VRS - விருப்ப ஓய்வு பெற விழைவோர் கீழ்க்காணும் விதிமுறைகளைத் தெரிந்து கொள்வது அவசியம்.

  Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

அரசுப் பணியிலிருந்து தற்போது விருப்ப ஓய்வு பெற விழைவோர் விருப்ப ஓய்வு பற்றிய கீழ்க்காணும் விதிமுறைகளைத் தெரிந்து கொள்வது அவசியம்.

நிகர பணிக்காலம்

ஒருவர் 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்துவிட்டால் விருப்ப ஓய்வு பெறலாம்தான். ஆனால், 20 ஆண்டு பணி என்பது மொத்த பணிக்காலம் அல்ல. அதாவது, அரசு ஊழியர் ஒருவர் 01.04.2002 அன்று பணியில் சேர்ந்திருப் பார் எனில், 31.03.2022-ம் தேதியுடன் 20 வருடம் நிறைவு பெறுகிறது. இது (Gross service) மொத்த பணிக்காலம்தான்.

இந்த மொத்த பணிக்காலத்தில் அந்த ஊழியர், மருத்துவச் சான்று சமர்ப்பிக்காமலே எடுத்துக்கொண்ட சம்பளமில்லாத விடுப்பு, தண்டனை என அறிவிக்கப்பட்ட பணிக்காலம், ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பணிமாற்றம் செய்யப்பட்டபோது தகுதிக்குமேல் எடுத்துக்கொண்ட பணியேற்பு இடைக்காலம், வரண்முறை (Regulation) செய்யப்படாத பணிக்காலம், பிள்ளைப் பருவபணி (18 வயதுக்குக் கீழ் உள்ளபோது செய்த பணி) ஆகிய அனைத்தும் தகுதியற்ற பணிக்காலம் எனப்படும். மொத்த பணிக் காலத்தில், தகுதியற்ற பணிக்காலத்தை கழித்தது போக நிகர பணிக்காலம் 20 ஆண்டு இருக்க வேண்டும் என்பது விருப்ப ஓய்வுக்கு அவசியம்.

மூன்று மாத நோட்டீஸ் அவசியம்

20 வருட நிகரப்பணியை ஓர் ஊழியர் நிறைவு செய்து முடித்திருந்தாலும், ஒருவர் நினைத்த மாத்திரத்தில் விருப்ப ஓய்வு பெற்றுவிட முடியாது. இதற்கான மூன்று மாத முன்னறிவிப்பு அவசியம். அதாவது, 30.04.2022 பிற்பகல் ஓய்வு பெற விரும்பும் ஊழியரின் விருப்ப ஓய்வு விண்ணப்பம் அதை அனுமதிக்கும் அதிகாரம் பெற்ற நியமன அதிகாரிக்கு (Appointing authority) 01.02.22-க்குள் கிடைத்திருக்க வேண்டும். இதுதான் மூன்று மாத நோட்டீஸ் காலம்.

அனுமதிக்குப் பிறகுதான் அடுத்த நடவடிக்கை

வயது முதிர்வில் (அதாவது, 60 வயது பூர்த்தியான பிறகு) ஓய்வு பெறுவது Superannuation எனப்படுகிறது. இவ்வாறு யாரெல்லாம் அடுத்த ஆறு மாதங்களில் (அல்லது ஒரு வருடத்தில்) 60 வயதை அடையப்போகிறார்களோ, அதைக் கண்காணித்து ஓய்வுக்கால பணப்பலன் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கு வசதியாக ஒவ்வோர் அலுவலகத்திலும் ஒரு பதிவேடு பராமரிக்கப்படுகிறது.

இதன்படி ஊழியர் ஓய்வு பெறுவதற்கு ஆறுமாதம் முன்பே கூட ஊழியரிடமிருந்து ஓய்வுக்கால பணப்பலன் பெறுவதற் கான விண்ணப்பத்தைப் பெற்று அலுவலகத்தின் பரிந்துரை யுடன் மாநிலக் கணக்காயருக்கு அனுப்பப்பட்டுவிடும். இதன் பயனாக ஊழியர் ஓய்வு பெறும் தேதிக்கு முன்பே அவரது ஓய்வுக்கால பணப்பலன் ஆணைகள் மாநிலக் கணக்காயரிடமிருந்து வந்து காத்துக்கிடக்கும். ஓய்வு பெற்ற மறுநாளே ஓய்வுக்கால பணப்பலன்களை பெற்றுவிடலாம்.

ஆனால், விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு இந்த வசதி கிடையாது. அதாவது, அவர் விருப்ப ஓய்வு கோரும் தேதிக்கு முன்பே ஓய்வுக்கால பணப்பலன் விண்ணப்பம் மாநிலக் கணக்காயாருக்கு அனுப்பப்பட மாட்டாது. அந்த ஊழியர் விருப்ப ஓய்வு கேட்ட தேதிக்குப் பிறகே, அதற்கான ஆணை வரப் பெற்றபின் ஓய்வுக்காலப் பணப்பலன் விண்ணப்பம் மாநிலக் கணக்காயருக்கு அனுப்பப்படும். இதனால் தாமதம் தவிர்க்க முடியாததாக இருக்கும்.

இந்த விதிமுறை தெரியாத சிலர் வயது முதிர்வுத் தேதிக்கு இரண்டு, மூன்று மாதத்துக்கு முன்பே விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தாலும், இயல்பான தேதிக்குப் பிறகே பணப்பலன் கிடைக்கும். எனவே, ஓய்வுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பவர்கள், அந்த முடிவை எடுப்பதில் சற்று பொறுமை காட்டுவது நல்லது!

அரையாண்டு கணக்கீடுதான்...

ஓய்வூதியப் பலன்களான ஓய்வூதியம், பணிக்கொடை இரண்டுக்கும் பணிக்காலம் (Service period) என்பது அரை யாண்டுகளில் கணக்கிடப் படுகிறது. அதாவது, ஓர் ஊழியர் 25 ஆண்டு பணி முடித்தவர் எனில், அவரது பணிக்காலம் 50 அரையாண்டுகள் என எடுத்துக் கொள்ளப்படும்.

ஒருவர் 22 ஆண்டும் 2 மாதமும் 29 நாளும் பணி நிறைவு செய்திருந் தால், அவரது பணிக்காலம் 22 ஆண்டுகள் என எடுத்துக் கொள்ளப்படும். அதாவது, 44 அரையாண்டுகளாகக் கணக்கிடப்படும். ஆனால், 22 ஆண்டும் 3 மாதமும் பணி நிறைவு செய்திருந்தால், இவரது பணி என்பது 45 அரையாண்டு களாகக் கணக்கிடப்படும். அதாவது, 2 மாதம் 29 நாள் வரை யான பணிக்காலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. மூன்று மாதம் என்பது ஓர் அரையாண்டாகக் கணக்கிடப் பட்டுவிடும். இதன்படி 8 மாதம் 29 நாள் என்பது ஓர் அரையாண்டு -ஆக கணக்கிடப்படும். 9 மாதம் என்பது இரண்டு அரையாண்டு களாகக் கணக்கில் சேரும்.

விருப்ப ஓய்வு பெறுபவர் மேற்கண்ட கணக்கீட்டைப் புரிந்துகொண்டு, விருப்ப ஓய்வு தேதியைத் தேர்வு செய்தால் லாபகரமாக இருக்கும். அதாவது, மேற்கண்ட 22 ஆண்டு 2 மாதம் 29 நாள் பணி செய்திருப்பவர் இன்னும் ஒரே ஒரு நாள் தாமதித்து தனது விருப்ப ஓய்வுத் தேதியை நிர்ணயம் செய்வதன் மூலம் ஓர் அரையாண்டுக்கான கூடுதல் பணப்பலன் பெறலாம். அதாவது, அடிப்படைச் சம்பளம் 90,000 பெறுபவர் மேற்கண்டபடி கணக்கிட்டு ஓர் அரையாண்டை தனது சர்வீஸில் சேர்ப்பார் எனில், அவரது உடனடிப் பணப்பலன் ஆச்சர்யப்பட வைக்கும்.

அதாவது, 20 வயதில் அரசுப் பணியில் சேர்ந்து தனது 43-வது வயதில் விருப்ப ஓய்வு பெறும் ஊழியர், தான் தேர்வு செய்த விருப்ப ஓய்வுத் தேதியை ஒரே ஒரு நாள் ஒத்திவைப்பதன் மூலம் தனது இயல்பான பென்ஷன் கம்யூடேசன் தொகையான 14,61,078 ரூபாய்க்குப் பதிலாக 14,88,135 ரூபாய் பெறுவார். அதாவது, ஒரே ஒரு நாள் விருப்ப ஓய்வைத் தள்ளிபோடுவதற்கான வெகுமதி 27,057 ரூபாய்.

இதே போல், தனது பணிக் கொடையாக 15,91,650 ரூபாய் பெற்றிருக்க வேண்டியவர் 16,21,125 ரூபாயைப் பெறுவார். விருப்ப ஓய்வில் செய்த ஒருநாள் தாமதம் அள்ளித்தரும் தொகை 29,475 ரூபாய். இதையெல்லாம்விட 53,055 ரூபாயை பென்ஷனாகப் பெற வேண்டிய இவர் 54,038 ரூபாயை தனது மாதாந்தர பென்ஷனாகப் பெறுவார். ஒவ்வொரு மாதமும் இவருக்குக் கூடுதலாகக் கிடைக்கும் பென்ஷன் 983 ரூபாய். கால ஓட்டத்தில் இந்த 903 ரூபாய் 5,000, 6,000 ஆகக்கூட உயரலாம்.

முழு சர்வீஸ்

இன்னும் சிலர், ‘30 வருஷம் சர்வீஸ் முடிஞ்சு போச்சு. இதுக்கு மேல் சர்வீஸ் பண்ணி எதுவும் அதிகமாகக் கிடைக்கப் போவ தில்லை’ என்று நினைக்கின்றனர். உண்மை அப்படி அல்ல. பென்ஷனுக்குத்தான் முழு சர்வீஸ் என்பது 30 வருடம் ஆகும். பணிக்கொடைக்கு முழு சர்வீஸ் என்பது 33 வருடம் ஆகும். அதாவது, 30 வருடம் பணி முடித்தால் கடைசியாக வாங்கிய அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவிகிதத்தை பென்ஷனாகப் பெறலாம். இதுதான் முழு பென்ஷன் பெறுவதற்கான கணக்கு. ஆனால், பணிக்கொடை 15 மாத சம்பளத் தொகையாக இருக்கும். 33 வருடம் பணி நிறைவு செய்தால், பணிக்கொடை என்பது 16.5 மாத சம்பளம் கிடைக்கும் என்பதை விருப்ப ஓய்வு பெற நினைப்பவர்கள் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சம்பள கமிஷன்

தற்போதைய பணத்தேவையைத் தவிர்க்கக்கூடிய அல்லது தள்ளிப்போட முடிந்தவர்களுக்கு, பணிக்காலம் இன்னும் நிறைய மீதி இருக்குமானால், வரப்போகும் எட்டாவது சம்பள கமிஷன் வரைகூட பணியில் நீடிக்கலாம். காரணம், சம்பள கமிஷன் பரிந்துரை ஓய்வூதியம், பென்ஷன் கம்யூடேசன் போன்றவற்றை இரு மடங்காகக்கூட அதிகரித்தாலும் ஆச்சரியமில்லை. இதற்காகக் காத்திருக்க வேண்டியது இன்னும் நான்கு ஆண்டுகள் மட்டுமே.

எனவே, விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கும் முன் மேற்கண்ட காரணிகளைப் பரிசீலித்து முடிவெடுப்பது நல்லது. 45 வயதில் ஓய்வு பெற்று சுமார் 40 வருட ஓய்வுக் கால வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்!

விருப்ப ஓய்வுக்கான முழுமையான விதி!

சுமார் 30 வயது வாக்கில் அரசுப் பணியில் சேர்ந்த ஓர் ஊழியர் தற்போது 50 வயதினராக இருப்பார். உடல்நலிவு அல்லது நிதித் தேவை காரணமாக இவருக்கும்கூட விருப்ப ஓய்வு தவிர்க்க முடியாததாக இருக்கலாம். என்றாலும், தனது பணிக்காலம் 20 ஆண்டுக்கு குறைவாக இருப்பதன் காரணமாக இவர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருக்க மாட்டார். காரணம், விருப்ப ஓய்வு பற்றிய விதியில் ஒரு பகுதி மட்டுமே பரவலாகத் தெரிந்திருக்கிறது. அதன் மற்றொரு பகுதி அவ்வளவாகத் தெரியவில்லை. அதாவது, ‘20 வருடப்பணி செய்தவர் அல்லது 50 வயதானவர் விருப்ப ஓய்வு பெறலாம்’ என்பதே அந்த விதி. எனவே, இத்தகைய 50 வயதினரும் விருப்ப ஓய்வு கோரலாம்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

விருப்ப ஓய்வு (VRS) கொடுத்தால் ஓய்வூதியம் (Pension) மற்றும் Commutation எவ்வளவு கிடைக்கும்? - கணக்கீடு

  Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் Full Pension கிடைக்கும். Full Pension என்பது கடைசி மாத ஊதியத்தில் Basic Pay, DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் Health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும்.

   உதாரணமாக 30ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் அடிப்படை ஊதியமும் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும். இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100 ஓய்வூதியம் (பென்ஷனாகக்) கிடைக்கும். (அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு அதை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100health allowanceஐக் கூட்ட வேண்டும். இது Commutation வேண்டாம் என்பவர்களுக்கு. Commutation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும். அதற்கான விவரம்:

முதலில் Commutation என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும். இது வட்டி இல்லாத கடனல்ல. வட்டி உண்டு.

    30ஆண்டுகளுக்கு  மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர் கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் (Basic Pay) பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூபாய் ஹெல்த் அலவன்ஸூம் சேர்ந்து பென்ஷனாகக்கிடைக்கும் என்று முந்தைய பதிவில் பார்த்தோம்.

    அதாவது (30ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெற்றவர்) பணியிலிருக்கும்போது 40000ரூபாய் அடிப்படை ஊதியம் வாங்கியிருந்தார் என்றால் ஓய்வு பெற்றபின் அவருடைய அடிப்படை ஊதியம் 20000ரூபாயாக ஆகிவிடும். இப்போது இவர் Commutation வேண்டும் எனறு விரும்புகிறார் எனில் இவருக்கு எவ்வளவு தொகை கமுட்டேஷனாகக் கிடைக்கும் என்று பார்ப்போம்.

அடிப்படை ஊதியத்தில் மூன்றில் ஒரு பகுதியை கணக்கிட்டு அதை 120ஆல் பெருக்கி வரும் தொகையே கமுடேஷன் ஆகும் .பிடித்தம் செய்யும்போது 180 மாதங்களுக்குப் பிடிப்பார்கள்.

  ஓய்வு பெற்றபின் இவருடைய அடிப்படை ஊதியம் 20000ரூபாய். இதில் மூன்றில் ஒருபாகம் =20000÷3=6666.66 , இதை

6667 என்று எடுத்துக்கொன்டு 120ஆல் பெருக்க 6667×120=800040 (எட்டு லட்சத்து நாற்பது) ரூபாய் Commutation கிடைக்கும். பென்ஷன் தொகையில் ஒவ்வொரு மாதமும் ரூ.6667பிடித்தம் செய்வார்கள். இந்த பிடித்தம் 180 மாதங்களுக்குத் தொடரும்.(அதாவது6667ஐ 120ஆல் பெருக்கிக் கொடுத்துவிட்டு இதே 6667ஐ 180 மாதங்களுக்குப் பிடிப்பார்கள். அப்ப வட்டி என்பது6667×60=400020 ரூபாய் ஆகும். பதினைந்து ஆண்டுகள் என்று பார்க்கும்போது இது குறைந்த வட்டிதான்). இடையில் இவர் இறந்துவிட்டால் இந்தப் பிடித்தம் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும். இவர் மனைவிக்குக் கொடுக்கப்படும் பென்ஷனில் பிடித்தம் செய்யப்ப்பட மாட்டாது./

(பென்ஷன் வாங்குபவர் இறந்துவிட்டால் அவர் வாங்கிய பென்ஷனில் பாதி அவர் மனைவிக்குப் பென்ஷனாகக் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.)

  30 ஆண்டு முடித்த 40000ரூபாய் அடிப்படை ஊதியம் 5000ரூபாய் DAவும் பெற்ற ஒருவர் கமுடேஷன் வேண்டாம் எனும்போது அவருக்கு 22600ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும் என்று பார்த்தோம். இவரே கமுட்டேஷனை விரும்புகிறார் என்றால் இவருக்கு 6667ஐக் கழிக்க 22600-6667=15933 ரூபாய் பென்ஷன் கிடைக்கும்.

   இவரே 24 வருடம் சர்வீஸ் செய்திருந்தால் இவருடைய கமுட்டேஷனைப் பார்ப்போம்.

   ஓய்வு பெற்றபின் இவருடைய பேசிக் 40000÷2×24÷30=16000 ஆகும். இதில் மூன்றிலொரு பாகம் 16000÷3=5333.33. இதை 5333என எடுத்துக்கொண்டு அதை120 ஆல் பெருக்க 

5333×120=639960ரூபாய் கமுட்டேஷனாகக் கிடைக்கும். கமுட்டேஷன் வாங்கியபின் இவருடைய பென்ஷன்

18100-5333=12767கிடைக்கும் (18100 எப்படி வந்ததென்பது தெரியும். தெரியவில்லையெனில் முந்தைய கமெண்ட்டில் பார்க்கவும்)

    நண்பர்களே மேற்கண்ட விவரங்களை வைத்து அவரவர் சர்வீஸ் செய்த ஆண்டுகள் மற்றும் அவரவர் பெற்ற பேசிக்கிற்குத் தகுந்தாற்போல் பென்ஷன் மற்றும் கமுடேஷனைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

   பணியில் உள்ளவர்களுக்குத் தற்போது 46%DA வழங்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் கூடிக்கொண்டே வரும்.

   ஆகவே இதை ஒரு உதாரணமாகக் கணக்கில் கொள்ளவும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

VRS Application - விருப்ப ஓய்வில் செல்ல விண்ணப்பித்தல் - Check List

  Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

விருப்ப ஓய்வில் செல்ல விண்ணப்பித்தல் : சரிபார்ப்பு பட்டியல் 

அடிப்படை விதிகள் - அடிப்படை விதி 56 (3)ள் கீழ் தன்விருப்ப ஓய்வில் செல்ல அரசுப் பணியாளர்கள் மனு கொடுத்தல் - விதிமுறைகளை தவறாது கடைபிடித்தல் - அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

அரசு பணியாளர்கள் தன் விருப்ப ஓய்வில் செல்ல விண்ணப்பித்தல் - விதிமுறைகளை தவறாது கடைபிடித்தல் - பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அரசுக் கடிதம் (நிலை) எண் : 121 , நாள் : 03-07-2008 

Click Here to Download - VRS Application - Check List - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

முதுகலை ஆசிரியர் தாவரவியல் / விலங்கியல் / உயிரியல் பணியிடத்தை பள்ளி அளவைப் பதிவேட்டில் முறையாக பதிவு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

  Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

முதுகலை ஆசிரியர் தாவரவியல் / விலங்கியல் / உயிரியல் பணியிடத்தை பள்ளி அளவைப் பதிவேட்டில் முறையாக பதிவு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (HS) உத்தரவு!

DSE - PG Bio Post Maintaining in Scale Register

IMG_20250806_093233

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பொதுத் துறை வங்கிகளில் 10,277 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

 Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

dinamani%2Fimport%2F2017%2F5%2F1%2Foriginal%2FIT-jobs

பொதுத்துறை வங்கிகளில் நாடு முழுவதும் காலியாக உள்ள 10,277 எழுத்தர்(கிளார்க்) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பொதுத் துறை வங்கிகளில் 10,277 காலியிடங்கள் அறிவிப்பு :

பொதுத்துறை வங்கிகளில் நாடு முழுவதும் காலியாக உள்ள 10,277 எழுத்தர்(கிளார்க்) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை வங்கிகள் பணியாளர் தேர்வாணையம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 21 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடந்த ஆண்டு 6,18 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியான நிலையில், நடப்பாண்டு காலியிடங்களுக்கான எண்ணிக்கை 10,277 ஆக அதிகரித்துள்ளது.

பணி: Customer Service Associates (Clerk)

காலியிடங்கள்: 10,277. தமிழ்நாட்டில் 894, புதுச்சேரிக்கு 19 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சம்பளம்: மாதம் ரூ.24,050 - 64,480

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21.8.2025 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஐபிபிஎஸ் அமைப்பால் நடத்தப்படும் 100 மதிப்பெண்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு, 200 மதிப்பெண்களுக்கான முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும். இந்த தேர்வில் ஆங்கிலப்பாடத்தை தவிர மற்ற பாட வினாக்களுக்கு தமிழில் பதில் எழுத முடியும்.

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் மையம்: சென்னை, கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி,தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விருதுநகர்.

முதன்மைத் தேர்வு நடைபெறும் மையம்: சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

முதல்நிலை் தேர்வு அக்டோர் மாதம் நடைபெறும். அதில் தகுதி பெறுபவர்கள் நவம்பர் மாதம் நடைபெறும் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.175, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.850 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக, ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.8.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Special Cash Incentive - தவறுதலாக உள்ள மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை சரி செய்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

  Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250806_094045

Special Cash Incentive - தவறுதலாக உள்ள மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை சரி செய்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

DSE - Special Cash Incentive Proceedings.pdf

👇👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

11, 12-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்: பள்ளிகளில் நாளை முதல் விநியோகம்

  Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

1372049

தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை (ஆக.7) முதல் விநியோகிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட உதவி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச்மாதம் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் மே மாதம் வெளியாகின. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை (ஆக.7) முதல் விநியோகிக்கப்பட உள்ளது.

இதற்கான சான்றிதழ்கள் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வழியாக பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள்மூலமும், தனித் தேர்வர்கள், தேர்வெழுதிய மையங்களின் வாயிலாகவும் அசல் சான்றிதழ்களைப் பெற்று கொள்ளலாம். கூடுதல் தகவல்களை தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

School Education- 500 Slogans for # TN Against Drugs Social Media Competition- To Chief Educational officers -reg .

  Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
 School Education- 500 Slogans for # TN Against Drugs Social Media Competition- To Chief Educational officers -reg 

IMG_20250806_135250_wm

The Mission Management unit drug free Tamil Nadu has announcement a competition on drug free Tamil Nadu challenge from august 5th 2025 for all school anti drug coordinators , teachers and students. 

The main focus of the competition is spreading awareness for the drug free Tamil Nadu . The competition guidelines for school social media hash tag challenge for drug free Tamil Nadu is enclosed here with . Copy of guidelines poster and sample 500 Slogans to be used are enclosed herewith .

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

OoSC Survey - பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளுதல் - வழிகாட்டுதல்கள் - SPD Proceedings

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழ்நாடு பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகளுக்கான சிறப்புப் பயிற்சி செயல்பாடுகள் - பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகளை அடையாளம் காணுதல் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளுதல் பள்ளியில் சேர்த்தல் மற்றும் தக்கவைத்தல் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான வழிகாட்டுதல்கள் - சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 

Click Here to Download - OoSC Survey Circular 2025-26 - SPD Proceedings - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

NHIS - திட்டத்தின் கீழ் மேற்கொண்ட செலவுகளை திரும்பப் பெறுவதற்கு, ஆவணங்களை அனுப்ப உத்தரவு - Treasury Letter

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

01.07.2024 முதல் 30.06.2025 வரையிலான காலத்தில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொண்ட செலவுகளை திரும்பப் பெறுவதற்கு, 19.09.2025க்குள் ஆவணங்களை அனுப்ப கருவூலகங்கள் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் உத்தரவு!

Click Here to Download - NHIS Reimbursement - Treasury Letter - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

DEO Promotion : மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடத்திற்கு பதவி உயர்வு / பணிமாறுதல் அளித்து ஆணை வெளியீடு.

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250805_175653

தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி விதிகளில் வகுப்பு- IV இன் கீழ்வரும் மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடங்கள் அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு - மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடத்திற்கு பதவி உயர்வு / பணிமாறுதல் அளித்து ஆணையிடுதல் - சார்பு .

DEO Promotion Order...pdf

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் - இந்திய அஞ்சல் துறையின் மூலம் மேற்கொள்ள அனுமதித்து அரசாணை வெளியீடு!

  Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250805_212612

பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் - இந்திய அஞ்சல் துறையின் மூலம் மேற்கொள்ள அனுமதித்து அரசாணை வெளியீடு!

 G.O.Ms.No.182, Aadhar Biometric to Students - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

2025-2026ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் தொடர்பான விவரங்களை `Udise+ தளத்தில்` 30.09.2025க்குள் முடிக்க மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250805_223048

2025-2026ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் தொடர்பான விவரங்களை `Udise+ தளத்தில்` 30.09.2025க்குள் முடிக்க மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

SPD - UDISE 25-26 Progression.pdf