பழங்குடியினர் மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

  Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

.com/sortd-service/imaginary/v22-01/jpg/large/

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்வி மேம்பாட்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல கல்வி உதவித்தொகை திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


அதன்படி, 2025-2026ம் கல்வியாண்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் இன்று (15ம் தேதி) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே கல்லூரியில் சேர்க்கை பெற்று பயின்று வரும் புதுப்பித்தல் மாணாக்கர்கள் கல்வி உதவித்தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.


2025-2026ம் கல்வியாண்டில் கல்லூரியில் முதலாண்டு சேர்க்கை பெற்ற மாணவர்கள் மற்றும் 2024-2025ம் கல்வியாண்டில் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தற்போது தாங்கள் பயிலும் கல்லூரியில் அலுவலரை அணுகி விண்ணப்பிக்கலாம். UMIS -University Management Information System (https://umis.tn.gov.in/) என்ற இணையதளத்தில் கல்லூரி மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TET Paper 2 - ஆசிரியர்கள் எழுதுவதற்கு Department NOC பெற விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்

 NOC%201



தற்போது அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டு விண்ணப்பிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியது.


TET II எழுதுவதற்கு தடையில்லா சான்று பெற விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் :


✏️ விண்ணப்பக்கடிதம்

✏️ TET notification page

✏️ X standard marksheet and genuine

✏️ XII  marksheet and genuine

✏️ D.T.Ed diploma and marksheet and genuine

✏️ B.A. or B. Sc permission ( if issued by Office) cumulative marksheet , convocation and its genuine

✏️ B.Ed permission ( if issued by Office) cumulative marksheet , convocation and its genuine.


 FROM SR :

✏️ SR front page 

✏️ X,XII, D.T.Ed, degree, B.Ed - its marksheet, permission, genuine entry pages

Income Tax - புதிய வரி விதிப்பில் ஒரு ட்விஸ்ட் - ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்திற்கு எப்போதும் வரி விலக்கு கிடைக்காது - ஏன்?

  Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

income-tax


2025-26 பட்ஜெட்டில், புதிய வரி முறையில் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரையிலான வருமானம் (ரூ.75,000 நிலையான விலக்குடன் ரூ.12.75 லட்சம்) முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்ததன் மூலம் வரி செலுத்துவோருக்கு அரசாங்கம் ஒரு பெரிய நிவாரணத்தை வழங்கியது. இந்த அறிவிப்பைக் கேட்டதும் பலர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர், ஆனால் 'வரி விலக்கு' என்ற இந்த வார்த்தைக்குப் பின்னால் ஒரு பெரிய சிக்கல் மறைந்துள்ளது - மேலும் இந்த சிக்கல் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கலாம்.


உண்மையில், இந்த விலக்கு அனைத்து வகையான வருமானங்களுக்கும் பொருந்தாது. குறிப்பாக, உங்கள் வருமானத்தில் மூலதன ஆதாயம் இருந்தால், விஷயங்கள் மாறும்.


பிரிவு 87A என்றால் என்ன, அது ஏன் முக்கியமானது?

பிரிவு 87A இன் கீழ், வரி விதிக்கக்கூடிய வருமானம் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை இருந்தால் முழு வரியும் தள்ளுபடி செய்யப்படுகிறது.


பழைய வரி முறையில்: ரூ.5 லட்சம் அல்லது அதற்கும் குறைவான வரி விதிக்கக்கூடிய வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.12,500 வரை வரிச் சலுகை கிடைக்கும்.


புதிய வரி முறையில் (நிதியாண்டு 2025-26 முதல்): ரூ.12.75 லட்சம் அல்லது அதற்கும் குறைவான வரிவிதிப்பு வருமானம் உள்ளவர்கள் ரூ.60,000 வரை வரிச் சலுகையைப் பெறலாம், இதனால் அவர்களின் வரி பூஜ்ஜியமாகக் குறையும்.


