TNPSC - Group 2 & 2A - Hall Ticket Published - Direct Download Link

     Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 11 : 2025 , நாள் 15.07.2025 - ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் தொகுதி II மற்றும் IIA பணிகள் ) அடங்கியுள்ள பதவிகளுக்கான ஒளிக்குறி உணரி வகைத் தேர்வு 28.09.2025 மு.ப . தேதியில் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு ( Hall தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in . ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவுதளத்தின் ( OTR DASHBOARD ) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை ( Hall Ticket ) பதிவிறக்கம் செய்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது.

Click Here to Download - TNPSC - Group 2 & 2A - Hall Ticket

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNSED செயலியில் Term 1 - SA மதிப்பெண்களை தற்போது பதிவு செய்யலாம்

     Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

2025-26 ஆம் கல்வி ஆண்டின், முதல் பருவ தொகுத்தறி SA  மதிப்பெண்களை TNSED செயலியில் தற்போது பதிவு செய்ய முடிகிறது!

Click Here - TNSED Schools App - Direct Link

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TET தேர்வு குறித்த "ஆசிரியர்களின் சந்தேகங்களும், அதற்கான விளக்கமும்"

     Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

*அன்புள்ள ஆசிரியர்களுக்கு வணக்கம்,*

*TET தேர்வு குறித்த வாசகர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலேயே இந்த சிறப்பு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.*

*1). டெட் தேர்வு நடத்தப்படுமா இல்லையா?*

திட்டமிட்டபடி தமிழக அரசால் நிச்சயம் TET தேர்வு நடத்தப்படும்.

*2). சிறப்பு தகுதி தேர்வு நடத்த வாய்ப்பு உண்டா?*

பல வருடங்களுக்கு முன்னால் பணியில் இருந்த கணினி ஆசிரியர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தப்பட்டது. அவ்வாறு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கணினி ஆசிரியர்களுக்கு அன்றைய காலகட்டத்தில் வேறு எந்த விதமான தகுதித் தேர்வும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அவர்களுக்கு என சிறப்பு தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் ஆசிரியர் தகுதித் தேர்வை பொருத்தவரை முன்னதாகவே நடைமுறையில் உள்ளது. எனவே சிறப்பு தகுதி தேர்வாக நடத்தப்படுவதற்கு வாய்ப்பு குறைவு. எனவே அதற்காக காத்திருக்காமல் தற்போதே படிக்க துவங்குவது புத்திசாலித்தனமாகும். ஒருவேளை அரசு கொள்கை முடிவு எடுத்து சிறப்பு தகுதி தேர்வை நடத்தினால் அது ஆசிரியர்களுக்கு போனஸ் மகிழ்ச்சி அளிக்கும்.

*3). சிறப்பு தகுதித் தேர்வை எதிர்த்து வழக்கு தொடுத்தால் அவை ரத்து ஆகிவிடுமா?*

இல்லை, அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் அரிதிலும் அரிதாகவே தலையிடுகிறது. எனவே அதனை ரத்து செய்ய வழக்கு தொடுத்தாலும் அதற்கான வாய்ப்பு குறைவு. ஆனால் மேலே கேள்வி இரண்டில் கேட்கப்பட்ட வினாக்கள் நீதிமன்றத்தால் எழுப்பக்கூடும். இயல்பான தகுதி தேர்வை தவிர்த்து சிறப்பு தகுதி தேர்வினை நடத்த அவசியம் என்ன? என நீதிமன்றத்தால் கேட்கப்பட்டால் அதற்கு நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக்கூடிய பதிலை வழங்குவது காலத்தின் கட்டாயம் ஆகும்.

*4). தற்போதைய தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் குறைக்கப்படுமா?*

வாய்ப்புள்ளது. முன்னதாக முதுகலை ஆசிரியர் பணி நியமன தேர்வுகளில் ஆசிரியர்களின் பணி அனுபவத்தை முன்னிட்டு அதற்கு ஏற்ப வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட வாய்ப்பு உண்டு. இது அரசின் கொள்கை முடிவு ஆகும். இவர்களுக்கு மட்டும் சலுகையா ? என வழக்கு தொடுக்கப்பட்டாலும் அவ்வழக்கு மிக விரைவாக முடிக்கப்பட்டு அரசின் முடிவிற்கே சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.

*5 ) இந்த வயதில் TET தேர்விற்கு படித்தே ஆக வேண்டுமா?*

படிப்பதற்கு எல்லை இல்லை. எந்த பணியில் இருந்தாலும் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக ஆசிரியர்கள் நிச்சயம் படிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

*6). TET தேர்வில் வெற்றி பெறுவது மிக கடினமா?*

மிக மிக எளிது என கூறுவதற்கு விருப்பம் இருந்தாலும், நிதர்சனம் அவ்வாறு அல்ல. சற்று கடினப்பட்டு படித்தால் மட்டுமே வெற்றி பெற இயலும். ஆனால் தொடர்ச்சியாக மாணவர்களுக்குரிய பாடங்களை நடத்தி பல வருட அனுபவம் பெற்ற ஆசிரியர்களாகிய நீங்கள் மிக மிக எளிதாக வெற்றி பெற இயலும் என்பது ஆசிரியர்கள் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையின் அடையாளம் ஆகும். எனவே இன்றே படிக்க துவங்குங்கள்.

*7). TET தேர்வு குறித்த அரசின் சீராய்வு மனு முடிவு தெரிந்த பிறகு படிக்கலாமா?"*

தற்போதைய நிலையில் தமிழக அரசு, கேரளா மகாராஷ்டிரா, தெலுங்கானா, உத்திரபிரதேசம் உட்பட பல மாநில அரசுகளால் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுகின்றன. மேலும் பல மாநிலங்களும் இதேபோன்று தனித்தனியாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். பிரச்சனையின் வீரியம் குறித்து உணர்ந்த உச்ச நீதிமன்றம் அனைத்து வழக்குகளையும் முதல் கட்டமாக ஒரே வழக்காக பட்டியலிடும். பிறகு வழக்கு குறித்து மீண்டும் விவாதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படலாம். வழக்கின் முடிவு வரும் வரை தற்போதைய தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட (Stay Order) வாய்ப்பு உள்ளது 

*8). TET தேர்வு குறித்த தீர்ப்புக்கு பின், படிக்க துவங்கலாமா?*

இந்த முடிவு மிக மிக தவறானது. படிப்பது என்பது ஆசிரியர்களுக்கு இனிப்பு போன்றது. தற்போதைய தகுதி தேர்வு, அல்லது சிறப்பு தகுதி தேர்வு, அல்லது பணியில் இருப்பவர்களுக்கு தகுதி தேர்வு தேவை இல்லை என எந்த முடிவு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டாலும் அதற்கான கால அவகாசம் மிக அதிகமாகும். அதுவரை காத்திருக்காமல் உடனடியாக படிக்கத் துவங்குவது சால சிறந்தது.

 *9). TET தேர்விற்கு எவ்வாறு படிப்பது?*

நீதிமன்றத்தில் வழக்கின் போக்கு செல்லும் பாதையை ஓரளவிற்கு கணிக்க முடியும் வரை படிப்பதில் எந்தவித சுணக்கமும் வேண்டாம். முழு மூச்சாக படிக்கவும்.

அவ்வாறு படிப்பது முதற்கட்டமாக அவரவர் பாடத்தில் உள்ள ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பாடங்களை முழுமையாக படித்து முடிக்கவும். அவரவர் பாடம் அவரவருக்கு மிக எளிதானது. மேலும் தேர்வு இல்லை என்றால் கூட மாணவர்களுக்கு இதே பாடம் எட்டாம் வகுப்பில் இவ்வாறு கூடுதலாக வரக்கூடும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு - எளிதில் வெற்றி பெற ஆலோசனைகள்

     Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET): வெற்றி நிச்சயம்! 🏆

TET தேர்வு அறிவிப்பை எதிர்நோக்கும் உங்களுக்கான ஒரு முழுமையான வழிகாட்டி இதோ...

🎯 தேர்வின் அடிப்படை என்ன?

