மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில்‌ ஒப்பந்த செவிலியர் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில்‌ காலியாக உள்ள ஒப்பந்த செவிலியர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 25.04.2023 அன்று மாலை 05.45 மணிக்குள்‌ தங்களுடைய புகைப்படத்துடன்‌ கூடிய விண்ணப்பம்‌ மற்றும்‌ தகுதி சான்றுகளுடன்‌ விண்ணப்பிக்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

இராசாசி மருத்துவமனை காலிப்பணியிடங்கள்:

ஒப்பந்த செவிலியர் பதவிக்கு என 14 பணியிடங்கள் காலியாக உள்ளன.

செவிலியர் வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

செவிலியர்‌ பட்டய படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர்‌ பட்டம்‌ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இளங்கலை செவிலியர்‌ பட்டம்‌ மற்றும்‌ தமிழ்நாடு செவிலியம்‌ மற்றும்‌ தாதியம்‌ குழுமத்தில்‌ பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 25.04.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

0 Comments:

Post a Comment