ECIL CS Trainee வேலைவாய்ப்பு 2023 – உதவித்தொகை: ரூ. 15,000/- || தேர்வு கிடையாது!

 

ECIL CS Trainee வேலைவாய்ப்பு 2023 – உதவித்தொகை: ரூ. 15,000/- || தேர்வு கிடையாது!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) ஆனது CS Trainee பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 31/05/2023 க்குள் இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ECIL காலிப்பணியிடங்கள்:

CS Trainee பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ECIL கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor’s degree in law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,000/- உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

ECIL CS Trainee தேர்வு செயல் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, அனுபவம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ECIL பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 31/05/2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf



சுகர் இருக்கவங்க சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சாப்பிடலமா..? நிபுணர்கள் கருத்து..!

 

டைப் 2 நீரிழிவு மிகவும் ஆபத்தான நோய் என்பது அனைவரும் அறிந்ததே... ஏனெனில் சர்க்கரை நோயை மருந்துகளால் முற்றிலும் ஒழிக்க முடியாது. அதேசமயம் வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் மற்றும் உணவு கட்டுப்பாடுகள் மூலமே அதை கட்டுக்குள் வைக்கமுடியும். அதனால்தான் நீரிழிவு நோயாளிகள் உணவு மற்றும் பானங்களை அதிகம் தவிர்க்க வேண்டும். எந்தப் பொருளைச் சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை அதிகரிக்கிறது, எந்தப் பொருள் சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கிறது என்பதை சர்க்கரை நோயாளிகள் எப்போதும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா, வேண்டாமா என்ற குழப்பம் பல சமயங்களில் உள்ளது. பல நூற்றாண்டுகளாக வெல்லம் இனிப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. கரும்பிலிருந்து வெல்லம் கைமுறையாக தயாரிக்கப்படுகிறது. அதனால்தான் வெல்லம் சாப்பிடுவதால் சர்க்கரை அதிகரிக்காது என்று சிலர் நம்புகிறார்கள். அதேசமயம், இதில் இனிப்பு அதிகம் உள்ளதால், சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் என்று சிலர் கூறுகின்றனர்.

வெல்லம் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். வெல்லம் சர்க்கரைக்கு சிறந்த மற்றும் ஆரோக்கியமான மாற்றாகும். வெல்லத்தில் இரும்பு, மெக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. ஆர்கானிக் வெல்லம் எப்பொழுதும் இரசாயனமற்றதாகவே இருக்கும், எனவே சாதாரண வெல்லத்தை விட ஆர்கானிக் வெல்லம் பல நன்மைகளைக் கொண்டுள்ளது.

சர்க்கரை நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா..? Healthyfem ஹெல்த் இணையதளத்தின் படி, நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு சமைக்கும்போது, ​​செயற்கை இனிப்புக்குப் பதிலாக இயற்கை இனிப்பானைப் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அனைத்து இயற்கை இனிப்புகளும் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த வழி என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. பதப்படுத்தி தயாரிக்கப்படும் வெள்ளைச் சர்க்கரையை விட ஆர்கானிக் பொருட்களால் செய்யப்பட்ட வெல்லம் சிறந்தது.

வெள்ளை சர்க்கரையைப் போலன்றி, ரசாயனங்கள் மற்றும் பிற பொருட்கள் ஆர்கானிக் வெல்லத்தில் சேர்க்கப்படுவதில்லை. அதேசமயம் அதை அளவாக பயன்படுத்தினால்தான் அதன் நன்மையை முழுமையாக பெற முடியும். காரணம், 100 கிராம் வெல்லத்தில் 98 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. அதே நேரத்தில் இது 383 கலோரி ஆற்றலை வழங்குகிறது.

100 கிராம் சர்க்கரையில் 100 கிராம் கார்போஹைட்ரேட் காணப்படுகின்றது. அதாவது, சர்க்கரையுடன் ஒப்பிடும்போது வெல்லத்தில் இரண்டு கிராம் குறைவான கார்போஹைட்ரேட் மட்டுமே காணப்படுகிறது. எனவேதான் நீரிழிவு நோயாளிகளும் வெல்லம் சாப்பிட பரிந்துரைக்கப்படுவதில்லை.

அப்படியானால் என்ன சாப்பிட வேண்டும்..? சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பு உணவின் மீது நாட்டம் அதிகரித்தால், இஞ்சி, துளசி, இலவங்கப்பட்டை போன்ற மூலிகை பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் அடிக்கடி அறிவுறுத்துகிறார்கள். இவை அனைத்திலும் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிகவும் குறைவு. இது தவிர, ஸ்டீவியா செடியின் இலைகள் (இதை சர்க்கரை துளசி, சீனித்துளசி என்றும் அழைப்பார்கள்) சாப்பிடலாம். இதில் கிளைசெமிக் குறியீடும் மிகக் குறைவு. அதேபோல் இனிப்பு பழங்களையும் உட்கொள்ளலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இரசாயனம் மூலமாக பழுக்க வைத்த மாம்பழங்களால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா..?

 கோடைகால சீசனில் மாம்பழங்கள் பெருமளவில் விற்பனைக்கு வருகின்றன. மக்களின் அதிகப்படியான தேவைகளை பூர்த்தி செய்ய மாங்காய்களை கூடிய விரைவில் பழுக்க வைத்து உடனுக்குடன் விற்பனைக்கு கொண்டு வர வியாபாரிகள் நினைக்கின்றனர். இதனால், இயற்கையாக மாம்பழங்களை பழுக்க வைக்காமல், துரிதமாக பழுக்கும் வகையில் ரசாயனத்தை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை இங்கே பார்க்கலாம்.

பொதுவான விளைவுகள்:

ரசாயனம் மூலமாக பழுக்க வைத்த மாம்பழங்களை சாப்பிடுவதால் வாந்தி, வயிற்றுப்போக்கு, கடுமையான பலகீன உணர்வு, நெஞ்செரிச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். சிலருக்கு ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு ஏற்படலாம். மாம்பழத்திற்காக சேர்க்கப்படும் ரசாயனங்கள் நம் உடலில் சேரும்போது சருமத்தில் புண் உண்டாகலாம். உணவை விழுங்க முடியாமல் தொண்டையில் வலி ஏற்படலாம்.

நரம்பு பிரச்சினை மற்றும் இதர பின்விளைவுகள்:

ரசாயன மாம்பழங்களால் ஏற்பட கூடிய நேரடியான பின் விளைவுகள் மட்டுமன்றி இருமல், மூச்சு சுவாச பிரச்சினை போன்றவை ஏற்படலாம். இதுபோன்ற தொந்தரவுகள் ஏற்பட்டால் தாமதம் இல்லாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

ரசாயன மாம்பழங்களால் நம் திசுக்களுக்கு போதுமான அளவில் ஆக்ஸிஜன் சப்ளை நடக்காது. இதனால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறையத் தொடங்கும். இதனால் நரம்புகளில் பிரச்சினை ஏற்பட்டு கால்களில் உணர்வின்மை ஏற்படும்.

என்னென்ன ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது?

இயற்கையாக மாங்காய்களை பழுக்க வைத்தால் நீண்டகாலம் எடுத்துக் கொள்கிறது என்பதாலேயே ரசாயனங்களை வியாபாரிகள் பயன்படுத்துகின்றனர். கால்சியம் கார்பைடு, எதீபோன் போன்ற ரசாயனங்களை பயன்படுத்தினால் மாங்காய்கள் துரிதமாக பழுத்து விடும். அதேபோல ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ரசாயனங்களையும் பயன்படுத்துகின்றனர்.

எப்படி கண்டறிவது.!!

மாம்பழம் எந்த நிறத்தில் இருந்தாலும் இயற்கையாக பழுக்க வைத்த பழங்களில் அதன் நிறம் மங்கலாக இருக்கும். ஆனால், செயற்கையாக பழுக்க வைத்த பழங்களில் கண்ணை பறிக்கும் வகையில் நிறம் பளீரென்று இருக்கும். இயற்கையாக பழுத்த மாம்பழங்களில் மணம் வீசும் மற்றும் அதன் சுவை அலாதியாக இருக்கும்.

ஆனால், செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களில் எந்தவித மணமும் வீசாது மற்றும் சுவையும் இருக்காது. சீசன் இல்லாத காலங்களில் மாம்பழங்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். பழங்களை கையில் எடுத்து பார்கின்ற போது கனிந்த தோற்றம் ஏற்படாமல் தடிமனான வகையில் கல் போன்று இருக்கும் பழங்கள் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்டதாக இருக்கலாம்.

அக்கம், பக்கத்து வீடுகள், நண்பர்கள், உறவினர்கள் போன்றவர்களின் வீடுகளில் விளைந்த மாங்காய்களை நேரடியாக விலைக்கு வாங்கி அவற்றை வீட்டிலேயே பழுக்க வைத்து சாப்பிடலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

RITES நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

RITES நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் காலியாக உள்ள Team Leader பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

RITES நிறுவன காலிப்பணியிடங்கள்:

Team Leader பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது, 01.06.2023 தேதியின் படி, அதிகபட்சம் 63 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Leader கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து Degree in Civil/ Mechanical minimum Engineering/ Masters in Ocean Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.80,000/- முதல் ரூ.2,20,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

NPCIL நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – 96 Apprentices காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க !

 

NPCIL நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – 96 Apprentices காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க !

Trade Apprentices பணியிடங்களை நிரப்ப நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 96 பணியிடங்கள் காலிக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 25.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NPCIL Apprentice வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Trade Apprentices பதவிக்கு என மொத்தம் 96 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அங்கீகரிக்கப்பட்ட பள்ளியிலிருந்து 8 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 10+2 கல்வி முறையின் கீழ் 10 ஆம் வகுப்பு தேர்வில் அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் ITI யில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • தேசிய அல்லது மாநில சான்றிதழ் பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச உதவித்தொகை ₹7,700/- (ஒரு வருட ஐடிஐ படிப்பிற்குப் பிறகு ஈடுபட்டவர்களுக்கு), ₹8,855/- (ஐடிஐ படிப்பில் இரண்டு ஆண்டுகள் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு) வழங்கப்பட உள்ளது.
  • Apprentices பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 25.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பை தவற விடமால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    Trade Apprentices சம்பள விவரம்:

    தேசிய அல்லது மாநில சான்றிதழ் பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச உதவித்தொகை ₹7,700/- (ஒரு வருட ஐடிஐ படிப்பிற்குப் பிறகு ஈடுபட்டவர்களுக்கு), ₹8,855/- (ஐடிஐ படிப்பில் இரண்டு ஆண்டுகள் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு) வழங்கப்பட உள்ளது.

    NPCIL Apprentices விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 25.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    Download Notification 2023 Pdf

    Official Site




Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

IIT Madras- ல் புதிய வேலைவாய்ப்பு 2023 – ரூ.15 லட்சம் ஆண்டு ஊதியம் || முழு விவரங்களுடன்!

 

IIT Madras- ல் புதிய வேலைவாய்ப்பு 2023 – ரூ.15 லட்சம் ஆண்டு ஊதியம் || முழு விவரங்களுடன்!

IIT Madras ஆனது Senior Manager- Projects Deployment பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Master’s degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IIT Madras காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Manager- Projects Deployment பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Senior Manager கல்வி தகுதி:

Master’s degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள், டிகிரி தேர்ச்சியுடன் 7 முதல் 10 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Senior Manager ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.12 முதல் ரூ.15 லட்சம் ஆண்டு ஊதியம் வழங்கப்படும்.

IIT Madras தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Shortlisted செய்யப்பட்டு written / skill test / interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.06.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

BECIL ஆணையத்தில் Data Entry Operator வேலை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

BECIL ஆணையத்தில் Data Entry Operator வேலை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

BECIL ஆனது Office Assistant, Data Entry Operator காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 26 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BECIL காலிப்பணியிடங்கள்:

Office Assistant, Data Entry Operator பணிக்கென 26 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Office Assistant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் 12ம் வகுப்பு / Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BECIL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 45 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Office Assistant ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு BECIL-ன் நிபந்தனைகளின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BECIL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.05.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் 26.05.2023ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும்.

Download Notification PDF 

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


IDBI வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான 1036 காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.34,000/-

 

IDBI வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான 1036 காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.34,000/-

இந்திய தொழில்துறை மேம்பாட்டு வங்கி ஆனது தற்போது Executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 1036 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 24.04.2023 முதல் 07.06.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

IDBI வங்கி காலிப்பணியிடங்கள்:

ஒப்பந்த அடிப்படையில் Executive பதவிக்கு என மொத்தம் 1036 பணியிடங்கள் காலியாக உள்ளன.

IDBI Executive வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் மே 2, 1998 முதல் மே 1, 2003க்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து எதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வங்கி பணிக்கான சம்பள விவரம்:
  • 1 year – ரூ.29,000/-
  • 2nd year – ரூ.31,000/-
  • 3rd Year – ரூ.34,000/-
  • தேர்வு செயல் முறை:
    • Online Test (OT)
    • Document Verification (DV)
    • Pre Recruitment Medical Test (PRMT)
    விண்ணப்பிக்கும் முறை:
    • படி-I: IDBI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை @idbibank.in கிளிக் செய்யவும்
    • படி-II: முகப்புப் பக்கத்தில், Careers >> Current Openings என்பதைக் கிளிக் செய்யவும்
    • படி-III: “Recruitment of Executive 2023-24” என்ற அறிவிப்பை கிளிக் செய்யவும்.
    • படி-IV: இப்போது “Apply Online” என்பதைக் கிளிக் செய்யவும்.
    • படி-V: விண்ணப்பப் படிவத்தில் உங்கள் தனிப்பட்ட மற்றும் கல்வி விவரங்களை சரியாக உள்ளிடவும்.
    • படி-VI: விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க அணுகக்கூடிய விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
    • படி-VII: இறுதியாக விண்ணப்பத்தை சமர்ப்பித்து எதிர்கால குறிப்புக்காக பதிவிறக்கவும்.

    Download Notification 2023 Pdf
    Apply Online

B.com படித்தால் என்ன வேலை கிடைக்கும்? வணிகவியல் துறை தரும் வேலைவாய்ப்புகள் இதோ!

 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் கல்லூரியில் வணிகவியல் துறையை (Commerce)தேர்ந்தெடுத்து படித்தால் என்னென்ன வேலை வாய்ப்புகளை பெற முடியும்என்பதை விளக்குகிறார் கன்னியாகுமரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியர் மற்றும் துறை தலைவர் முனைவர் ஏஞ்சலின் ஷீபா ஆல்பெர்ட்

“வணிகவியல் துறை என்பது பல்வேறு வாய்ப்புகளை உருவாக்குகிறது. இதை படித்த பின்னர் கணக்கியல், நிதி நிர்வாகம், வரி தொடர்பான விவரங்கள், தொழில் நிர்வாகம், மற்றும் தொழில் முனைவோராகவும் வர முடியும்.

இதனுடன் சேர்த்துவருமான வரி , தொழில் சட்டம் மற்றும் கம்பெனி சட்டம் ஆகிய பாடங்களையும் மாணவர்கள் பயில்வதன்மூலம் வணிகவியல் பயிலும் மாணவர்கள் நிறைய திறமைகளை பெறுகிறார்கள்.மேலும் பல துறைகளில் வாய்ப்பையும் பெறுகிறார்கள்.

மாணவர்கள் இந்த துறையின் மூலம் கணக்காளராக மற்றும் வங்கியில் வங்கி அதிகாரியாக மற்றும் நிதி நிறுவனங்களில் கணக்காளராக, ஆடிட்டராக, வரி ஆலோசகராக, நிதி ஆலோசகராக என பல வேலை வாய்ப்புகள் உள்ளன.


மேலும், மாணவர்கள் தொழில் மேலாண்மை என்னும் பாடமும் பயில்வதால் வேலை கிடைக்காத மாணவர்கள் சொந்த தொழிலை தொடங்கலாம். இல்லையெனில் அவர்கள் ஒரு தொழில் தொடங்கும் ஆலோசகராக பனி புரியலாம்.மேலும் அரசு வேலைக்கு செல்ல விரும்பும் மாணவர்கள் தேர்வுகள் எழுதி அக்கௌன்ட் அலுவலராக பணி புரியலாம்.

வணிகவியல் முடிக்கும் மாணவர்களுக்கு சிறந்த அடிப்படையை அவர்கள் வாழ்வில் அளிக்கிறது. மேலும், பணி புரிய நல்ல அடிப்படையையும் அளிக்கிறது என கூறினார்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

IT வேலை உங்கள் கனவா? Accenture நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை || முழு விவரங்களுடன்!

 

IT வேலை உங்கள் கனவா? Accenture நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை || முழு விவரங்களுடன்!

Accenture நிறுவனமானது அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Advertising Sales Rep Associate பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Accenture காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Advertising Sales Rep Associate பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Advertising Sales Rep Associate கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Accenture வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Advertising Sales Rep Associate முன் அனுபவம்:

1 முதல் 3 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணி புரிந்த முன் அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Accenture ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

Advertising Sales Rep Associate தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


மத்திய புலனாய்வுப் பணியகத்தில் புதிய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பியுங்கள்!

 

மத்திய புலனாய்வுப் பணியகத்தில் புதிய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பியுங்கள்!

Central Bureau of Investigation ஆனது Additional Legal Advisor பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

Central Bureau of Investigation ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Additional Legal Advisor பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Degree in Law தேர்ச்சி பெற்ற மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். தகுதியானவர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 60 நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் உதவித்தொகையுடன் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் உதவித்தொகையுடன் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் ஆனது NAPS ன் கீழ் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Electrician பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

TNSTC காலிப்பணியிடங்கள்:

Electrician பணிக்கென காலியாக உள்ள 50 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Electrician கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TNSTC வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Electrician ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.6,000/- முதல் ரூ.7,000/- வரை ஊதியமாக (உதவித்தொகை) வழங்கப்படும்.

TNSTC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

வாட்டி வதைக்கும் வெயிலுக்கு நடுவே உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 5 உணவுகள்.!

 சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு மத்தியில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தோடு சேர்த்து, நம்முடைய செரிமான அமைப்பையும் ஆரோக்கியமாக பராமரிப்பதும் மிகவும் அவசியம். ஏனென்றால் கோடைகாலம் நம்முடைய குடல் ஆரோக்கியத்தை பாதிக்க கூடும்.

அடிக்கும் வெயிலுக்கு செயற்கை பொருட்கள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் கொண்ட குளிர்ந்த உணவுகளை சாப்பிட பலரும் விரும்புவார்கள். ஆனால் இவை குடல் ஆரோக்கியத்திற்கு தீமைகளை ஏற்படுத்துகின்றன. எனவே இந்த ஹாட் சீசனில் நீங்கள் செய்ய வேண்டியது செயற்கை உணவு பொருட்கள் மற்றும் வழக்கமான தானியங்களுக்கு பதில் கோடை சீசனுக்கு ஏற்ற உணவுகளை டயட்டில் சேர்ப்பது தான்.

சரியான ப்ரோபயாடிக்ஸ், மோர் உள்ளிட்ட பலவற்றை டயட்டில் சேர்ப்பது குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்கும். உங்கள் குடல் ஆரோக்கியத்தை இந்த கோடையில் சிறப்பாக வைக்க உதவும் சில எளிய உணவுகள் இங்கே...

முழு தானியங்கள்: வழக்கமாக நீங்கள் பருப்பு சேர்த்து செய்யும் உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்றாலும், கோடை காலத்தில் நீங்கள் வெப்பத்தை தணிக்க கூடிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அந்த வகையில் Whole grains எனப்படும் முழு தானியங்கள் உடலுக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதோடு, குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க உதவும். பாரம்பரிய தானியங்களை விட உங்களது கோடை டயட்டில் பார்லி மற்றும் ராகி போன்றவற்றை சேர்க்கலாம். அதே போல முழு தானியங்கள் வீக்கத்தை குறைப்பது மட்டுமல்லாமல், நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.

வாழைப்பழங்கள்: அழற்சியை எதிர்த்து போராடுவதில் வாழைப்பழங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. தவிர குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதில் வாழைப்பழங்கள் முக்கியமானவை. கூடுதலாக வயிற்றுப்போக்கு மற்றும் ஸ்டோமக் அப்செட் போன்ற பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது. அதே போல கோடையில் நன்கு பழுத்த பழுத்த வாழைப்பழங்களை சாப்பிடுவது அசிடிட்டி பிரச்சனையை தடுக்க சிறந்த வழி.

ஓட்ஸ் : ஓட்ஸில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. கோடை சீசனில் இதனை அடிக்கடி டயட்டில் சேர்ப்பதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம். ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை மீட்டெடுக்கும் ஓட்ஸ், தேவையயற்ற நேரங்களில் ஏற்படும் பசியை மறக்கடிக்கும் வகையில் நீண்ட நேரத்திற்கு உங்களை முழுமையாக உணர வைக்கிறது.

மோர் : கோடையில் நம் குடலை குளிர்ச்சியாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்த வழி தினசரியோ அல்லது அடிக்கடியோ 1 டம்ளர் மோர் குடிப்பதே. வீட்டிலிருக்கும் தயிரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து அதில் சுவைக்கு சிறிதளவு பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பருகுவது செரிமான சிக்கல், வீக்கம் மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளை தவிர்க்க அல்லது நிவாரணமளிக்க உதவுகிறது. ப்ரோபயாடிக்ஸ் நிறைந்த இந்த பானம் குறைவான கலோரிகளை கொண்டுள்ளதுடன் அத்தியாவசிய வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் நிறைந்தது.

தயிர் சாதம் : நல்ல வெயில் நேரத்தில் மதிய உணவாக தயிர் சாதம் சாப்பிடுவது குடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள மற்றும் செரிமான பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. இதில் ப்ரோபயாடிக்ஸ் நிறைந்துள்ளது. தவிர கால்சியம் மற்றும் புரதத்தின் நல்ல ஆதாரமாக தயிர் சாதம் இருக்கிறது. இதனால் எலும்புகள் மற்றும் தசை ஆரோக்கியத்திற்கு சிறந்தது. உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த 1 கப் தயிர் சாதத்தை உங்கள் டயட்டில் சேருங்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா..? 2 நாட்கள் வரை ஃபிரெஷ்ஷாக வைக்க உதவும் டிப்ஸ்..

 கோடை காலத்தில் நம் தாகத்தை தணிக்க கூடிய சுவையான மற்றும் ஆரோக்கியமான பழங்களில் தர்பூசணி முக்கியமான ஒன்று. குளிர்ச்சி தரும் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் தர்பூசணியை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

சாலட்ஸ் மற்றும் ஸ்மூத்திஸ் தயாரிப்பது முதல் காக்டெய்ல் மற்றும் டெசர்ட்ஸ் வரை பலவற்றில் தர்பூசணி ஸ்லைஸ் பயன்படுத்துகின்றனர். வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், தாமிரம் மற்றும் பல ஊட்டச்சத்துக்களையும் தர்பூசணி கொண்டுள்ளது. மேலும் இந்த பழத்தை மிதமான அளவில் சாப்பிடும் போது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மைகளை அளிக்கும்.

ஆனால் அதே சமயம் இந்த தர்பூசணியை சரியான முறையில் ஸ்டோர் செய்து வைக்காவிட்டால் மிக விரைவாக கெட்டுவிடும் மற்றும் அதிலிருக்கும் ஊட்டச்சத்து மதிப்பும் வெகுவாக குறைந்தும் விடும். எனவே தர்பூசணியிலிருந்து கிடைக்கும் அனைத்து சத்துக்களையும் பெற அவற்றை சரியாக சேமித்து வைப்பது மிகவும் முக்கியமானது.

தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா..? தர்பூசணியை நிச்சயம் ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைக்கலாம். இருப்பினும் பழத்தில் இருக்கும் ஈரப்பதம் போவதை தடுக்க காற்று புகாத கொள்கலனில் ஸ்டோர் செய்து வைக்க வேண்டும். அதே நேரம் தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைப்பது தீமை இல்லை என்றாலும், இந்த பழக்கம் தர்பூசணியின் ஊட்டச்சத்து மதிப்பை பாதிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தர்பூசணியால் கிடைக்கும் முழு நன்மைகளையும் பெற அதிக நாள் சேமித்து வைக்காமல் முடிந்த அளவு சீக்கிரம் சாப்பிட முயற்சிக்கலாம். தர்பூசணியை சரியான வழியில் ஸ்டோர் செய்து ஃரெஷ்ஷாக வைத்திருக்க உதவும் ஈஸி டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

அறை வெப்பநிலையில் சேமிக்கவும் : நீங்கள் தர்பூசணியை வாங்கியவுடன் சாப்பிடவில்லை என்றால் அதனை அறை வெப்பநிலையில் வைப்பது நல்லது. அறை வெப்பநிலையிலேயே சேமித்து வைக்கும் போது தர்பூசணியின் ஊட்டச்சத்து மதிப்பு பராமரிக்கப்படுகிறது மற்றும் பழம் முழுமையாக பழுக்காவிட்டால், அந்த பழத்தின் பழுக்கும் செயல்முறை வேகமாகிறது. மேலும் இந்த பழத்தை கூல் & டார்க் ப்ளேஸில் ஸ்டோர் செய்து வைக்க வேண்டும். நேரடியாக சூரிய ஒளிபடாதவாறு பாதுகாக்க வேண்டும்.

பிளாஸ்டிக்கில் சுற்றி வைக்கலாம்: தர்பூசணி வாங்கி சாப்பிட்டு விட்டு மீதி பழத்தை என்ன செய்வது இப்படி ஸ்டோர் செய்வது என யோசிக்கிறீர்களா..? மீதி தர்பூசணியை க்ளிங் ராப்பில் (Cling wrap) சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் போதும். மறுபுறம் நீங்கள் தர்பூசணியை சிறிய பீஸ்களாக வெட்டி இருந்தால், அவற்றை காற்று புகாத கொள்கலனுக்கு மாற்றி ஃப்ரிட்ஜில் வைக்கலாம். இது பழம் ட்ரை-யாவதை தடுக்கிறது மற்றும் பழத்தின் ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகிறது.

தோலை அகற்றாதீர்கள்: தர்பூசணியை ஸ்டோர் செய்து வைக்க திட்டமிட்டால் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம், முழு பழத்தின் தோலையும் அகற்றி விடாதீர்கள். நீங்கள் சாப்பிட நினைக்கும் அளவிற்கான பழத்தின் தோலை மட்டும் அகற்றவும். ஏனென்றால் தர்பூசணியின் தோல் அதன் ஈரப்பதத்தை பாதுகாக்க மற்றும் உலர்வதை தடுக்க உதவுகிறது. இதோடு தர்பூசணியின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் சுவையை பராமரிக்கவும் அதன் தோல் உதவுகிறது.

ஆப்பிள்கள் & வாழைப்பழங்களுடன் சேர்த்து சேமிக்காதீர்கள்: ஆப்பிள்கள் மற்றும் வாழைப்பழங்களுடன் தர்பூசணியை எப்போதும் ஸ்டோர் செய்து வைக்க கூடாது. ஏனென்றால் இந்த 2 பழங்களும் எத்திலீன் வாயுவை வெளியிடுகின்றன. இந்த வாயு தர்பூசணி பழுக்கும் செயல்முறையை வேகப்படுத்தும். தர்பூசணியை பழுக்க வைத்து சாப்பிடுவது அனைவரும் விரும்புவது என்றாலும், ஒருவேளை தர்பூசணி அதிகம் பழுத்து விட்டால் அதன் ஆயுள் மற்றும் சுவையில் தாக்கம் ஏற்படுகிறது.

ஃப்ரீஸரில் வைக்கலாம் : தர்பூசணியை மிக நீண்ட காலம் ஸ்டோர் செய்ய விரும்பினால், அதை ஃப்ரீஸரில் ஸ்டோர் செய்து வைக்கலாம். இதற்கு தர்பூசணியின் தோலை நீக்கி மீடியம் சைஸ் க்யூப்ஸாக வெட்டி எடுத்து கொள்ளுங்கள். பின் இந்த பீஸ்களை ஏர்-டைட் கன்டெய்னரில் அல்லது plastic wrap-ல் சுற்றி ஃப்ரீஸர் பாக்சில் வைக்கலாம். சுமார் 6 - 8 மாதங்கள் வரை இது நீடிக்கும் என்றாலும் இந்த முறை பழத்தின்Texture- தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip