அஜீரண பிரச்சனையை ஓட விரட்ட புதினா இந்த வகையில் பயன்படுத்தவும்

 வயிற்றில் வலி ஏற்படுவதற்கான காரணம், வாயு, மலச்சிக்கல் தான் என பலர் நினைக்கிறார்கள். ஆனால் அஜீரணத்தின் காரணமாகவும் வயிற்று வலி  இருக்கலாம். சொல்ல போனால் ஆஜீரணம் பல வயிற்று பிரச்சனைகளையும், உடல் நல பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. 



அத்தகைய சூழ்நிலையில், இந்த சிக்கலை நீக்க புதினா உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அஜீரண பிரச்சனையை நீக்க புதினா இலைகள் சிறந்த மருந்தாக செயல்படும். இது தவிர, புதினா இலைகள் வயிற்றில் உள்ள வலியை நீக்கவும், அஜீரண பிரச்சனையை சமாளிக்கவும் புதினா உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புதினாவில் உள்ள சத்துக்கள் வயிற்றை பல பிரச்சனைகளில் இருந்து காக்கும்.

அஜீரணத்தை போக்க புதினாவை எப்படி பயன்படுத்துவது என்பது தான் இப்போதைய கேள்வி. எனவே இன்று அஜீரணத்திற்கு புதினாவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இன்று இந்த கட்டுரையின் மூலம்  அறிந்து கொள்ளலாம்.


அஜீரணத்தை போக்கும் புதினா நீர் தயாரிக்கும் வழிகள்

1. முதலில் நீங்கள் அடுப்பில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, தண்ணீரைக் கொதித்த பிறகு புதினா இலைகளை அதில் போடவும். இப்போது 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து, தண்ணீரை வடிகட்டி, எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும்

2. மற்றொரு வழி, 6 முதல் 7 இலைகளைக் கொடுத்து, அவற்றைக் கழுவி நன்கு நசுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். இப்போது இலைகளை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும். இப்படி செய்வதன் மூலமும் அஜீரண பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

3. மூன்றாவது வழி, புதினா இலைகளை நன்கு கழுவி உலர்த்தி, அதில் பொடி செய்து கொள்ளவும். இப்போது அந்த பொடியை தொடர்ந்து பயன்படுத்துங்கள். அதனை அப்படியே சாப்பிடலாம். அல்லது வெதுவெதுப்பான  நீரில் கலந்து சாப்பிடலாம் இவ்வாறு செய்வதன் மூலம் அஜீரண பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
Click here to join whatsapp group for daily health tip 

0 Comments:

Post a Comment