புதிய வரி முறையில் 87A விலக்கு வரம்பு பல ஆண்டுகளாக படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது - முதலில் அது ரூ. 5 லட்சம், பின்னர் ரூ. 7 லட்சம், மற்றும் 2025 பட்ஜெட்டில், அது ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டது (நிலையான விலக்குடன் ரூ. 12.75 லட்சம்).


ஆனால் மூலதன ஆதாயங்களின் விளையாட்டு வேறுபட்டது


2025 பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரிவு 87A இன் விலக்கு என்பது குறுகிய கால மூலதன ஆதாயம் (STCG) போன்ற 'சிறப்பு வருமானத்திற்கு' பொருந்தாது என்று தெளிவுபடுத்தினார்.


அதாவது, உங்கள் ஆண்டு சம்பளம் ரூ. 12 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், ஆனால் அதில் பங்குகள், பரஸ்பர நிதிகள் அல்லது பிற சொத்துக்களிலிருந்து குறுகிய கால மூலதன ஆதாயம் அடங்கும் என்றால், அந்த மூலதன ஆதாயத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படாது.


உதாரணமாக:

உங்கள் சம்பளம் ரூ. 11.5 லட்சமாகவும், குறுகிய கால மூலதன ஆதாயம் ரூ. 1 லட்சமாகவும் இருந்தால்.


உங்கள் மொத்த வருமானம் ரூ.12.5 லட்சமாக மாறும்.


சம்பளப் பகுதிக்கு 87A விலக்கு அளிக்கப்படலாம், ஆனால் குறுகிய கால மூலதன ஆதாயமான ரூ.1 லட்சத்திற்கு 15% வரி செலுத்த வேண்டும்.


அதாவது, ரூ.12 லட்சத்தின் மொத்த வருமானம் மூலதன ஆதாயம் போன்ற சிறப்பு வருமானப் பகுதி இல்லாவிட்டால் மட்டுமே 'வரி இல்லாதது'.


நிலையான விலக்கிலும் வரைவுப் பிழை ஏற்பட்டது


பட்ஜெட் 2025 இல், புதிய வரி முறையில் நிலையான விலக்கை ரூ.50,000 இலிருந்து ரூ.75,000 ஆக அரசாங்கம் உயர்த்தியது, இதன் காரணமாக ரூ.12.75 லட்சம் வரை சம்பள வருமானம் உள்ளவர்களுக்கு வரி விதிக்கப்படாது.


ஆனால், 1961 வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 115BAC(1A) இன் பிரிவு (iii) இல் உள்ள வரைவுப் பிழை காரணமாக, இந்த அதிகரிப்பு காகிதத்தில் ரூ.50,000 ஆகவே இருந்தது.


இந்தத் தவறு ஆகஸ்ட் 2025 இல் திருத்தம் மூலம் சரி செய்யப்பட்டது, இப்போது ரூ.75,000 நிலையான விலக்கு நடைமுறைக்கு வந்துள்ளது. 


"புதிய வருமான வரி முறையில் சம்பளம் வாங்கும் வரி செலுத்துவோருக்கு ரூ.75,000 நிலையான விலக்கு அமல்படுத்தப்படுவது குறித்து தெளிவு அளிக்கப்படுகிறது," என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகஸ்ட் 13, 2025 அன்று மக்களவையில் கூறினார்.


சுருக்கமாக

புதிய வரி முறையில் ரூ.12.75 லட்சம் வரையிலான வருமானம் (சம்பளம் + ரூ.75,000 நிலையான விலக்கு) வரி விலக்கு அளிக்கப்படுகிறது.


மூலதன ஆதாயங்கள் போன்ற சிறப்பு வருமானங்கள் 87A விலக்குக்கு தகுதியற்றவை, அதாவது அந்த வருமானத்திற்கு வரி விதிக்கப்படும்.