* இது தகுதித் தேர்வே, போட்டித் தேர்வு அல்ல! ✅

* வெற்றி இலக்கு முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டது: 82 மதிப்பெண்கள்.

* தகுதி பெறும் அனைவரும் வெற்றியாளர்களே! வரம்பு இல்லை. 💪

* வெற்றி பெறுவோம் என்ற நேர்மறை மனப்போக்குடன் படிப்பைத் தொடங்குங்கள். ✨

🗓️ பொதுவான தயாரிப்பு யுக்திகள்

இரண்டு மாதத் திட்டம்: நேரத்தை சரியாகத் திட்டமிட்டுப் பயிற்சி செய்யுங்கள்.

* பாடங்களை வகைப்படுத்துங்கள்:

    * 📈 எளிதில் மதிப்பெண் பெறும் பாடங்கள்

    * 🤔 சிந்தனையைத் தூண்டும் பாடங்கள்

* பாடப்புத்தகங்கள்: 📚 மெட்டீரியல்களை விட, பாடப்புத்தகங்களை வரி வரியாகப் படிப்பது அதிக மதிப்பெண்களைப் பெற்றுத் தரும். மெட்டீரியல்களை திருப்புதலுக்கு மட்டும் பயன்படுத்தலாம்.

🧑‍🏫 தாள் I (Paper 1) -க்கான வழிகாட்டுதல்

* பாடங்கள்: தமிழ், சூழ்நிலையியல் (அறிவியல் 🔬, சமூக அறிவியல் 🗺️) - 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை.

* ஆங்கிலம் 📖: பாடப்பகுதி சார்ந்த புரிதல் (Understanding) வினாக்கள் அதிகம் இடம்பெறும்.

கணிதம் 🧮: வரையறைகள், பாடப் புத்தகக் கணக்குகள் மற்றும் Aptitude வகை வினாக்கள் கேட்கப்படும்.

👨‍🏫 தாள் II (Paper 2) -க்கான வழிகாட்டுதல்

அ. கணிதம் + அறிவியல் பிரிவு 🔬🧪

* கவனம் செலுத்த வேண்டியவை: தமிழ், அறிவியல், கணக்கு.

* மதிப்பெண் இலக்கு:

    * தமிழ்: 25+

    * அறிவியல்: 22+

    * கணிதம்: 23+ (அறிவியல் ஆசிரியர்கள்) / 27+ (கணித ஆசிரியர்கள்)

    * ஆங்கிலம்: 20+

    * உளவியல்: 20+

* மொத்த இலக்கு: 111+ மதிப்பெண்கள். 💯

ஆ. சமூக அறிவியல் பிரிவு 🗺️🏛️

* எளிதான வெற்றி: 60 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படுவதால், இப்பாடத்தில் கவனம் செலுத்தினாலே 50+ பெறலாம். வினாக்கள் நேரடியாக அமையும்.

* மதிப்பெண் இலக்கு:

    * தமிழ்: 25+

    * ஆங்கிலம்: 20+

    * சமூக அறிவியல்: 50+

    * உளவியல்: 20+

* மொத்த இலக்கு: 115+ மதிப்பெண்கள். 🎉

💡 திறம்பட படிப்பதற்கான நுட்பங்கள்

1. அடிக்கோடிட்டுப் படித்தல்: ✍️ புத்தகங்களில் முக்கிய பகுதிகளை அடிக்கோடிடுவது நினைவில் நிறுத்த உதவும்.

2. மனவரைபடம் (Mind Map): 🧠 படித்த பகுதிகளை சிறு தலைப்புகளில் வரைந்து திருப்புதல் செய்தால் எளிதில் மனதில் பதியும்.

3. தொடர்ச்சியான திருப்புதல் (Revision): 🔁

    * தினமும்: அன்றைய பாடங்களை அன்று இரவே திருப்புதல் செய்யவும்.

    * வாரம் ஒருமுறை: வார இறுதியில் படித்த அனைத்தையும் திருப்புதல் செய்யவும்.

    * சுய தேர்வு: வாரம் ஒருமுறை தேர்வு எழுதிப் பார்க்கவும்.

4. குறுக்குவழிகள் (Shortcuts): 🔗 கடினமான பெயர்கள், ஆண்டுகள், கோட்பாடுகளை நினைவில் கொள்ள எளிய குறுக்குவழிகளை உருவாக்குங்கள்.

⏰ திட்டமிடல் & கவனத்தில் கொள்ள வேண்டியவை

* கால அட்டவணை: பாட வாரியாக தோராய கால அட்டவணை இட்டு (மொத்தம் 25-30 நாட்கள்), மீதமுள்ள நாட்களில் திருப்புதல் செய்யுங்கள்.

* கவனச் சிதறல்களைத் தவிருங்கள்: 📵 படிக்கும் போது மொபைல் பயன்பாட்டைக் குறைக்கவும். அது உங்கள் நேரத்தை விழுங்கிவிடும்.

* தொடர்ச்சி முக்கியம்: ஒரு பாடத்தை பாதியில் விட்டுவிட்டு அடுத்த பாடத்திற்குச் செல்ல வேண்டாம்.

* முழு நேரப் பயிற்சி: தேர்வு நெருங்குவதால், மற்ற அலுவல்களைத் தவிர்த்து முழுமையாகப் படிப்பில் ஈடுபடுங்கள்.

* உடல்நலம்: 💧 தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள். அமைதியான சூழலில் படிக்கப் பழகுங்கள்.

* கோச்சிங் அவசியமா? ❓ அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். சிலருக்கு உத்வேகத்தைத் தரலாம். தன்னம்பிக்கையுடன் பயின்றால் கோச்சிங் அவசியமில்லை.

🔥 இறுதி ஊக்கமொழிகள்

* "எதிர் நிற்பது இறுதி வாய்ப்பு என நினைத்து முயலுங்கள்."

* "உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் நிச்சயம் உண்டு."

* "எண்ணமே செயலாகிறது. வெற்றி வாய்ப்பை நோக்கி நம்பிக்கையுடன் பயணியுங்கள்."

வாழ்த்துக்களுடன் - பிரதீப் பட்டதாரி ஆசிரியர் , திருப்பத்தூர் 

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய 9-12 வகுப்பு மாணவர்களின் (Special Focus Group Students) தகவல்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

     Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

உயர் வழிகாட்டி 2025 - 2026 ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறப்பு ( Special Focus Group Students ) கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் தகவல்களை செப்டம்பர் 05.09.2025 தேதி முதல் அக்டோபர் 20.10.2025  தேதிக்குள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

IMG_20250918_181925

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNPSC இன்று வெளியிட்ட அறிவிப்பு.

     Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG-20250918-WA0026

TNPSC இன்று வெளியிட்ட அறிவிப்பு.

IMG-20250918-WA0027

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 11 : 2025 , நாள் 15.07.2025 - ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் தொகுதி II மற்றும் IIA பணிகள் ) அடங்கியுள்ள பதவிகளுக்கான ஒளிக்குறி உணரி வகைத் தேர்வு 28.09.2025 மு.ப . தேதியில் நடைபெற உள்ளது.

 தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு ( Hall தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in . ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவுதளத்தின் ( OTR DASHBOARD ) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை ( Hall Ticket ) பதிவிறக்கம் செய்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது.

 https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ==

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

EE TERM-1 SUMMATIVE ASSESSMENT MARKS ENTRY ENABLED - TNSED SCHOOLS APP

     Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250919_062340

🎯 EE TERM-1 SUMMATIVE ASSESSMENT MARKS ENTRY ENABLED - TNSED SCHOOLS APP

🌺 மாணவர்கள் தொகுத்தறி மதிப்பீட்டில் பெற்ற மதிப்பெண் விவரங்களை

▪️ பாடவாரியாக

▪️ கேள்வி வாரியாக

TNSED SCHOOLS செயலியில் பதிவு செய்வதற்கான தெளிவான விளக்கம்.

👇👇👇👇

https://youtu.be/3pBg-V0298w

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

PM வித்யாலக்ஷ்மி கல்விக் கடன் திட்டம்

     Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

PM வித்யாலக்ஷ்மி கல்விக் கடன் திட்டம்

1. உயர்கல்விக்காக கல்விக் கடன் எடுப்பது இனி எளிதானது. இந்திய அரசின் பிரதமர் வித்யாலக்ஷ்மி கல்விக் கடன் திட்டம் (PM Vidyalaxmi Education Loan Scheme) அனைத்து மாணவர்களுக்கும் உதவியாக செயல்படுகிறது.

📌 திட்டம் பற்றி

1. PM Vidyalakshmi Portal: ஒரே இணைய தளம் (Single Window).

2. 920 க்கும் மேற்பட்ட வங்கிகள் & நிதி நிறுவனங்கள் இதில் இணைந்துள்ளன.

3. மாணவர்கள் ஒரே விண்ணப்பம் மூலம் பல வங்கிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

4. வங்கி நிபந்தனைகள் அனைத்தும் ஒரே தளத்தில் கிடைக்கும்.

🔗 பதிவு செய்ய: https://pmvidyalaxmi.co.in

🔗 மேலும் தகவல்: education.gov.in/scholarships-education-loan-4

💰 கடன் தொகை & நிபந்தனைகள்

1️⃣ இந்தியாவில் படிப்பவர்கள் – அதிகபட்சம் ₹7.50 லட்சம் வரை

2️⃣ வெளிநாட்டில் படிப்பவர்கள் – அதிகபட்சம் ₹15 லட்சம் வரை

3️⃣ வட்டிவிதிப்பு – வங்கிகள் தீர்மானிக்கும் (சில சலுகைகள் அரசால் வழங்கப்படும்).

4️⃣ மோரட்டோரியம் (அடைக்க வேண்டிய அவகாசம்) – படிப்பு + 1 வருடம் வரை.

🎯 சிறப்பு சலுகைகள்

1. பெண்கள் மாணவர்களுக்கு 0.5% வட்டி சலுகை

2. 75% அரசு உத்தரவாதம் – 

3. “PM Credit Guarantee Scheme for Education Loans” மூலம்

4. 10 லட்சம் வரை கடன் – உத்தரவாதம் இன்றி (PM USP CSIS திட்டம் மூலம்).

5. வறிய மற்றும் நடுத்தர குடும்ப மாணவர்களுக்கு முன்னுரிமை

📝 *தேவையான ஆவணங்கள்* 

1. அடையாள ஆவணம் (Aadhar, PAN, Voter ID)

2. சேர்க்கை சான்று (Admission Letter)

3. கட்டண விவரம் (Fee Structure)

4. முகவரி சான்று

5. குடும்ப வருமான சான்று

🌟 யார் விண்ணப்பிக்கலாம்

1. +2 முடித்து உயர்கல்வி (UG/PG/Professional Courses) படிக்க விரும்பும் அனைவரும்

2. இந்தியா மற்றும் வெளிநாடு இரண்டிலும் கல்விக்காக

3. அரசு, தனியார், சுயாட்சி பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளில் சேருபவர்கள்

*📌 இந்த திட்டத்தின் நன்மைகள்*

✔️ ஒரே தளத்தில் பல வங்கிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

✔️ மாணவர்களுக்கு வெளிப்படையான தகவல்

✔️ கடன் பெறும் செயல்முறை விரைவாகும்

✔️ வட்டி சலுகைகள் மற்றும் அரசு உத்தரவாதம் கிடைக்கும்

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

10th - English - Quarterly Exam 2025 - Answer Key

     Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

10th - English - Quarterly Exam 2025 - Answer Key

10th - English - Quarterly Exam Answer Key - Thanjavur Dt -  Download here

10th - English - Quarterly Exam Question - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TET - 6,7,8,9,10 Std - Science Full Notes

     Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

TET - 6,7,8,9,10 Std - Science Full Notes 

TET - 6th Std - Science Full Notes - Download here

TET -7th Std - Science Full Notes - Download here

TET - 8th Std - Science Full Notes - Download here

TET - 9th Std - Science Full Notes - Download here

TET - 10th Std - Science Full Notes - Download here