Search

கை விரல்களில் அடிக்கடி சொடக்கு எடுத்தால் இந்த எலும்பு பிரச்சனை வருமா..? உஷார்..!

 பலருக்கும் கை விரல்களை நெட்டி முறித்து சொடக்கு எடுப்பது பொதுவான பழக்கமாக இருக்கும். இதை சிலர் வேலைக்கு இடையே செய்வது புத்துணர்ச்சி தருவது போல் உணர்வார்கள். சிலர் டென்ஷனாக இருக்கும்போது கை விரல்களை சொடக்கு எடுப்பதை பழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால் உங்களுக்கு புத்துணர்ச்சி தரும் இந்த பழக்கம் உங்களுக்கே ஆபத்தாக மாறலாம் என சில கருத்துகள் உள்ளன.. இது உண்மையா..?

நீங்கள் அவ்வாறு சொடக்கு எடுக்கும்போது அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என என்றைக்காவது யோசித்ததுண்டா..?

நாம் விரல்களில் சொடக்கு எடுக்கும்போது விரல் மூட்டுகளில் இடைவெளியை உருவாகிறது. அதாவது மூட்டுகளுக்கு இடையே உள்ள திரவம் உருவாக்கிய வாயுக் குமிழ்களை (gas bubbles) உடைப்பது போன்றதாகும். ஒரு விரலில் ஒரு முறை மட்டுமே சொடக்கு எடுக்க முடியும். உடனே உடைக்க நினைத்தால் சொடுக்கு சத்தம் கேட்காது. ஏனெனில் அந்த கேஸ் பப்புள் மூட்டுகளில் மீண்டும் உருவாக சில மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

இவ்வாறு விரல்கலில் சொடக்கு எடுப்பது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இருப்பினும் சிலர் எடக்கு மடக்காக அல்லது பலமான அழுத்தத்துடன் சொடக்கு எடுத்து மூட்டு இடம் மாறியதாகவும், தசை நார்களில் காயம் ஏற்பட்டதாகவும் அறிக்கைகள் உள்ளன. ஆனால் இது மிகவும் அரிதாக நிகழக்கூடியதாக சொல்லப்படுகிறது.

சொடக்கு எடுத்தல் எப்படி எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது..?

கலிஃபோர்னியாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனக்கு தானே இந்த பரிசோதனையை செய்து ஆய்வு அறிக்கை தயார் செய்துள்ளார். அதில் அவர் இவ்வாறு நாம் சொடக்கு எடுப்பது எந்த வகையிலும் பாதிக்காது என்று கூறியுள்ளார். அவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒரு கையில் மட்டும் சொடக்கு எடுத்துள்ளார். தோன்றும்போதெல்லாம் செய்திருக்கிறார். பின் அவர் கைகளை எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் எந்தவித மாற்றங்களும் இல்லை. விரல்களுக்கு இடையிலோ, கை எலும்புகள், மூட்டுகளிலோ எந்தவித மாற்றமும் இல்லை. இதே பதிலை மிகப்பெரிய ஆய்வும் வெளியிட்டுள்ளது.

மிகவும் அரிதான சில வழக்குகள் நெட்டி முறித்ததால் நிகழ்ந்ததாக வந்துள்ளது உண்மைதான் என்றாலும் அது சொடக்கு எடுக்கும் பழக்கத்தால் இல்லை என்கிறது. அவர் எப்படி அழுத்தம் கொடுத்து சொடக்கு எடுத்தார் என்பது அவர் சொடக்கு எடுக்கும் டெக்னிக்கை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது என்கிறார்.

1990 ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வு 226 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. அதில் சொடக்கு எடுப்பதை பழக்கமாகக் கொண்ட 74 பேரை ஆய்வு செய்துள்ளது. அப்போது அவர்களின் விரல்களில் பிடிப்பின் பலம் குறைவாகவும், கை வீக்கம் இருந்துள்ளது. மற்றவர்களுக்கு அதே கீழ்வாதம் பாதிப்பு மற்றும் பிரச்சனை இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

சொடக்கு எடுக்கும்போது சத்தம் எப்படி வருகிறது..?

சொடக்கு எடுக்கும் போது எப்படி சத்தம் வருகிறது என்பதற்கு உறுதியான காரணங்கள் கண்டுபிடிக்கவில்லை. எலும்புகளுக்கு கீழே உள்ள முழங்காற்சில்லு உரசும் போது சத்தம் வரலாம் என்று கூறப்படுகிறது.

இறுதியாக சொடக்கு எடுப்பதால் எந்த பாதிப்பு இல்லை. அதேசமயம் உங்கள் அன்புக்குரியவர் அடிக்கடி சொடக்கு எடுக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என நினைத்தால் எலும்புகள் பாதிப்படையும் என்று சொல்வதே சரியாக இருக்கும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment