வங்கிகளின் FD லாக்-இன் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், அதில் வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.FD Lock-In Period: இந்திய வங்கிகள் சங்கம் (IBA) வங்கிகளின் நிலையான வைப்புத்தொகை தொடர்பாக நிதி அமைச்சகத்திற்கு ஒரு திட்ட வரைவை அனுப்பியுள்ளது. 2022 பட்ஜெட்டில் அதன் விதிகள் மாற்றப்பட வேண்டும் என்று IBA கூறியுள்ளது. வங்கிகளின் FD லாக்-இன் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க...
செலவு, சேமிப்பு, முதலீடு... உங்கள் நிதிப் பாதை சரியா..?
சேமிப்புநாம் வாங்கும் சம்பளம் மற்றும் வருமானத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதி யை எதிர்காலத் தேவைகளுக் காகச் சேமிப்பது அவசியம். ஒருவர் சம்பாதிக்கும் வருமானத்தில் 10% முதல் 30% வரை சேமிக்க வேண்டும் என்பது பொதுவான விதிமுறை எனக் கூறப் படுகிறது.நம்மிடையே பலதரப்பட்ட மக்கள் பல்வேறு விதமாக அவர்களின் சம்பாத்தியத்தை செலவு செய்கிறார்கள்; சேமிக்கிறார்கள்; முதலீடு செய்கிறார்கள். இவர்களை ஐந்து விதமாகப் பிரிக்கலாம். இவர்களில் நீங்கள் எந்தப் பிரிவில் வருகிறீர்கள்,...
உங்கள் உணவில் கெட்ட கொழுப்புகளை தவிர்க்க வேண்டுமா?
அதிக கொழுப்பு ஆரோக்கியத்தின் எதிரி என்பதை எல்லோருமே அறிவோம். உடல் பருமன், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்களுக்கு இதுதான் காரணம். ``உடற்பயிற்சியும் உடலுழைப்பும் இல்லாத வாழ்க்கை முறை, அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது போன்றவை தவிர சில பழக்கவழக்கங்களும்கூட கொழுப்பை அதிகரிக்கலாம். அவற்றைத் தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வை சாத்தியமாக்கலாம்” என்கிறார் பொது மருத்துவர் சாருமதி. கொழுப்பைக் குறைக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைப் பட்டியலிடுகிறார்...
சர்க்கரை நோயாளிகளுக்கான பல் பராமரிப்பு - 10 கட்டளைகள்
உடலில் அதிக வேலைப்பளுவைச் சுமக்கும் உறுப்புகளில் ஒன்று பல். பற்களின் ஆரோக்கியம் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்றாலும், ‘சர்க்கரை நோயாளிகள் பற்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்கிறார்கள் பல் மருத்துவர்கள்.``சர்க்கரைநோய் வந்தால் கால்கள் பாதிக்கப்படும் என்பது பலருக்குத் தெரியும். ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவு பற்களையும் பாதிக்கும் என்பது பலருக்குத் தெரிவதில்லை’’ என்கிறார் பல் மருத்துவர் கல்பனா. சர்க்கரை நோயாளிகளுக்கான...
மாதம் 50,000 ரூபாய்... வீட்டுத்தோட்டத்திலேயே மண்புழு உரம், பஞ்சகவ்யா விற்கலாம்!
வீட்டுத்தோட்டம்திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்தவர் சித்ராதேவி. வீட்டுத்தோட்டம் அமைத்துள்ளார். ஒரு காலைப் பொழுதில் அவருடைய வீட்டில் சந்தித்தோம். ‘‘திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டி புத்தூர்தான் என்னோட சொந்த ஊர். விவசாய குடும்பம். எங்க நிலம் வானம் பார்த்த பூமியா இருந்ததால விவசாயம் செய்ய முடியாம, கூலி வேலைக்கும் கொத்தனார் வேலைக்கும் போக ஆரம்பிச்சாங்க. எனக்குச் சின்ன வயசுல இருந்தே விவசாயத்து மேல ரொம்ப ஆர்வம்.வீட்டுக்குப் பக்கத்துல சின்னச் சின்ன...
பைக்கை முறையாகப் பராமரிப்பது எப்படி?
மழைக் காலமோ, வெயில் காலமோ - நம்முடைய பைக்கை முறையாகப் பராமரிக்க வேண்டியது அவசியம். வெயில் காலம் என்றால் அதிகம் வெயில் படாத இடத்தில் நிறுத்தி வைப்பது, பைக் அதிகம் சூடாகாமல் பார்த்துக் கொள்வது என பராமரிப்பு முறைகள் இருக்கும். இதுவே, மழைக்காலம் என்றால் மழை நீரில் அதிகம் நனையாமல் வைத்துக் கொள்வது, தண்ணீர் அதிகம் இல்லாத இடங்களில் நிறுத்தி வைப்பது என அதற்கென சில வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால், முறையான வழிமுறைகள் எல்லோருக்கும் தெரியுமா என்றால் கேள்விக்குறி...
ஃபிளாட் வாங்கப் போகிறீர்களா? இதை எல்லாம் கொஞ்சம் கவனிங்க!
ரியல் எஸ்டேட்கடந்த எட்டு வருடங்களாக கோமாவில் கிடந்த ரியல் எஸ்டேட் துறை தற்போது எழுந்து சோம்பல் முறிக்கிறது. முக்கியமாக, கோவிட் கட்டுமானத் தொழிலாளர்களைப் பாதித்ததில் கட்டுமான வேலைகள் ஸ்தம்பித்து சப்ளை பாதிக்கப்பட்டது. வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு, ஆள்குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் வீடு மற்றும் மனை வாங்குவோர் எண்ணிக்கை குறைந்து டிமாண்டும் பாதிப்படைந்தது.ரியல் எஸ்டேட் உயிர்த்தெழும் காரணங்கள்...ஆனால், பெரிய அளவில் தடுப்பூசி மக்களைச் சென்றடைந்ததாலும்,...