற வேண்டிய சில டிப்ஸ்களை இன்று கொண்டுவந்துள்ளோம், இதன் மூலம் நீங்கள் விருபியா பலனை பெற முடியும்.
தொப்பை கொழுப்பை போக்க இந்த குறிப்புகளை பின்பற்றவும்
இடைவெளி எடுத்து உணவை உண்ணுங்கள்
பெரும்பாலான மக்கள் ஒரு நாளைக்கு 3 முறை உணவு சாப்பிடுகிறார்கள். இதில் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு ஆகும். ஆனால் நீங்கள் உங்கள் தொப்பையை குறைக்க விரும்பினால், ஒரு நாளைக்கு 3 முறைக்கு மேல் சாப்பிடுவதற்கு பதிலாக, சிறிய சிறிய இடைவெளியில் உணவை பிரித்துக்கொண்டு, அதாவது 6 முறை சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தொப்பை கொழுப்பை குறைக்க முடியும்.
குறைந்தது 30 நிமிட உடற்பயிற்சி
தொப்பையை குறைக்க, தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதற்கு, நீங்கள் ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தொப்பையை போக்கலாம்.
உணவு உண்ணும் முன் தண்ணீர் குடிக்கவும்
பலருக்கு உணவு உண்ணும் போது தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளது, ஆனால் அப்படி செய்வது தவறு, ஏனெனில் அவ்வாறு செய்வது செரிமான செயல்முறையை கெடுக்கும். அதனால் தான் உணவு உண்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டும். இதை செய்வதன் மூலம் தொப்பை கொழுப்பை போக்கலாம்.
No comments:
Post a Comment