பழைய வரி முறையில், ரூ.5 லட்சம் வரை வரி விதிக்கக்கூடிய வருமானம் உள்ளவர்களுக்கு 87A விலக்கு ரூ.12,500 வரை மட்டுமே இருந்தது.


புதிய வரி முறையில், 87A விலக்கு வரம்பு பல ஆண்டுகளாக கடுமையாக அதிகரித்துள்ளது, ஆனால் நிபந்தனைகளும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாகச் சேர்க்கக் கோரிய மனு தள்ளுபடி

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாகச் சேர்க்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்தது.

- மத்திய அரசின் விதிகளின்படி, 6 ஆம் வகுப்பு முதல் ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ் பயிற்றுவிக்கப்படும் என்றும், தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்றும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

- நீதிமன்றம், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் பாடத்திட்டத்தில் தலையிட முடியாது என்றும், கோரிக்கைகள் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகுமாறும் உத்தரவிட்டது.




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ராணுவப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
நாடு முழுவதும் உள்ள ராணுவ பள்ளிகளில் (Army Public Schools) முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

dinamani%2F2025-08-13%2Feqmzg7cc%2FAWES

நாடு முழுவதும் உள்ள ராணுவ பள்ளிகளில் (Army Public Schools) முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 16 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இது குறித்த விவரங்கள்:


பணி: Post Graduate Teachers (PGT)


பணி: Trained Graduate Teachers (TGT)


பணி: Primary Teachers (PRT)


தகுதி: முதுகலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்போர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பாடப்பிரிவில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்திருக்க வேண்டும். தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப்பட்டம் பெற்று பி.எட் அல்லது ஆசிரியர் பணிக்குரிய டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.


மேற்கண்ட கல்வித் தகுதியுடன் மத்திய அரசு நடத்தும் ஆசிரியா் தகுதித் தோ்வில் (சிடெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். சிடெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


வயது வரம்பு: 1.4.2025 தேதியின்படி 40-க்குள் இருக்க வேண்டும். பணி அனுபவம் உள்ளவர்களுக்கு வயது வரம்பு சலுகை வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்வு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும்.


எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் விபரம், தேர்வு நேரம் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்.


மேலும், எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி, தேர்வு மைய முகவரி அடங்கிய அழைப்புக் கடிதம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.


விண்ணப்பக் கட்டணம்: ரூ.385 மட்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: www.awesindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.


எழுத்துத் தேர்வு செப்டம்பர் 21, 22 தேதிகளில் நடைபெறும்.


தேர்வு முடிவுகள் அக்டோபர் 8-ஆம் தேதிக்குப் பிறகு வெளியிடப்படும்.




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஹெல்த் கேர் படிப்பை ஆன்லைனில் கற்பிக்க தடை

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

kalvi_L_250817084526000000

பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.யின், 592வது கூட்டம், கடந்த மாதம் 23ம் தேதி நடந்தது.


இந்த கூட்டத்தில், மத்திய சுகாதாரத் துறையின் பாடத்திட்டங்களை, திறந்தநிலை, தொலை துாரம் மற்றும் ஆன்லைன் கல்வி முறையில் கற்றுக் கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.


அதன்படி, உளவியல், நுண்ணுயிரியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து அறிவியல், உயிரி தொழில்நுட்பம், மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை ஆகிய, ஹெல்த் கேர் படிப்புகளை, திறந்தநிலை, தொலைதுாரம் மற்றும் ஆன்லைன் முறையில் கற்பிக்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு, தேசிய கூட்டு மற்றும் சுகாதார சேவை சட்டத்தின்படி, வரும் 2025 - 26ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக, யு.ஜி.சி. அறிவித்து உள்ளது.


நாட்டில் உள்ள எந்த ஒரு உயர் கல்வி நிறுவனமும், உளவியல் உட்பட, ஹெல்த் கேர் தொடர்பான படிப்புகளை, திறந்த நிலை, தொலைதுாரம் மற்றும் ஆன்லைனில் கற்பிக்க கூடாது என, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )