பல்வேறு படிப்புகளுக்கு இணைத்தன்மை (Equivalent) வழங்கி அரசாணை வெளியீடு!

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250611_183602

Public Services - Equivalence of Degrees - Equivalence of Degrees offered by various Universities Educational Institutions to the similar Degrees Recommendations Equivalence Committee - Approved - Orders.


பல்வேறு படிப்புகளுக்கு இணைத்தன்மை (Equivalent) வழங்கி அரசாணை வெளியீடு!

👇👇👇👇

G.O.Ms.No.99 - Equivalent - Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

School Morning Prayer Activities - 12.06.2025

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.06.2025

திருக்குறள் 

குறள் 6 :


பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்.


விளக்கம் :

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.


பழமொழி :

As clear as a bell. 


உள்ளங்கை நெல்லிக்கனி போல.


இரண்டொழுக்க பண்புகள் :


1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.


2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.


பொன்மொழி :


பொய் சொல்லி தப்பிக்க நினைக்காதே. உண்மையைச் சொல்லி மாட்டிக் கொள். ஏனென்றால் பொய் வாழ விடாது . உண்மை சாக விடாது. - விவேகானந்தர் 


பொது அறிவு : 


01. இந்தியாவின் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் யார்?


              திரு.ஞானேஷ்குமார்


             Thiru. Gyaneshkumar


02. முதன் முதலில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற  நகரம் எது?  


             கோலாலம்பூர் (சிங்கப்பூர்)


             Kualalumpur (Singapore)


English words & Tips :


 challenge     -      சவால்

 

arrange      -      ஏற்பாடு


Grammar Tips :


Common rule to use 'K' or' ck' in the end of a word 


'k'  is used after a consonant 

Ex: pink ,think,blink,work and etc 


'ck' is used after a short vowel sound 


Frock ,click, brick ,duck neck ,back and etc


அறிவியல் களஞ்சியம் :


நாம் கண்களை அனிச்சையாக சிமிட்டுவது, கண்களை ஈரமாக வைத்துக் கொள்வதற்கும், தூசுகளை நீக்குவதற்கும் உதவுகிறது என்பதை அறிவோம். அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், விழித்திரையில் விழும் ஒளிகளைக் கண் சிமிட்டுதல் முறைப்படுத்துகிறது என்றும், இதன் வாயிலாக அதிகமான நேரம் ஒரு பொருளைக் கவனித்துப் பார்க்க முடிகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. 


ஜூன் 12


குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.எல்.ஓ வின் 138 மற்றும் 182வது உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது.


இதன் அடிப்படையில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 2006 அக்டோபர் 10 ம் தேதி முதல் வீடு, சாலையோரக் கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் ௧௪ வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது.


நீதிக்கதை


 பிறரை வஞ்சித்தால் நீயும் வஞ்சிக்கப் படுவாய்


ஒரு காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி…அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது.


ஒரு நாள், கொக்கு ஒன்றை நரி சந்தித்தது. அதனுடன் நட்புக் கொண்டு…அந்த கொக்கை நரி தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது.


கொக்கும் …நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.


கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்குக்கு உண்ணக் கொடுத்தது. கொக்கு அதன் நீண்ட அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை…ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே …கொக்கு தன் அலகை அதனுள் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும்./

கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது…அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது.


நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு..ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது

நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை.

அதைக் கண்ட கொக்கு ..’நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் …என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள்.ஆனால் நான் அப்படியில்லை..உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்…என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.


தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது.


நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது.


அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.


பிறரை வஞ்சித்து அவர் படும் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது. மற்றவர்களுக்கு நாமும் எம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.


இன்றைய செய்திகள் - 12.06.2025


⭐RTE சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை, தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.


⭐2025 இறுதியில் இந்தியாவின் மக்கள் தொகை 1.46 பில்லியனை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

⭐மனிதர்களின் இதய ரத்தக்குழாய்களில் இருக்கும் அடைப்புகளை சரி செய்ய சிறிய அளவு ரோபோக்களை அமெரிக்காவை சேர்ந்த ட்ரெக்செல் பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


⭐ஜூன் 13 முதல் 16 வரை தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு  கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல் 


🏀விளையாட்டுச் செய்திகள்


🏀ஹாக்கி - FIH புரோ லீக்கில் இந்தியா Vs அர்ஜென்டினா.


🏀AFC ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் ஹாங்காங்கிடம் 0-1 என்ற அதிர்ச்சி தோல்வியை இந்தியா சந்தித்தது.


Today's Headlines


✏️ The Madras High Court has directed the Union Government to allocate the funds required for 25% reservation in private schools under the RTE Act to the Tamil Nadu. 


✏️ India's population is estimated to reach 1.46 billion by the end of 2025


✏️ Medical scientists at Drexel University in the US have invented small robots to repair blockages in human heart blood vessels.


✏️ Meteorological Department announced  Heavy rain in many districts of Tamil Nadu from June 13 to 16 


 *SPORTS NEWS*


🏀 Hockey - India vs Argentina in FIH Pro League

🏀India suffered a shock 0-1 defeat to Hong Kong in the AFC Asian Cup qualifiers.


Covai women ICT_போதிமரம்

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

பல்வேறு படிப்புகளுக்கு இணைத்தன்மை இன்மை (Not Equivalent) வழங்கி அரசாணை வெளியீடு!

   Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250611_183815


Public Services Equivalence of Degrees - Non - equivalence of Degrees offered by various Universities / Educational Institutions to the similar Degrees - Recommendation of Equivalence Committee - Approved - Orders - Issued .

பல்வேறு படிப்புகளுக்கு இணைத்தன்மை இன்மை (Not Equivalent) வழங்கி அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.100 - Not Equivalent - Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

பாரதியார் பல்கலைக்கழகத்தில் Project Assistant காலிப்பணியிடங்கள் – கல்வி தகுதி குறித்த முழு விவரங்களுடன்!

 பாரதியார் பல்கலைக்கழகத்தில் Project Assistant காலிப்பணியிடங்கள் – கல்வி தகுதி குறித்த முழு விவரங்களுடன்!


பாரதியார் பல்கலைக்கழகமானது Project Assistant பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.23,600/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Bharathiar University காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Assistant பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.

Project Assistant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழக வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Assistant ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.23,600/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bharathiar University தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.06.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

8ம், 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு!

 8ம், 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு!

இந்தியாவில், குழந்தைகள் வளர்ச்சி மற்றும் பெண்கள் நலன் தொடர்பான சேவைகளை வழங்கும் மிக முக்கியமான திட்டம் தான் அங்கன்வாடி (Anganwadi). இந்தத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் சமூகத்தின் அடித்தளத்திலிருந்து மக்களுக்காக செயலில் ஈடுபடுகிறார்கள்.

இந்த வலைப்பதிவில், அங்கன்வாடி வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்கள் – தகுதி, விண்ணப்ப முறை, தேர்வு விதிமுறை மற்றும் சம்பள விவரங்கள் ஆகியவற்றை தெரிந்துகொள்வோம்.

அங்கன்வாடி என்றால் என்ன?

ICDS (Integrated Child Development Services) திட்டத்தின் கீழ் செயல்படும் அரசுத் துறையான அங்கன்வாடி என்பது,

  • 0–6 வயது குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து, கல்வி

  • கர்ப்பிணி மற்றும் தாய்மார்களுக்கு சுகாதார சேவைகள்
    போன்ற பல சேவைகளை வழங்கும் மையமாகும்.

‍ பணியிட வகைகள்

அங்கன்வாடியில் பல்வேறு பணியிடங்கள் உள்ளன:

  1. அங்கன்வாடி வேலைக்காரர் (Anganwadi Worker)

  2. அங்கன்வாடி உதவியாளர் (Helper)

  3. மினி அங்கன்வாடி வேலைக்காரர்

  4. சூப்பர்வைசர் / மேற்பார்வையாளர் (தேர்வு மூலம்)

தகுதி (Eligibility)

  • கல்வித் தகுதி

    • வேலைக்காரருக்கு – 10ம் வகுப்பு தேர்ச்சி

    • உதவியாளருக்கு – 8ம் வகுப்பு தேர்ச்சி

    • மேற்பார்வையாளருக்கு – Degree

  • வயது வரம்பு

    • பொதுவாக 21 முதல் 40 வயது வரை

    • அரசு விதிகளின்படி இடஒதுக்கீடுகள் வழங்கப்படும்


விண்ணப்ப முறை

  • மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி அலுவலகம் மூலம் வேலைவாய்ப்பு அறிவிக்கப்படுகிறது.

  • பொதுவாக ஆன்லைனிலும், சில மாவட்டங்களில் ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

  • அரசு இணையதளங்கள் (Ex: https://icds.tn.gov.in) அல்லது மாவட்ட நிர்வாக இணையதளங்களில் அறிவிப்புகள் வெளியாகும்.

தேர்வு முறை

  • சில மாவட்டங்களில் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்படலாம்

  • பெரும்பாலான இடங்களில் Merit Basis (மதிப்பெண் அடிப்படையில்) தேர்வு நடைபெறும்

  • Interview மட்டும் இருந்தாலும் கூட, அனைத்து சான்றிதழ்களும் சரியாக இருக்க வேண்டும்.

சம்பள விவரங்கள்

பணியிட வகைமாத சம்பளம் (சராசரி)
வேலைக்காரர்₹7,000 – ₹10,000
உதவியாளர்₹3,500 – ₹5,000
மேற்பார்வையாளர்₹12,000 – ₹20,000

(மாநில அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப மாறலாம்)

தரமான சான்றிதழ்கள் தேவையா?

  • பள்ளி கடைசி கல்விச்சான்றிதழ்

  • குடியுரிமை, Nativity சான்றிதழ்

  • சாதி, வருமான சான்றிதழ் (இடஒதுக்கீடுக்கு)

  • ஆதார், வாக்காளர் அட்டை

  • வயது சான்றிதழ்

அங்கன்வாடி வேலைவாய்ப்பின் நன்மைகள்

  • பெண்களுக்கு நெருக்கமான பணியிடம்

  • சமூகத்தில் சேவை செய்யும் வாய்ப்பு

  • அரசு ஊதியம் மற்றும் நிலைத்த வேலை

  • பணிநேர வசதி (பகல் நேரத்தில் மட்டும்)

  • பணி பதவி உயர்வு வாய்ப்பு (Supervisor, Child Development Officer)

️ எப்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வரும்?

  • ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன

  • மார்ச் – ஜூன் காலப்பகுதியில் அதிகமாக வெளியாவது பொதுவான நடைமுறை


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்) 

அடுத்த கல்வியாண்டு முதல் போக்குவரத்து விதிகள் பாடம்

 போக்குவரத்து போலீஸ் துறை தயாரித்த சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விதிகள் குறித்த சிறப்பு பாடம், அடுத்த கல்வியாண்டு முதல் பாடப்புத்தகங்களில் சேர்க்கப்படும் என, கர்நாடக பாடநுால் கழகம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் பள்ளி மாணவர்களிடம் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, போக்குவரத்து போலீஸ் ஒரு சிறப்பு பாடத்தை தயாரித்தது. இதை, மாணவர்களின் பாடப்புத்தகங்களில் சேர்க்கும்படி, பள்ளி கல்வி ஆராய்ச்சி துறையிடம் கோரிக்கையை வைத்தது. இந்த கோரிக்கை கர்நாடக பாடநுால் கழகத்திற்கு அனுப்பப்பட்டது.

இதுகுறித்து, கர்நாடக பாடநுால் கழகம் வெளியிட்ட அறிக்கை:

நடப்பு கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுவிட்டது. அடுத்த கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்களில், போக்குவரத்து விதிகள், சாலை பாதுகாப்பு குறித்த கட்டாயம் பாடங்கள் சேர்க்கப்படும்.

ஏற்கனவே, 2ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களில், சாலை பாதுகாப்புகள் குறித்த தலைப்புகள் இணைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், போக்குவரத்து போலீஸ் துறையால் தயாரிக்கப்பட்ட, சிறப்பு பாடத்தை அடுத்த கல்வியாண்டில் சேர்ப்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் மகிழ்ச்சி - புதுசா கற்று தரும் AI - ஈஸியாகும் கற்றல், கற்பித்தல்!

 ai-learn

செயற்கை நுண்ணறிவு டூல்கள் அரசு பள்ளி ஆசிரியர்களை மேலும் பட்டை தீட்டி வருகிறது. இவர்கள் தங்களுக்கு விருப்பமான பயிற்சிகளை பெறுவதுடன், மாணவர்களுக்கு கற்று தரவும் ஏஐ உதவியை நாடி வருகின்றனர்.


கல்வியில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு புதிய புரட்சியை உண்டாக்கி இருக்கிறது. நேரடியாக பார்க்க முடியாத பல விஷயங்களை கண் முன்னால் கொண்டு வந்து சாத்தியப்படுத்தி உள்ளது. வர்ச்சுவல் ரியாலிட்டி ஆசிரியர்கள் கற்பித்தலில் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்தியுள்ளனர். தனியார் பள்ளிகளில் மட்டுமின்றி அரசு பள்ளிகளிலும் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர் தங்களது திறன்களை மேம்படுத்தி கொள்ள புதிய ஏஐ டூல்கள் பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏஐ அனுபவம்


இதுபற்றி சேலத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் முத்துவேல் என்பவரிடம் கேட்கையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைத்து பாடங்களையும் மிகவும் நுணுக்கமாக புரிந்து கொள்ள உதவுகிறது. கணிதத்தில் முப்பரிமாண வடிவங்கள், சிக்கலான கணக்குகளை தீர்க்கும் வழிமுறைகள், விண்வெளி துறையில் பயன்படுத்தப்படும் கணக்கீடுகள், சிவில் எஞ்சினியரிங் துறையில் கணிதத்தின் பங்கு எனப் பல விஷயங்களை மாணவர்களுக்கு எளிதாக கற்று தரப்படுகிறது.


செய்முறை கல்வி மூலம் பயிற்சி


இவற்றை நேரில் சென்று பார்ப்பது இயலாத காரியம். அதை ஏஐ செயல்படுத்தி காட்டியுள்ளது. இதன்மூலம் நாங்களும் நிறைய கற்றுக் கொள்கிறோம். வெறும் ஏட்டுக் கல்வியை தாண்டி செயல்முறை அறிவாக மாறும் போது மனதில் நன்கு பதிந்து விடுகின்றன என்று கூறினார். இதேபோல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களது செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து வந்துள்ளனர்.


கேமிங் முதல் வார்த்தை உச்சரிப்பு வரை


குறிப்பாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பால என ஐந்து வகை நிலங்களை வர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் மாணவர்கள் பார்க்க முடிகிறது. ஸ்மார்ட் கிளாஸ் ரூமில் கர்சிவ் ரைட்டிங் கற்று தருவது முதல் ஓவியம் வரைதல் வரையிலும், கேமிங் உருவாக்கம் முதல் வார்த்தைகள் உச்சரிப்பை சரியாக கையாள்வது வரை பலவற்றை கற்று தருவதாக கூறுகின்றனர். இதற்காக சில டூல்களையும் பயன்படுத்துவதாக பகிர்ந்துள்ளனர்.


பிளாட்பார்ம்கள் பயன்பாடு


MIT App Inventor, Educandy - கேம்ஸ், குறுக்கெழுத்து போட்டி மூலம் கேள்விகளை உருவாக்குவது

Suno AI - ஆடியோக்கள் உருவாக்குவது, இதனை பாடல்களை மாற்றுவது


ReadingEggs - வார்த்தைகளை எப்படி உச்சரிப்பது என்று கற்று தருகிறது


Runway.ai, Leonardo.AI, Filky.ai - வீடியோக்கள் உருவாக்க பயன்படுகிறது


WebXR - ஏ.ஆர் கன்டென்ட் உருவாக்குகிறது


Lumi Education - கேம்ஸ் உருவாக்க முடிகிறது




யுனிவெர்சல் டீச்சர்ஸ் அகாடமி வழிகாட்டுதல்




அரசு பள்ளி ஆசிரியர்கள் தனித்தனியே செயல்படாமல் UTA எனப்படும் யுனிவெர்சல் டீச்சர்ஸ் அகாடமி என்ற அமைப்பின் மூலம் ஒருங்கிணைந்த பிளாட்பார்ம் மூலம் கற்று கொள்கின்றனர். இதில் இணைந்துள்ள ஆசிரியர்கள் தங்களது அறிவை ஒருவருக்கொருவர் பகிர்வது மட்டுமின்றி, மாணவர்களுக்கு கற்பிக்கவும் புதிய விஷயங்களை கற்று கொள்கின்றனர். ஆப் டெவலப்மெண்ட் விஷயத்தில் கவனம் செலுத்தி சில மொபைல் ஆப்களையும் உருவாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.



ஏஐ மூலம் ஆசிரியர்கள் கற்பித்தல்



சிலர் புத்தகங்களை உருவாக்கும் ஏஐ மூலம் மாணவர்கள் சிக்கலான பாடக் கருத்துகளை எளிதாக கற்று கொள்ளும் வகையில் வழிமுறைகளை ஆசிரியர்கள் உருவாக்கி வருகின்றனர். மேலும் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டி கற்று கொள்வதற்கு கேம்ஸ் உருவாக்கவும் ஆசிரியர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இப்படியான செயல்பாடுகள் ஆசிரியர்கள், மாணவர்கள் என இருதரப்பினருக்குமே பயனுள்ளதாக மாறி வருகிறது.

Ennum Ezhuthum | 1-5 CORNERS & ZONES

 IMG_20250609_210638

Ennum Ezhuthum | 1-5 CORNERS & ZONES.pdf

Download here