Bank of Baroda வேலைவாய்ப்பு 2025 – 2700 பயிற்சி பணியிடங்கள் | டிகிரி முடித்தால் போதும் | ₹15,000 மாத ஊதியம்!

 Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Bank of Baroda வேலைவாய்ப்பு 2025 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda) வங்கியில்,
அப்ரெண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கான பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 பணியிட விவரம்

பதவிகாலியிடம்மாத ஊதியம்
Apprentice2700₹15,000

🗺️ மாநில வாரியாக காலியிடங்கள்

  • தமிழ்நாடு – 159
  • ஆந்திரப் பிரதேசம் – 38
  • கேரளா – 52
  • கர்நாடகா – 440
  • தெலுங்கானா – 154
  • மகாராஷ்டிரா – 297
  • குஜராத் – 400
  • உத்தரபிரதேசம் – 307
  • மேற்கு வங்காளம் – 104
  • பஞ்சாப் – 96
  • ராஜஸ்தான் – 215
  • டெல்லி (UT) – 119
  • மத்தியப் பிரதேசம் – 56
  • மற்ற மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்கள் – மீதமுள்ள இடங்கள்

🎓 கல்வித் தகுதி

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் இருந்து
    ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி (Degree) பெற்றிருந்தால் போதும்.
  • விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்.

🎯 வயது வரம்பு (01.11.2025 தேதியின்படி)

  • குறைந்தபட்சம் 20 வயது
  • அதிகபட்சம் 28 வயது

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • மாற்றுத்திறனாளிகள் – 10 ஆண்டுகள்

💰 ஊதியம்

  • மாதம் ₹15,000 (பயிற்சி ஊக்கத்தொகை)
  • ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்கள்.

🧾 தேர்வு முறை

1️⃣ ஆன்லைன் தேர்வு (Online Exam)
2️⃣ சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification)
3️⃣ உள்ளூர் மொழித் தேர்வு (Local Language Test)

விண்ணப்பக் கட்டணம்

பிரிவுகட்டணம்
பொதுப் பிரிவு / OBC / EWS₹800
SC / ST / PwBDகட்டணம் இல்லை

🗓️ முக்கிய தேதிகள்

  • விண்ணப்பம் தொடங்கும் நாள்: அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 🗓️ 1 டிசம்பர் 2025

🌐 விண்ணப்பிக்கும் முறை

1️⃣ கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து Bank of Baroda Careers பக்கத்துக்குச் செல்லவும்.
2️⃣ “Engagement of Apprentices under the Apprentices Act 1961” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3️⃣ ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

🔗 அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு:
👉 https://bankofbaroda.bank.in/career/current-opportunities/engagement-of-apprentices-under-the-apprentices-act-1961

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தேசிய வீட்டுவசதி வங்கி வேலைவாய்ப்பு 2025 – உயர்ந்த சம்பளத்துடன் நிரந்தர & ஒப்பந்த பணியிடங்கள் | கடைசி தேதி: நவம்பர் 28

 Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

 தேசிய வீட்டுவசதி வங்கி (NHB) வேலைவாய்ப்பு 2025

இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான தேசிய வீட்டுவசதி வங்கி (National Housing Bank) நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணியிட விவரம்

பதவிகாலியிடம்
Deputy General Manager2
Assistant General Manager1
Assistant Manager3
Chief Information Security Officer1
Head – Learning & Development1
Senior Project Finance Officer4
மொத்தம்12

🎓 கல்வித் தகுதி

Deputy / Assistant General Manager / Assistant Manager:

  • CAMBAPG Diploma in Management, அல்லது Business Administration ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு தகுதி.
  • குறைந்தபட்சம் 1 முதல் 15 ஆண்டு அனுபவம் தேவை.

Chief Information Security Officer:

  • B.E / B.Tech (Computer Science / IT / Electronics / Telecommunications) அல்லது M.Sc (Computer Science) முடித்திருக்க வேண்டும்.
  • குறைந்தது 10 ஆண்டு அனுபவம் அவசியம்.

Head – Learning & Development:

  • CA / CMA / Company Secretary / MBA / Master’s Degree ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுடன் 15 ஆண்டு அனுபவம் தேவை.

Senior Project Finance Officer:

  • CA (Chartered Accountant) தகுதியுடன் குறைந்தது 5 ஆண்டு அனுபவம்.

🧓 வயது வரம்பு

பதவிவயது வரம்பு
Deputy General Manager40 – 55 ஆண்டுகள்
Assistant General Manager36 – 55 ஆண்டுகள்
Assistant Manager21 – 30 ஆண்டுகள்
Chief Information Security Officer40 – 55 ஆண்டுகள்
Head – Learning & Developmentஅதிகபட்சம் 62 ஆண்டுகள்
Senior Project Finance Officerஅதிகபட்சம் 62 ஆண்டுகள்

💰 சம்பள விவரம்

பதவிசம்பளம் (மாதம்)
Deputy General Manager₹1,40,500 – ₹1,56,500
Assistant General Manager₹1,20,940 – ₹1,35,020
Assistant Manager₹48,480 – ₹85,920
Chief Information Security Officer / Head – L&Dஅனுபவத்தின் அடிப்படையில்
Senior Project Finance Officerஅனுபவத்தின் அடிப்படையில்

🧾 தேர்வு முறை

  • ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

🌐 விண்ணப்பிக்கும் முறை

1️⃣ அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.nhb.org.in/ தளத்துக்குச் செல்லவும்.
2️⃣ “Careers” பகுதியில் NHB Recruitment 2025 இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
3️⃣ தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, ஆன்லைனில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.

 விண்ணப்பிக்க கடைசி தேதி: 28 நவம்பர் 2025

Official Notification: Click Here

🌟 வேலைவாய்ப்பின் சிறப்பம்சங்கள்

✅ நிரந்தர & ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்கள்
✅ CA, MBA, MSc, B.Tech தகுதி போதுமானது
✅ ₹1.56 லட்சம் வரை மாத சம்பளம்
✅ அனுபவம் அடிப்படையிலான உயர்ந்த பதவிகள்

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Palli Parvai App - Updated Version - Regarding - SPD Letter

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Samagra Shiksha - Updated Version of Palli Parvai App - Regarding - SPD Letter 

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Samagra shiksha -Updated version of palli parvai- regarding.... SPD LETTER

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Samagra shiksha -Updated version of palli parvai- regarding.... SPD LETTER

IMG-20251112-WA0016

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

SIR படிவம் நிரப்புதல் : அ முதல் ஃ வரை

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG-20251112-WA0011

SIR படிவம் நிரப்புதல் : அ முதல் ஃ வரை

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணி(SIR)க்கான Enumeration படிவம் (அதாங்க உங்க Photoவுடன் தற்போதைய Voter ID தகவல்கள் உடன் புதிதாக நிரப்ப வேண்டிய 5 பகுதிகளை உள்ளடக்கிய படிவம்) இந்நேரம் 2 பிரதிகளாகத் தங்களை வந்து அடைந்திருக்கும். இதுவரை வரவில்லை எனில், உங்களது வார்டு / பூத்திற்கான BLOவிடம் சென்று பெற்றுக்கொள்ளலாம். அல்லது உங்கள் பகுதிக்கான கட்சி முகவர்களிடம் பேசுங்கள். படிவம் கிடைக்க உதவுவர். பீகார் SIRன் முடிவுகளால் தமிழ்நாட்டு மக்கள் நலன் நாடும் அரசியல் கட்சிகள் இவ்விடயத்தில் ஓரளவு விழிப்புடனும் கூடுதல் பொறுப்புடனும் செயல்பட்டு வருகின்றன.

*Form கிடைக்கல, Onlineலயே Apply பண்ணலாமா? :*

தாராளமாக இணைய வழியில் நிரப்பி அளிக்கலாம். ஆனால், அதற்கு நீங்கள் 3 கடல்களைத் தாண்டியிருக்க வேண்டும்.

1. உங்களது Mobile எண் Voter IDயுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

2. Voter ID & ஆதார் அட்டை இரண்டிலும் உங்களது பெயர் ஒரே மாதிரியாக (Letters, Initial & Space உட்பட) இருக்க வேண்டும்.

3. உங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட Mobile எண் கைவசம் இருக்க வேண்டும்.

1000ல் ஒருவருக்கே இம்மூன்றும் சரியாக அமையலாம்.  நீங்கள் ஆயிரத்தில் ஒருவர் என்றால்,

https://voters.eci.gov.in/login

என்ற இணைய முகவரியில் சென்று OTP கொடுத்து உள்நுழைந்து தேவையான தகவல்களை நிரப்பி ஆதார் OTP மூலம் e-Sign செய்து சமர்ப்பிக்கலாம்.

*கடலெல்லாம் தாண்டல, கையில் உள்ள Enumeration Formஐ பூர்த்தி செய்வது எப்படி? :*

BLO இரு படிவங்களைத் தந்திருப்பார். இரண்டையும் நிரப்பி ஒன்றில் மட்டும் BLOவிடம் கையொப்பம் பெற்று நீங்களே வைத்துக் கொண்டு, மற்றொன்றை அவரிடமே கொடுக்க வேண்டும். Original படிவம் தான் ஏற்கப்படும் என்பதால், கவனமுடன் பிழையின்றி நிரப்பவும். தேவைப்படின் Xerox எடுத்து நிரப்பிப் பார்த்து அதன்பின் Original படிவத்தை நிரப்பி BLOவிடம் வழங்கலாம்.

Enumeration Formல் நாம் கவனிக்க வேண்டிய 5 பகுதிகள் உள்ளன.

1. புதிய புகைப்படம் (Passport Size)

2. சுய விபரம்

3. (1.7.1987க்கு முன் பிறந்தவர் எனில்) 2002/2005 வாக்காளர் பட்டியலின் படி உங்களது விபரம்.

4. (1.7.1987க்குப் பின் பிறந்தவர் எனில்) 2002/2005 வாக்காளர் பட்டியலின் படி உங்களது உறவினர் (அம்மா / அப்பா / தாத்தா / பாட்டி) விபரம்.

5. வாக்காளர் & BLO கையொப்பம்

இதில், பகுதி 1 & 2 அனைவருக்கும் பொதுவானது.  பகுதி 2ன் சுய விபரங்களில்,

* பிறந்த தேதி (DD/MM/YYYY)

*ஆதார் எண்

*கைப்பேசி எண்

* தந்தை / பாதுகாவலரின் பெயர்

* தந்தையின் வாக்காளர் அடையாள அட்டை எண்

*தாயாரின் பெயர்

உள்ளிட்டவை கட்டாயம். தந்தைக்கு Voter ID இல்லை எனில் கூடுதல் விபரங்களாக,

* தாயாரின் Voter ID எண்

* துணைவர் பெயர்

* துணைவரின் Voter ID எண்

உள்ளிட்டவற்றை தேவையைப் பொறுத்து நிரப்பவும். பகுதி 3 & 4ல் யார்யார்  எந்தந்த பகுதிகளை நிரப்ப வேண்டும் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

*பகுதி 3 :*

நீங்கள் 01.07.1987ற்கு முன் பிறந்தவர் எனில் உங்களது பெயர் 2002/2005 SIRல் இருக்கும். அப்படி இருந்தால் அதில் உள்ள,

* தங்களது பெயர்

* Voter ID எண் (அதில் இருந்தால்)

* தந்தை / இணையர் பெயர்

* மாவட்டம்

* மாநிலம்

* MLA தொகுதி

* MLA தொகுதி எண்

* பாகம் எண்

* உங்களது பெயரின் வரிசை எண்

உள்ளிட்டவற்றை நிரப்ப வேண்டும். நீங்கள் பகுதி 4ஐ நிரப்பத் தேவையில்லை.

*பகுதி 4 :*

நீங்கள் 01.07.1987ற்கு முன் பிறந்திருந்தும் உங்களது பெயர் 2002/2005 SIRல் இல்லை என்றாலோ அல்லது 01.07.1987ற்குப் பின்னர்தான் நீங்கள் பிறந்திருப்பீர்கள் என்றாலோ உங்களால் பகுதி 3ஐ நிரப்ப இயலாது. எனவே, 2002/2005 SIRல் இருக்கும் உங்களது தாய் / தந்தை / தாத்தா / பாட்டி உள்ளிட்ட யாரேனும் ஒருவரது பின்வரும் விபரங்களை பகுதி 4ல் நிரப்ப வேண்டும்.

* தாய் / தந்தை / தாத்தா / பாட்டி பெயர்

* Voter ID எண் (அதில் இருந்தால்)

* உறவு முறை

* மாவட்டம்

* மாநிலம்

* MLA தொகுதி

* MLA தொகுதி எண்

* பாகம் எண்

* அவரது பெயரின் வரிசை எண்

உள்ளிட்டவற்றை நிரப்ப வேண்டும்.

*பகுதி 5 :*

உறுதி மொழியைத் தொடர்ந்து வாக்காளரோ / அவரது 18+ உறவினரோ கையொப்பமிட வேண்டும். உறவினர் கையொப்பமிட்டால் உடன் உறவுமுறையையும் எழுத வேண்டும். 

அடுத்ததாக வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) கையொப்பம் இடுவார். இரு படிவங்களில் ஒன்றை அவரிடம் அளித்துவிட்டு, படிவத்தை நீங்கள் நிரப்பி ஒப்படைத்துவிட்டதற்கு ஆதாரமாக (Acknowledgement) அவர் கையொப்பமிட்ட மற்றொரு படிவத்தை உடன் வாங்கி வைத்துக்கொள்ளவும். பின்னர் கட்டாயம் தேவைப்படும்.

நினைவிருக்கட்டும் பகுதி 3 & 4ல் நிரப்பப்படும் தகவல்கள் அனைத்துமே 2002/2005 SIR பட்டியலில் உள்ளபடிதான் இருக்க வேண்டும். Voter ID எண் அதில் இல்லை எனில் இதில் குறிக்கத் தேவையில்லை. இதைத் தவிர்த்த அனைத்து விபரங்களும் அதில் இருக்கும்.

2002/2005 SIR பட்டியலைப் பெறுவது எப்படி? :

பகுதி 3 & 4னை நிரப்ப 2002/2005 SIR பட்டியலில் உள்ள பாகம் எண் & வரிசை எண் உள்ளிட்ட விபரங்கள் கட்டாயம் தேவை. இதனை BLO உடன் வைத்திருப்பார். அவரிடம் இல்லை எனில், கீழேயுள்ள இணைப்பில் சென்று 2002ல் நீங்கள் / உங்களது உறவினர் இருந்த சட்டமன்றத் தொகுதி, பெயர், உறவினர் பெயர் உள்ளிட்ட விபரங்களை அளித்துத் தெரிந்து கொள்ளலாம்.

https://erolls.tn.gov.in/electoralsearch/

மேலே கண்ட இணைப்பில் தேட இயலவில்லை எனில், PDFஆக Download செய்து தேடிப்பார்க்க இயலும். அதற்கு இரண்டு இணைப்புகள் உள்ளன.

https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx

மேலேயுள்ள இணைப்பில் சென்று 2002ல் நீங்கள் / உங்களது உறவினர் இருந்த சட்டமன்றத் தொகுதி & அப்போது வாக்களித்த வாக்குச்சாவடியின் பெயர் உள்ளிட்டவற்றை அளித்து SIR 2002 பட்டியலை PDFஆகத் தரவிறக்கலாம். உங்களது ஊரின் தெருவாரியாக ஓரளவு வீட்டு வரிசைக்கிரமமாகவே பெயர்கள் இருக்கும். அதில் தேவையான விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

மேற்படி பட்டியல் நீங்கலாக கீழேயுள்ள 37 தொகுதிகளுக்கு மட்டும் 2005ல் மீண்டும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியல் SIR 2005 வெளியிடப்பட்டது. அந்தத் தொகுதியினர் மட்டும் கீழேயுள்ள இணைப்பில் சென்று SIR 2005ன் PDF fileஐ தரவிறக்கிக் கொள்ளலாம்.

https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx

SIR 2005 பட்டியலுக்கான 37 தொகுதிகள் :

1. 1 - Royapuram

2. 2 - Harbour

3. 3 - Dr.Radhakrishnan Nagar

4. 4 - ParkTown

5. 5 - Perambur (SC)

6. 6 - Purasawalkam

7. 7 - Egmore (SC)

8. 8 - Anna Nagar

9. 9 - Theagarayanagar

10. 10 - Thousand Lights

11. 11 - Chepauk

12. 12 - Triplicane

13. 13 - Mylapore

14. 14 - Saidapet

15. 17 - Thiruvottiyur

16. 18 - Villivakkam

17. 19 - Alandur

18. 20 - Tambaram

19. 74 - Hosur

20. 88 - Salem I

21. 89 - Salem II

22. 90 - Veerapandi

23. 91 - Panamarathupatty

24. 103 - Thondamuthur

25. 104 - Singanallur

26. 105 - Coimbatore West

27. 106 - Coimbatore East

28. 107 - Perur

29. 141 - Tirupparankundram

30. 142 - Madurai west

31. 143 - Madurai Central

32. 144 - Madurai East

33. 145 - Samayanallur(SC)

34. 166 - Tiruchirapalli I

35. 167 - Tiruchirapalli II

36. 218 - Tirunelveli

37. 219 - Palayamkottai

படிவம் ரெடி! 2002/2005 SIR பட்டியல் ரெடி!! பிறகென்ன படிவத்தைக் கவனமுடன் நிரப்பி வழங்குவதன் வழி உங்களது இந்தியக் குடியுரிமையைத் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்துவிடுங்கள்.

2002 / 2005 பட்டியலில் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என எவரது பெயருமே இல்லையெனில் இரத்த உறவுகளைக் குறிக்கலாம் என்று சில இடங்களில் கூறப்படுகிறது. உங்களது BLOவைத் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளவும்

அனைத்தும் சரியெனில், தேர்தல் ஆணையம் இதுவெல்லாம் சரிதான் என்று தீர்மானித்தால், உங்களது பெயர் 04.12.2025ல் வெளிவரவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பிடித்துவிடும். பட்டியலில் பெயர் இல்லையெனில் 1 மாதம் மேல்முறையீட்டுக் காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் எவ்வாறு மேல்முறையீடு செய்யலாம் என்பதை அடுத்த பதிவில் காண்போம்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Pay Matrix (Revised), HRA Slab & DA Rates

 Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Pay Matrix (Revised), HRA Slab & DA Rates .pdf

👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

யுஜிசி நெட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய வாய்ப்பு

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

நடப்பாண்டுக்கான 2-ம் கட்ட யுஜிசி நெட் தேர்வு. டிசம்பர் 31 முதல் ஜனவரி 7-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த அக்டோபர் 8-ம் தேதி தொடங்கி நவம்பர் 7-ம் தேதியுடன் முடிவடைந்தது.

தற்போது பட்டதாரிகள் விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கு என்டிஏ வாய்ப்பு வழங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் http://ugcnet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களில் நவம்பர் 12-ம் தேதிக்குள் திருத்தங்கள் செய்துகொள்ள வேண்டும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Kalvi TV Schedule - November 2025

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Kalvi TV Schedule - November 2025

IMG-20251110-WA0017

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு களைதல் தொடர்பாக அலுவலர்களை நியமித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20251110_192417

மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு களைதல் தொடர்பாக அலுவலர்களை நியமித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

DSE - Pay Anamoly Allocation.pdf

👇👇👇👇