தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் – செப்டம்பர் 19, 2025

     Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் – செப்டம்பர் 19, 2025

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19.09.2025 அன்று தென்காசி வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில், 20-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

📌 வேலைவாய்ப்பு முகாம் விவரங்கள்

  • நாள் & நேரம்: 19.09.2025 (காலை 10 மணி – மதியம் 2 மணி வரை)
  • இடம்: தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம்
  • பங்கேற்பு நிறுவனங்கள்: 20+ முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்
  • தகுதி:
    • 8ம் வகுப்பு
    • 10ம் வகுப்பு
    • 12ம் வகுப்பு
    • பட்டப்படிப்பு
    • ITI
    • Diploma
  • வாய்ப்பு: பல்வேறு தனியார் துறை பணியிடங்கள்

📝 பதிவு செய்வது எப்படி?

  • வேலை தேடுபவர்கள்: www.tnprivatejobs.tn.gov.in → Candidate Login செய்து பதிவு செய்யலாம்.
  • நிறுவனங்கள்: அதே தளத்தில் Employer Login செய்து பதிவு செய்ய வேண்டும்.
  • தொடர்புக்கு: ☎️ 04633-213179
  • Telegram: TENKASI EMPLOYMENT OFFICE channel-இல் இணைந்து தகவல்கள் பெறலாம்.

📢 முக்கிய அறிவிப்பு

இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு (seniority) பாதிக்கப்படாது. எனவே, தென்காசி மாவட்ட இளைஞர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் – செப்டம்பர் 19, 2025

     Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

 நாகை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் – செப்டம்பர் 19, 2025

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19.09.2025 அன்று நடைபெற உள்ளது. இதை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் அவர்கள் அறிவித்துள்ளார்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் நாகை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 500-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளன.

📌 வேலைவாய்ப்பு முகாம் விவரங்கள்

  • நாள் & நேரம்: 19.09.2025
  • இடம்: நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம்
  • பங்கேற்பு நிறுவனங்கள்: 25+ தனியார் நிறுவனங்கள்
  • மொத்த வாய்ப்புகள்: 500+
  • தகுதி:
    • 5ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை
    • டிப்ளமோ
    • ITI
    • பொறியியல்
    • பட்டப்படிப்பு மற்றும் இதர தகுதிகள்
  • வயது வரம்பு: 18 முதல் 35 ஆண்டுகள்

🎯 கூடுதல் வாய்ப்புகள்

இந்த முகாமில் பங்கேற்பவர்களுக்கு:

  • திறன் பயிற்சி (Skill Training)
  • சுயதொழில் தொடங்க வங்கி கடன் வசதி
  • அயல்நாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்கள்
  • காவலர் எழுத்துத் தேர்வு குறித்த வழிகாட்டுதல்

இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

📑 பங்கேற்பதற்கு தேவையான ஆவணங்கள்

  • சுயவிவர அறிக்கை (Resume)
  • கல்விச்சான்றிதழ்கள் நகல்கள்
  • ஆதார் அட்டை
  • கடவுச்சீட்டு அளவு புகைப்படம்
  • முன் அனுபவம் இருந்தால் அதற்கான சான்றிதழ்

📞 தொடர்புக்கு

☎️ 04365-252701

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், விலங்குகள் பராமரிப்பு, உணவளித்தல் மற்றும் இனப்பெருக்கம், பால் சேகரிப்பு, பால் சார்ந்த வணிகம், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட, 'பொருளாதார மேம்பாட்டை நோக்கி, பால் பண்ணை சான்றிதழ்' படிப்பில் சேர, https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4377 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி வகுப்புகள், சேலத்தில், 21 நாட்கள் நடக்கும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

அரசு பணியாளர்களே - நீங்கள் EL சரண்டர் செய்த தேதி தெரியவில்லையா?

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

நீங்கள் சரண்டர் செய்த தேதி தெரியவில்லையா?....

களஞ்சியம் app ல் ESR Part 1 ல் உள்நுழைந்து download ESR click செய்தால் நாம் இதுவரை வாங்கிய சரண்டர் ஆண்டு வருகிறது.

கடைசியாக  எந்த மாதம், ஆண்டு SURRENDER apply செய்தோம் என்றும் அறியலாம்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

EL Surrender - ஈட்டிய விடுப்பு ஒப்படைவு - யாருக்கு எப்போது?

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

ஈட்டிய விடுப்பு ஒப்படைவு : யாருக்கு எப்போது?

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

பெருந்தொற்றால் கடந்த ஆட்சியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, தற்போதைய ஆட்சியில் மறுதேதி குறிப்பிடாது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈட்டிய விடுப்பு ஒப்படைவு செய்யும் முறையானது, மனிதவள மேலாண்மைத் துறை அரசாணை 35 நாள் 30.06.2025ன் படி, தமிழ்நாட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி, பல்கலை., & அரசு நிறுவன ஊழியர்களுக்கு 01.10.2025 முதல் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது.

பணி நியமன நாள் முதல் ஒவ்வொரு 22 நாள்களுக்கு 1 நாள் வீதம் முழு ஆண்டிற்கும் 17 (ஆசிரியர்கள் தவிர்த்த பருவ விடுமுறை இல்லா ஊழியர்களுக்கு 30) நாள்கள் என வரவாக்கப்படும் ஈட்டிய விடுப்பில் 15 நாள்களை மட்டும் ஆண்டிற்கு ஒருமுறை ஒப்படைவு செய்து பணமாக்கிக் கொள்ளலாம்.

பணமாக்கக் கோரும் ஒப்படைவு தேதி என்பது பணி நியமன தேதி அமைந்துள்ள காலாண்டின் முதல் தேதியாகும். எளிமையாகக் கூறவேண்டுமென்றால், ஊதிய உயர்வு அனுமதிக்கப்படும் மாதமாகும்.

  • ஜனவரி, பிப்ரவரி, மார்ச் : 01.01
  • ஏப்ரல், மே, ஜூன் : 01.04
  • ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் : 01.07
  • அக்டோபர், நவம்பர், டிசம்பர் : 01.10

இவ்வாறுதான் ஈட்டிய விடுப்பு ஒப்படைவு நாள் கணக்கிடப்படும். ஆனால், அலுவலகச் சூழல்கள் சார்ந்து இந்த முறையான தேதி பின்பற்றப்படாது உள்ளது.

[IFHRMSல் இனி மேற்கண்ட முறையான தேதியைத் தவிர்த்து நினைத்த மாதங்களில் பணமாக்கிக் கொள்ள முடியாதபடி வரைமுறை செய்யப்படவும் வாய்ப்புண்டு.]

தற்போதைய அரசாணையின் படி இறுதியாக, (27.04.2020-க்கு முன் பணியேற்று) ஈட்டிய விடுப்பு ஒப்படைவு செய்து பணமாக்கிக் கொண்டோர், பழைய தேதியின் அடிப்படையில் இனி தொடர்ந்து ஆண்டிற்கு 15 நாள்கள் என பணமாக்கிக் கொள்ளலாம்.

அதன்படி ஜனவரி - செப்டம்பர் வரை ஒப்படைவு தேதி வருவோர் 2026ஆம் ஆண்டு முதல் சார்ந்த மாதங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

அக்டோபர் - டிசம்பர் வரை ஒப்படைவு தேதி வருவோர் நடப்பு ஆண்டு முதலே சார்ந்த மாதங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

27.04.2020க்குப் பின்னர் பணியேற்று முதல் முறையாக  ஈட்டிய விடுப்பு ஒப்படைவு செய்யவுள்ளோர், மேலே குறிப்பிட்ட தாங்கள் பணியேற்ற காலாண்டின் முதல் தேதியை அடிப்படையாகக் கொண்டு பணமாக்கிக் கொள்ளலாம்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Earned Leave - ஈட்டிய விடுப்பு பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம் - Calculation

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் EL எடுத்தால் probation period தள்ளிப்போகும்.

🍁பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.

ஆண், பெண் இருவரும். தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால்அந்த வருடத்திற்கான
EL -ஐஒப்படைக்க முடியாது. ELநாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும்.

(உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்து விட்டு (180-10=170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும்.

எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்)

🍁வருடத்திற்கு 17 நாட்கள் EL.அதில் 15நாட்களை ஒப்படைத்து பணமாகப்பெறலாம் .

🍁மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்து கொண்டே வரும் அதை ஓய்வுபெறும் போது ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.

🍁21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL கழிக்கப்படும்.
ஒரு வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள்.
இதை 17ஆல் (EL)வகுத்தால் 365/17=21.

🍁 எனவே 21 நாட்கள் MLஎடுத்தால் ஒரு நாள் EL என்ற கணக்கில் கழிக்கப்படுகிறது.

🍁மகப்பேறு விடுப்பு எடுத்த வருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது , மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள், மற்றும் ML எடுத்த நாட்கள் தவிர்த்து மீதம் வேலை செய்த நாட்களை 21 ஆல் வகுத்து EL கணக்கிடப்படும்.ML & EL எடுத்தது போக மீதம் உள்ள வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும்.(CL & RH கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது)

🍁 ஒரு நாள் மட்டும் ELதேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம்.

🍁 அரசு ஊழியர்களுக்கு மட்டும்வருடத்திற்கு 30 நாட்கள் EL(ஆசிரியர்களுக்கு 17 நாட்கள்மட்டுமே). அதில் 15நாட்களை ஒப்படைக்கலாம்.மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்சமாக 240 நாட்களைச்சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம்.அதற்கு மேல் சேருபவை எந்தவிதத்திலும் பயனில்லை.

மாறுதல் / பதவி உயர்வு /பணியிறக்கம் / நிரவல் போன்றநிகழ்வுகளின் போது பழையஇடத்திற்கும் புதியஇடத்திற்குமிடையே குறைந்தது 8கி.மீ (ரேடியஸ்) இருந்தால் அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம் ELகணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும். இதற்கு 30நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 90 நாட்களுக்குள் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். (குறைந்தது 5நாட்கள்.
160 கி.மீக்கு மேற்படின்அட்டவணைப்படி நாட்களின்எண்ணிக்கை அதிகரிக்கும்)

🍁ஒருமுறை சரண்டர் செய்த அதே தேதியில் தான் ஆண்டுதோறும் செய்யவேண்டும் என்ற கட்டாயம்இல்லை.
கணக்கீட்டிற்கு வசதியாகஇருக்கவும் Pay Rollல் விவரம் குறிக்க எளிமையாக அமையவும் ஒரே தேதியில் ஆண்டுதோறும் அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சரண்செய்வது சிறந்தது.

எவ்வாறாயினும் ஒரு ஒப்படைப்பு நாளுக்கும் அடுத்த ஒப்படைப்பு நாளுக்குமிடையே 15நாட்கள் ஒப்படைப்பெனில் ஓராண்டு / 30 நாட்கள் ஒப்படைப்பெனில் இரண்டாண்டு இடைவெளி இருக்கவேண்டும்.

🍁ஒப்படைப்பு நாள் தான் முக்கியமே தவிர விண்ணப்பிக்கும் தேதியோ, அலுவலர் சேங்க்ஷன் செய்யும் தேதியோ,
ECS ஆகும்தேதியோ அடுத்த முறை ஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்பட வேண்டியதில்லை.

🍁EL ஒப்படைப்பு நாளின்போது குறைந்தஅளவு அகவிலைப்படியும் பின்னர் முன் தேதியிட்டு DAஉயர்த்தப்படும் போது ஒப்படைப்பு நாளில்அதிக அகவிலைப்படியும் இருந்தால் DA நிலுவையுடன் சரண்டருக்குரிய நிலுவையையும் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம். ஊக்க ஊதியம் முன் தேதியிட்டுப் பெற்றாலும் நிலுவைக் கணக்கீட்டுக் காலத்தில் ஒப்படைப்பு தேதி வந்தால் சரண்டர் நிலுவையும் பெறத்தகுதியுண்டு.

🍁பணிநிறைவு / இறப்பின்போது இருப்பிலுள்ள ELநாட்களுக்குரிய (அதிகபட்சம்240) அப்போதைய சம்பளம் மற்றும் அகவிலைப்படி வீதத்தில் கணக்கிடப்பட்டு திரள்தொகையாக ஒப்பளிக்கப்படும்.

🍁அதிகபட்சம் தொடர்ந்து 180 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுக்கலாம்.

180 நாட்களுக்கு மேற்பட்ட விடுப்புக்கு வீட்டு வாடகைப்படி கிடைக்காது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

INSPIRE AWARD 2025-2026 | Date extended

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG-20250915-WA0016

INSPIRE AWARD 2025-2026

விண்ணப்பிக்க கடைசி நாள் 30-09-2025

 Date extended

இன்று கடைசி நாளாக இருந்தது. தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TET - Maths - 6 To 10th Book Back - 1 Mark Question And Answer

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

TET - Maths - 6 To 10th Book Back - 1 Mark Question And Answer - Download here