School Morning Prayer Activities - 10.06.2025

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.06.2025

திருக்குறள் 

குறள் 2:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.


விளக்கம்: தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்?      ஒன்றுமில்லை

பழமொழி :

Nothing ventured, nothing gained.


 துணிந்தாலன்றி எதுவும் கிட்டாது.


இரண்டொழுக்க பண்புகள் :


1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.


2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.


பொன்மொழி :


ஒரு குழந்தையின் பிறவித் திறமையை வளர்ப்பதற்காகவே கல்வியறிவு பயன்பட வேண்டும் - அறிஞர் பிளேட்டோ


பொது அறிவு : 


01.இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம் இது           


                பொக்ரான் (ராஜஸ்தான்) 


                 Pokhran(Rajasthan)


02. இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருது எது? 


                 ஞானபீட விருது


                 (Jnanpith   Award)


English words  :


 size     -     அளவு

 

rope        -    கயிறு


Grammar tips :


Simple tip to pronounce 'wh' words

Pronouncing 'which' and 'who' are different 


Whenever vowel ' O' appears near wh word ' w' is silent 


Whenever vowel e, i, u ,a appears near wh word 'h' is silent 


Example 

1 Which ,what, when, will whale etc

2 who ,whom, whose, who,whole etc


அறிவியல் களஞ்சியம் :


  ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அதீத தொலைவில் உள்ள புதிய கோள்கள், நட்சத்திரங்களைக் கண்டுபிடித்து வருகிறது. தற்போது புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் மூன்று கேலக்ஸிகளை இது படமெடுத்துள்ளது. இது உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள், வானியல் ஆர்வலர்களிடையே மிகுந்த ஆர்வத்தைத் துாண்டியுள்ளது.


ஜூன் 10

சுந்தர் பிச்சை அவர்களின் பிறந்தநாள்


சுந்தர் பிச்சை என்று அறியப்படும் பிச்சை சுந்தரராசன்(பிறப்பு: சூன் 10, 1972), இந்திய அமெரிக்க வாழ் கணினி தொழில் நுட்ப மேலாளர் ஆவார். இவர் அல்பபெட் (Alphabet Inc.) மற்றும் அதன் துணை நிறுவனமான கூகுள் முதன்மை செயல் அலுவலர் ஆவார்.


சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள்இல் இணைந்தார். இவர் கூகிள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது கூகிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார். 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் நாள் ஆன்டி ரூபின் பதவி விலகிய பிறகு ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் சேர்த்து தலைவரானார். கூகுள் வரைபடம், ஆய்வு, வணிகம், விளம்பரம், ஆண்ட்ராய்டு, குரோம், உள்கட்டமைப்பு, கூகுள் ஆப்ஸ் ஆகியவற்றின் தலைவராக இருந்த இவர், கூகுள் உறவு நிறுவனங்களின் புதிய கூட்டு நிறுவனமான ஆல்பாபெட்டு உருவாக்கம் நிறைவுற்ற பிறகு, கூகுளின் முதன்மைச் செயல் அலுவலராகப் பொறுப்பேற்க உள்ளார். 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி முதல் ஆல்பாபெட்டு என்ற நிறுவனத்தின் தலைவர்களாக இருந்த லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகியோர் விலகி இவரை இரண்டு நிறுவனங்களுக்கும் ஒரே தலைமை செயல் அதிகாரியாக நியமித்துள்ளார்கள்



நீதிக்கதை




 நடப்பது எல்லாம் நன்மைக்கே!




காட்டு ராஜா சிங்கத்தின் குகை வாசலில், ஏகப்பட்ட மிருகங்களின் கூட்டம். காட்டு ராஜா, வேட்டையாடச் சென்றபோது, கால்விரலில் அடிபட்டு, விரல் துண்டாகி விட்டதென்று அறிந்து துக்கம் விசாரிக்கத்தான் காட்டுப் பிரஜைகளான மிருகங்கள் கூடியிருந்தன. ஒவ்வொரு மிருகமாக வரிசையில் நின்று, குகையின் உள்ளே சென்று, சிங்க ராஜாவைப் பார்த்து விட்டுத் திரும்பின.




சிங்கராஜா காலில் பலமான கட்டுடன், கட்டிலில் படுத்துக் கிடந்தது. அருகே சிங்கராணி, வழியும் கண்­ரும் சிந்திய மூக்குமாக அமர்ந்து இருந்தது.





ஒவ்வொரு மிருகமாக வரிசையாகச் சென்று கொண்டிருந்தபோது, வரிசையின் இடையே வந்து, புகுந்து கொண்ட குள்ளநரி, சிங்கராஜாவின் அருகே சென்றதும் பெருமூச்சு விட்டபடி “ஊம் நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்றது. சிங்கராஜாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது.



நமது காலிலுள்ள ஒரு விரலே போய்விட்டது. இந்தக் குள்ளநரி, நடப்பதெல்லாம் நன்மைக்கே, என்று கூறுகிறதே. “பிடி அதை அடைத்துவை, குகைச்சிறையில்!” எனக் கட்டளை இட்டது சிங்கராஜா.



சிப்பாய்க் குரங்குகள் பாய்ந்து, நரியைப் பிடி

த்து இழுத்துச் சென்றன.



ஒவ்வொரு காரியமும் நமது நன்மைக்குத்தான் நடக்கிறது என்ற உண்மையைத்தானே சொன்னேன்” என்று புலம்பியபடி சென்றது குள்ளநரி.





சிங்கராஜாவின் காலிலுள்ள புண் குணமாவதற்கு, மூன்று மாதகாலம் கடந்தது. காலில் ஒருவிரல் இல்லாமையால், சிங்கராஜா கம்பீரமாக நடக்க இயலாமல், நொண்டி நொண்டி நடந்தது. அதனால் மிருகங்கள் எல்லாம் மறைமுகமாக “நொண்டி ராஜா” என அழைத்தன.




இப்படிச் சிங்கராஜாவை எல்லாரும் கேலி செய்வதைக் கேட்டு, சிங்கராணிக்கு மிகுந்த வருத்தம். என்ன செய்வது? இந்தப் பட்டத்தைச் சூட்டியது எந்த மிருகம் என்பது தெரிந்தால், இளவரசன் சிங்கக்குட்டியிடம் தண்டனை கொடுக்கச் சொல்லலாமே என நினைத்தது.



உண்மையில் இப்படி பெயர் வைத்தது, குறும்புக்கார முயல் என்பது எவருக்கும் தெரியாது.



சிறையில் அடைபட்டிருந்த குள்ளநரிக்கு, சைவ உணவே தினசரி ஒரு வேளை தரப்பட்டது. காட்டுக்கிழங்கையும், கனிகளையும், பார்த்தாலே குள்ளநரிக்கு குமட்டிக் கொண்டு வரும், என்ன செய்வது? வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், வார்த்தையைக் கொட்டிவிட்டு, வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமே, என ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிரு

ந்தது குள்ளநரி.




வெகுநாட்களாகியும் குணமாகாமல் காலை நொண்டிக் கொண்டே ஒரு நாள் காட்டில், வெகுதூரம் வேட்டைக்கு வந்துவிட்ட சிங்கம், ஒரு இடத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டுக்குள், ஆட்டுக்குட்டி ஒன்று இருந்ததைக் கண்டது. ஆவலுடன் ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து, கடித்துக் குதறித் தின்றது.


தின்று முடிந்து, ஏப்பம் விட்டபடி திரும்பிய சிங்கம் அந்த இரும்புக் கூண்டில் கம்பிக்கதவால் மூடப்பட்டிருந்ததைக் கண்டு, திகைத்தது. மடத்தனமாக கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டோமே என்று நினைத்து வேதனைப்பட்டது. ஆத்திரத்தில் கர்ஜனை செய்தது. அப்போது கூண்டில் அடைப்பட்ட சிங்கத்தை, தங்கள் வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற காவலர்கள், “நம் இளவரசர் கேட்டபடி அவர் விளையாடுவதற்கு ஒரு சிங்கம் கிடைத்துவிட்டது. இதைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார். இளவரசரின் மகிழ்ச்சியைக் கண்டு மன்னர் நமக்குப் பரிசுகள் கொடுப்பார்”, என்றெல்லாம் பேசிக்கொண்டே அரண்மனையை அடைந்தனர்.





கூண்டிலிருந்த சிங்கத்தை இறக்கியபோதுதான் அது நொண்டி நொண்டி நடந்ததை அறிந்தனர்.




இதைக்கண்டு வருந்திய அவர்கள், “இது ஊனமுற்ற சிங்கம். இதை நம் இளவரசர் விளையாடப் பழக்கப்படுத்த முடியாது. “எனவே, இதைக் காட்டில் கொண்டு போய் விட்டுவிடுவதே நல்லது” என்று கூறியபடி சிங்கத்தை மீண்டும் காட்டுக்குள் கொண்டு சென்று விட்டுவிட்டுத் திரும்பினர் காவலர்கள். சிங்கத்திற்கு மகிழ்ச்சி பொங்கியது.




“நமது கால் விரல், இல்லாததால்தான் நம்மை விட்டு விட்டார்கள். “நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்று அன்றைக்கு நரி சொன்னபோது, ஆத்திரப்பட்டு அதைக் கூண்டில் அடைத்தோம். ஆனால் அது சொன்னது சரியென்று இப்போதுதான் உணர முடிகிறது” என்றெல்லாம் நினைத்தபடி தனது குகைக்குச் சென்ற சிங்கம், தனது மனைவியிடமும் குட்டிகளிடமும் நடந்ததைச் சொன்னது.




உடனடியாக, சிப்பாய்க் குரங்குகளை அழைத்து, “சிறையைத் திறந்து குள்ளநரியை வெளியில் அனுப்புங்கள்” என்று உத்தரவிட்டது. அதன்படி சிறையை விட்டு, வெளிவந்த குள்ளநரியை வரவேற்ற சிங்கராஜா, “அறிவுக் கடலே, இன்று முதல் நீங்கள்தான் எனது மந்திரி, நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அன்று நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டது. யார் எதைச் சொன்னாலும் அவசரப்படாமல் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன் என்று மகிழ்ந்தது.


இன்றைய செய்திகள் -;10.06.2025





⭐தேசிய திறனாய்வுத் தேர்வு உதவித்தொகைக்கான ஆன்லைன் பதிவில் இந்த ஆண்டு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.




⭐உயர் கல்வி பயிலும் மாணவர்கள் ஒரே நேரத்தில் இரு வேறு படிப்புகளைப் பயில்வது தொடர்பாக திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை UGC தற்போது வெளியிட்டுள்ளது.


 


⭐2026 அதிபர் தேர்தல் கொலம்பியா அதிபர் தேர்தல் வேட்பாளர் யூரிப் டார்பே மீது துப்பாக்கி சூடு: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை.


 


⭐ரஷ்யப் படைகள் ஒரே இரவில் 479 ட்ரோன்களை ஏவியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 



🏀விளையாட்டுச் செய்திகள்


🏀"வருங்கால இந்தியாவின் செஸ்-ன் அடையாளம்" குகேஷ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து. 


🏀FIH புரோ லீக்கில் இந்திய ஹாக்கி அணி நெதர்லாந்திடம் தோல்வியடைந்தது.


Today's Headlines


✏️A new procedure is being introduced this year in  online registration for(NAS)  National Aptitude Test Scholarship.


✏️ UGC has now issued revised guidelines regarding students pursuing two different courses simultaneously in higher education.


✏️ Presidential Election 2026- Colombian Presidential Candidate  Uribe Darbe was attacked by gun shooting. He is in critical condition and is undergoing treatment.


✏️ Ukraine reported that Russian forces launched 479 drones overnight.


 SPORTS NEWS


🏀Tamilnadu Chief Minister MK.Stalin congratulated  the  chess champion Kukesh and said he is "The symbol of   India's future chess" 

🏀 Indian hockey team loses to Netherlands in FIH Pro League


Covai women ICT_போதிமரம்


அஞ்சல் முகவரிகளின் ஈர்ப்பாக இருந்த PIN குறியீடுகளின் சகாப்தம் முடிவடைகிறது...இனி DigiPIN தான!!!

 PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்


அஞ்சல் முகவரிகளின் ஈர்ப்பாக இருந்த PIN குறியீடுகளின் சகாப்தம் முடிந்துவிட்டது, அதற்கு மாற்றாக இந்திய அஞ்சல் துறை 'DigiPIN' என்ற டிஜிட்டல் முகவரியை அறிமுகப்படுத்தியுள்ளது. 


இனிமேல் நாட்டில் DIGIPIN புதிய முகவரி அமைப்பாக இருக்கும். பாரம்பரிய PIN குறியீடுகள் பரந்த பகுதியை உள்ளடக்கியிருந்தாலும், 10 இலக்க DigiPIN அமைப்பு உங்கள் வீடு அல்லது வணிகத்தின் சரியான இருப்பிடத்தைக் குறிக்கிறது.


 அதாவது, உங்கள் வீடு அல்லது வணிகத்தின் சரியான இருப்பிடத்தை இந்த DigiPIN மூலம் காணலாம். DigiPIN ஐ உருவாக்கி குறியீட்டைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட அரசாங்க வலைத்தளத்தைப் பார்வையிட்டு உங்கள் வீட்டைக் கண்டறியலாம். DigiPIN இன் நன்மை என்னவென்றால், 


அது சரியான இடத்திற்கு கடிதங்களை வழங்கும் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்புத் துறைகள் போன்ற அவசர சேவைகள் இருப்பிடத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் அதை துல்லியமாக அடைய உதவும். கிராமப்புறங்கள் உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளில் DigiPIN பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.


கடிதப் பரிமாற்றத்திற்கு மட்டுமல்ல, மின் வணிக வலைத்தளங்களுக்கும் DigiPIN சரியான இடத்திற்கு பார்சல்களை வழங்க முடியும் என்று கூறப்படுகிறது.


உங்கள் Digipin ஐ எவ்வாறு கண்டுபிடிப்பது?


உங்கள் டிஜிபினைக் கண்டறிய அரசாங்க வலைத்தளமான  https://dac.indiapost.gov.in/mydigipin/home  தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வலைத்தளத்தைப் பார்வையிட்டு நீங்கள் கண்டறிந்த இடத்தைக் கிளிக் செய்வதன் மூலம், உங்கள் 10 இலக்க டிஜிபினைக் கண்டறியலாம். மற்ற முகவரி அமைப்புகளிலிருந்து டிஜிபினை வேறுபடுத்துவது என்னவென்றால், நான்கு மீட்டர் சுற்றளவில் உங்கள் சரியான இருப்பிடத்தை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். 


ஐஐடி ஹைதராபாத், NRSC மற்றும் ISRO ஆகியவற்றுடன் இணைந்து டிஜிபின் எனப்படும் புவிசார் குறியீடு செய்யப்பட்ட டிஜிட்டல் முகவரி அமைப்பை இந்திய போஸ்ட் உருவாக்கியுள்ளது. டிஜிபினை ஆஃப்லைனிலும் பயன்படுத்தலாம்.

ஆசிரிர்யர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது?

 ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கான அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், பணி நிரவல் கலந்தாய்வை, விரைவாக நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.


ஒருசில அரசு பள்ளிகளில், கடந்த கல்வியாண்டை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர்களின் தேவையும் அதிகரித்துள்ளது.


இதற்கிடையே, மே மாதத்தில் நடைபெற வேண்டிய பணி நிரவல் கலந்தாய்வு, இதுவரை நடத்தப்படவில்லை.


தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் அருளானந்தம் கூறுகையில், “டெட், செட் தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்குகளை காரணமாகக் காட்டி, ஆசிரியர் பதவி உயர்வுகள் நிறுத்தப்பட்டுள்ளன. பட்டதாரி ஆசிரியரிலிருந்து முதுநிலை பட்டதாரி ஆசிரியராக உயர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியரிலிருந்து தலைமையாசிரியர் பதவி உயர்வுகள் உள்ளிட்டவை, நான்கு ஐந்து ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது கல்வி சார்ந்த முக்கிய விஷயமாக இருப்பதால், பொது மாறுதல் மற்றும் பணி நிரவல் கலந்தாய்வுகள் விரைவாக நடத்தப்பட வேண்டும்,'' என்றார்.

IMG_20250609_122831

ENGLISH STD-3 TERM-1 வாசித்தல் பயிற்சி கையேடு

 IMG_20250608_091242

ENGLISH STD-3 TERM-1   வாசித்தல் பயிற்சி கையேடு 2025 

👇👇👇👇

Download here

8வது ஊதியக்குழு : அரசு ஊழியர்களுக்கான மதிப்பிடப்பட்ட திருத்தப்பட்ட சம்பளம் மற்றும் படிகள் தோராய கணக்கீடு.

 8வது ஊதியக்குழு - மதிப்பிடப்பட்ட சம்பள திருத்தம்


மத்திய அரசால் அறிவிக்கப்பட்டபடி, 8வது ஊதியக்குழு 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வர உள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை திருத்துவதே இந்த ஆணையத்தின் நோக்கம், இதன் மூலம் 1 கோடிக்கும் அதிகமான தனிநபர்கள் பயனடைவார்கள்.

"ஃபிட்மென்ட் காரணி," ஊதிய அளவுகளை சரிசெய்வதற்கான பெருக்கி, முக்கிய கவனம். இது 2.57 (7வது ஊதியக்குழு) இலிருந்து 2.86 ஆக அதிகரிக்கலாம்.

இது குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை ₹18,000 இலிருந்து ₹51,480 ஆகவும் ஓய்வூதியத்தை ₹9,000 இலிருந்து ₹25,740 ஆகவும் உயர்த்தக்கூடும்.

நியமிக்கப்பட்ட ஆணைய உறுப்பினர்களால் இறுதி பரிந்துரைகள் வழங்கப்படும்.

சம்பளம் மற்றும் படிகள் மீதான தாக்கம் (மதிப்பீடு)


அரசு ஊழியர்களின் சம்பள கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

அடிப்படை சம்பள சரிசெய்தலுடன், வீட்டு வாடகை அலவன்ஸ் (HRA) மற்றும் பயண அலவன்ஸ் (TA) போன்ற படிகள் இருப்பிடம் மற்றும் வேலை தொடர்பான பயணத்தின் அடிப்படையில் திருத்தப்படும், இதனால் ஒரே ஊதிய அளவில் உள்ள ஊழியர்களுக்கு மொத்த வருமானம் மாறுபடும்.

தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) பங்களிப்புகள், இதில் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% மற்றும் அகவிலைப்படி (DA) மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்கிறது, சம்பள திருத்தங்களுடன் அதிகரிக்கும்.

திருத்தப்பட்ட சம்பள நிலைகளின் அடிப்படையில் மத்திய அரசு சுகாதார திட்டம் (CGHS) கட்டணங்கள் புதுப்பிக்கப்படும்.

எதிர்பார்க்கப்படும் சம்பள திருத்தங்கள் (மதிப்பீடு, 2.86 ஃபிட்மென்ட் காரணியைப் பயன்படுத்தி)


கிரேடு 2000* (நிலை 3): திருத்தப்பட்ட அடிப்படை சம்பளம் ₹57,456, மொத்த சம்பளம் ₹74,845, நிகர சம்பளம் ₹68,849.

கிரேடு 4200* (நிலை 6): திருத்தப்பட்ட அடிப்படை சம்பளம் ₹93,708, மொத்த சம்பளம் ₹1,19,798, நிகர சம்பளம் சுமார் ₹1,09,977.

கிரேடு 5400* (நிலை 9): திருத்தப்பட்ட அடிப்படை சம்பளம் ₹1,40,220, மொத்த சம்பளம் ₹1,81,073, நிகர சம்பளம் சுமார் ₹1,66,401.

கிரேடு 6600* (நிலை 11): திருத்தப்பட்ட அடிப்படை சம்பளம் ₹1,84,452, மொத்த சம்பளம் ₹2,35,920, நிகர சம்பளம் ₹2,16,825.

(குறிப்பு: அனைத்து திருத்தப்பட்ட சம்பள புள்ளிவிவரங்களும் மதிப்பிடப்பட்டவை மற்றும் அரசாங்கத்தின் இறுதி முடிவுகளின் அடிப்படையில் மாறுபடலாம்.)

School Morning Prayer Activities - 09.06.2025

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.06.2025

திருக்குறள் 

குறள் : 400:


கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை.


விளக்கம் : ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.


பழமொழி :

Wanted deeds only,not words. 


செயல்களே தேவை ; சொற்களல்ல.


இரண்டொழுக்க பண்புகள் :


1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.


2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.


பொன்மொழி :


தீய பழக்கங்களை நீக்குவதற்கு ஒரே வழி நல்ல பழக்கங்களை தொடர்ந்து செய்து வருவதே  ஆகும். - விவேகானந்தர் 


பொது அறிவு : 


 01.தென்னிந்திய நதிகளில் மிக நீளமான நதி எது? 


            கோதாவரி(Godavari)


02.  தமிழில் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?


      நா. பிச்சமூர்த்தி(N.Pichaimurthi)


English words :


crowd    -     கூட்டம் 


hide        -      மறை 


Grammar tips :


Situation of using question word


* Who -is used to ask about person 


* Where -Is used to ask about place


* When -time


* Why -reason


* What -things


* How-method


* Which -choice


* How many -quantity


* How often -frequency


அறிவியல் களஞ்சியம் :




 ச‌ராச‌ரியாக‌ ஒரு ம‌னித‌ன் 4850 வார்த்தைக‌ளை 24 ம‌ணி நேர‌த்தில் ப‌ய‌ன்ப‌டுத்துகின்றான்.




ஜூன் 09




சார்லஸ் டிக்கென்ஸ் அவர்களின் நினைவுநாள்




சார்லஸ் ஜான் ஹஃபாம் டிக்கென்ஸ் (Charles Dickens, 7 பெப்ரவரி 1812 - 9 ஜூன் 1870) விக்டோரியா காலத்தைச் சேர்ந்த மிகவும் புகழ் பெற்ற ஆங்கிலப் புதின எழுத்தாளர்களில் ஒருவரும், தீவிரமான சமூகப் பரப்புரையாளரும் ஆவார். மிகவும் வறியவராக வாழ்க்கையைத் தொடங்கியவர். அது அவரது எழுத்துக்களிலும் எதிரொலித்தது. இவரது டேவிட் காப்பர்ஃபீல்டு, ஆலிவர் டுவிஸ்ட் போன்ற புதினங்கள் (நாவல்கள்) உலகப் புகழ் பெற்றவை.




நீதிக்கதை




 குரங்கு அறிஞர்




ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரைப் பார்த்துக் கேட்டான்.




“”யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா?” என்றான்.





“”தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்!” என்றார்.





“”இதற்கு ஒரு விலை நீ கொடுக்க வேண்டும். நான் உன்னைக் குரங்காக மாற்றி விடுவேன். அதுதான் உனக்குத் தண்டனை!” என்று அந்த அரக்கன் கூறினான்.




அடுத்த கணம், அந்தக் அறிஞர் குரங்காக மாறிவிட்டார். அவர் விம்மி விம்மி அழுதார். ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தார். குரங்குகளைப் போல் பழங்களைத் தின்று வந்தார்.




அவர் நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு கப்பல் பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது. அவர் அதில் தாவி ஏறினார். அதிலிருந்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர்.




“”குரங்கை வெளியே அனுப்புங்கள்; கொன்றுவிடுங்கள்!” என்று கத்தினர்.




கப்பலின் தலைவன் அந்த விலங்கிற்காக வருத்தப்பட்டுச் சொன்னார்.



“”வேண்டாம். அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்!”



அந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. பாக்தாத்தில் ஒரு செய்தி பரவி இருந்தது. அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த ஆளைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார். இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். “”இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்!” என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது.


எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்?” என்றனர்.



அரசர் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு அன்று. ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்கள், அவர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்தாள். அறிஞர் தன் பழைய நிலையை அடைந்தார்.


அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றியறிதலோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.


இன்றைய செய்திகள் - 09.06.2025






⭐கொரோனா பரவல் - கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய அறிவுறுத்தல்.


"அதிக காய்ச்சல், இருமல், உடல் வலி இருந்தால் மருத்துவமனைக்கு செல்லுங்கள்"




⭐ மணிப்பூர் மாநிலத்தில் போராட்டங்கள் காரணமாக இணைய சேவை நிறுத்தப்பட்டது.




⭐லாஸ் ஏஞ்சல்ஸில், ICE நாடுகடத்தல் சோதனைகளுக்கு எதிரான போராட்டங்கள் மோதல்களாக அதிகரித்துள்ளன.




 விளையாட்டுச் செய்திகள்




🏀 WTC இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் முயற்சிக்கிறார், இங்கிலாந்தில் வலுவான கவுண்டி சீசனுக்குப் பிறகு, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம் பெற ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் பணியாற்றி வருகிறார்.




🏀 ஹாக்கியில் நெதர்லாந்திடம் இந்தியா 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.




Today's Headlines




✏️ Corona is spreading fast . Pregnant women are advised to wear masks. "If anyone has high fever, cough and body ache they have to move to hospital immediately" 




✏️In Manipur ,Internet services suspended due to protests.




✏️ In Los Angeles, protests against ICE deportation raids have escalated into clashes.



 SPORTS NEWS



🏀 After a strong county season in England, Australia all-rounder Beau Webster is working towards to secure a place in the World Test Championship final against South Africa.



🏀 India lost to Netherlands in hockey by 2-1

திறனாய்வு தேர்வு உதவித்தொகைக்கான ஆன்லைன் பதிவில் புதிய நடைமுறை: இந்த ஆண்டு முதல் அறிமுகம்

 

Education News (கல்விச் செய்திகள்)
தேசிய திறனாய்வுத் தேர்வு உதவித்தொகைக்கான ஆன்லைன் பதிவில் இந்த ஆண்டு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி, ஒடிஆர் எனப்படும் ஒருமுறை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


கல்வியில் சிறந்து விளங்கும் 8-ம் வகுப்பு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் என்எம்எம்எஸ் எனப்படும் தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு, அதில் வெற்றிபெறுவோருக்கு 12-ம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இத்தேர்வை அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.


தமிழகத்தில் இத்தேர்வை மத்திய அரசு சார்பில் அரசு தேர்வுத் துறை நடத்துகிறது. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான (2025-2026) தேசிய திறனாய்வுத் தேர்வு உதவித்தொகைக்கான ஆன்லைன் பதிவில் புதிய நடைமுறை பின்பற்றப்படும் என மத்திய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அறிவித்துள்ளது.


இது தொடர்பாக மத்திய பள்ளிக்கல்வித்துறை, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளின் பள்ளிக்கல்வித் துறைச் செயலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 2025-2026-ம் கல்வி ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு உதவித்தொகைக்கான ஆன்லைன் பதிவு ஜூன் 2-ம் தேதி தொடங்கப்பட வேண்டும். தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (என்எஸ்பி) உதவித்தொகைக்காக ஆன்லைனில் பதிவுசெய்யும்போது ஒடிஆர் எனப்படும் ஒருமுறை பதிவு அவசியம். இதற்கு மாணவர்களின் செல்போன் எண் தேவை. ஆதார் சார்ந்த இ-கேஒய்சி மேற்கொள்ளப்படும்போது ஓடிஆர் ஐடி வழங்கப்படும்.


இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன. தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு எளிதில் கல்வி உதவித்தொகை கிடைக்கும் வகையில், இதுகுறித்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )

உயர் கல்வியில் ஒரே நேரத்தில் இரு வேறு படிப்புகள்: யுஜியி-யின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள்

 

Education News (கல்விச் செய்திகள்)


IMG_20250608_221201

உயர் கல்வி பயிலும் மாணவர்கள் ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகளைப் பயில்வது தொடர்பாகத் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை யுஜிசி தற்போது அறிவுறுத்தியுள்ளது.


இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி,அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: உயர் கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இரு படிப்புகளைப் பயில்வது தொடர்பாக யுஜிசி சார்பில் சமீபத்தில் நடைபெற்ற 589-வது கூட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை ஜூன் 5-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.


அதன்படி ஒரு மாணவர் ஒரே நேரத்தில் இரு வேறு பட்டம், பட்டயப் படிப்புகளை நேரடியாகப் பயில முடியும். அந்த படிப்புகளுக்கான வகுப்புகள் ஒரே நேரத்தில் இருக்காதபடி அவற்றில் முரண்பாடு ஏற்படாத வகையிலும் தேவையான நடவடிக்கைகளைப் பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் ஒரு படிப்பு நேரடியாகவும், மற்றொரு படிப்பு தொலைநிலைக் கல்வி அல்லது இணைய வழியில் பயிற்றுவிக்கப்படலாம். யுஜிசியின் அங்கீகாரத்தைப் பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள் மட்டுமே இத்திட்டத்தைச் செயல்படுத்த முடியும்.




இந்த வழிகாட்டுதல்கள் பிஎச்டி தவிர்த்துப் பிற படிப்புகளுக்குப் பொருந்தும். இவற்றைக் கருத்தில் கொண்டு உயர் கல்வி நிறுவனங்கள் விருப்பமுள்ள மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் இரு வேறு படிப்புகளைப் பயிலுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


UGC Guidelines Pursuing Two Academic Programmes - Download 

செப்டம்பர் மாதம் முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் ?

 

Education News (கல்விச் செய்திகள்)
செப்டம்பர் மாதம் தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படலாம் என்ற தகவல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக அரசு ஊழியர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை இதுவாகும். திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டிருந்த இந்த திட்டம், நிதி நெருக்கடி காரணமாக தொடக்கத்தில் தாமதத்தை சந்தித்தது. பல வருடங்களாக எதிர்பார்த்திருந்த இந்த திட்டம் நிறைவேற்றப்படாததால் அரசு ஊழியர் சங்கங்கள் அதிருப்தி அடைந்தன.


திட்டம் செப்டம்பருக்குள் அமல்படுத்தப்படாவிட்டால் கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம் என்று ஊழியர் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இத்தகைய அழுத்தங்களுக்கு இடையே, முதலமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் செப்டம்பர் மாதத்திற்குள் பழைய ஓய்வூதிய திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்த ஆய்வு செய்ய அரசு சிறப்பு குழுவை அமைத்துள்ளது. குழு தற்போது பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து வருகிறது. குறிப்பாக, மாநிலத்தின் தற்போதைய நிதி நிலை மற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து குழு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.


இந்த ஆய்வுகளின் முடிவில், செப்டம்பர் மாதத்திலேயே பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வரும் என்று தலைமைச் செயலக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வருகின்றன. இந்த தகவல் அரசு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.


பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது குறித்து அரசு கூடுதல் தகவல்களை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அரசு ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

மாணவர் சேர்க்கை - தலைமை ஆசிரியர்களுக்கு சில ஆலோசனைகள்!!!

 

முதல் வகுப்பில் சேர்க்க குழந்தையின் வயது எவ்வளவு இருக்க வேண்டும்?

ஒரு குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்க ஜீலை 31 ஆம் தேதியன்று 5 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.


ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் 5 வயது பூர்த்தியடைந்தால், வட்டாரக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பித்து வயது உரிய தளர்வாணை பெற்று, முதல் வகுப்பில் சேர்த்துக் கொள்ளலாம். முடிந்த வரை இந்த நிலையை தவிர்ப்பது நல்லது. 


ஏனென்றால், தற்போது CBSE க்கு இணையான பாடத்திட்டம் மற்றும் சிந்திக்கும் வடிவிலான மதிப்பீட்டு முறைகள் அறிமுகப் படுத்தப் படுவதால், ஜுலை மாதம், 5 வயது நிரம்பிய குழந்தைக்கு இருக்கும் மன முதிர்ச்சி, அறிவு வளர்ச்சி ஆகியவற்றை ஒப்பிடும் போது, ஆகஸ்ட் மாதம் 5 வயது நிரம்பும் குழந்தைக்கு சற்று குறைவாக இருக்கும். ஆகவே குழந்தை கற்பதிலும் சிரமம் ஏற்படும். கற்பிக்கும் ஆசிரியருக்கும் சிரமம் ஏற்படும் என்பதால், ஜூலை 31 தேதிக்குள் 5 வயது நிரம்பிய குழந்தைகளை மட்டும் சேர்த்தல் நல்லது.

ஆகஸ்ட் 31 முதல் டிசம்பர் 31 க்குள் 5 வயது நிரம்பிய குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்க முடியுமா?*


*தற்போதைய விதிகளின்படி ஆகஸ்ட் 31 முதல் டிசம்பர் 31 வரை 5 வயது நிரம்பும் குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்க இயலாது.* *அவ்வாறு சேர்க்கை நடந்திருந்தால், இந்த தவறுக்கு தலைமை ஆசிரியர் மட்டுமே முழு பொறுப்பு.* *இவ்வாறு சேர்க்கப் பட்ட குழந்தைக்கு எந்த அலுவலரும் தவிர்ப்பு வழங்க இயலாது.*


 *மேலும், தவறுதலாக சேர்க்கப்பட்டதற்கு கல்வித் துறை எடுக்கும் நடவடிக்கைக்கு தலைமை ஆசிரியர் ஆளாக நேரிடும்.*

விஜய தசமி அன்று 5 வயது பூர்த்தியாகும் குழந்தைகளை, பள்ளியில் முதல் வகுப்பில் சேர்க்கலாமா?

ஜுலை 31 அன்று 5 வயது நிரம்பிய குழந்தைகளில், எவரேனும் சேர்க்கப்படாமல் விடுபட்டிருந்தாலோ அல்லது ஐதீகம் காரணமாக விஜயதசமி அன்று பள்ளியில் சேர்த்தால் நல்லது என பெற்றோர் விரும்பினாலோ, அந்த குழந்தைகளை விஜயதசமி அன்று பள்ளியில் சேர்க்கலாம். எப்படி பார்த்தாலும் ஜுலை 31 அன்று 5 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்பது தான் கணக்கு.

தற்போது, அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அவர்களை இந்த கல்வி ஆண்டிலேயே EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டுமா?


அடுத்த கல்வியாண்டு என்பது ஜுன் 1 ஆம் தேதி தான் தொடங்குகிறது என்பதால், அடுத்த கல்வியாண்டு தொடங்கிய பின், பள்ளிக்கல்வித் துறை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்கும். அதன் பின்னரே EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது நல்லது. அதன் முன்னரே பதிவேற்றம் செய்தால், அந்த மாணவனுக்கு முதல் வகுப்பில் பதிவு செய்ய இயலாது. மேலும் அம்மாணவன் கோடை விடுமுறையில், வேறு ஊருக்கு குடிபெயர்ந்தாலோ, வேறு பள்ளியில் சேர்ந்தாலோ, நம் பள்ளி EMIS பதிவிலிருந்து Student Pool க்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்படும். Student Pool ல், ஒரு மாணவன் நீண்ட நாட்கள் இருந்தால், அம் மாணவன் இடை நின்ற மாணவனாக கருதப்படுவான். இதற்கும் தலைமை ஆசிரியர் தான் பொறுப்பேற்க நேரிடும்.



*ஆசிரியர் பணியிடத்தை தக்கவைத்துக் கொள்ள, வயது குறைந்த குழந்தைகளை தவறான பிறந்த தேதி மூலம் EMIS இணைய தளத்தில் பதிவு செய்து, ஆசிரியர் பணியிட மாறுதல் முடிந்த பின், பள்ளிப் பதிவேட்டில் நீக்கம் செய்து, EMIS இணைய தளத்திலிருந்து Student Pool அனுப்பலாமா?*


*இது மாபெரும் தவறு. Student Pool ல் இருந்தால் Drop out என அர்த்தம். இதற்கான பின் விளைவுகளுக்கும், தலைமை ஆசிரியர் மட்டுமே பொறுப்பு.*



ஆகவே தற்போது அனைத்துமே இணைய தளம் மற்றும் e-பதிவேடுகள் மூலமே பதிவேற்றம் நடைபெறுவதால், தலைமை ஆசிரியர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது.

தகவல்கள்: திரு. லாரன்ஸ் அவர்கள், திருச்சி.

Smart Board / Hitech Lab - Helpline Number

NMMS தேர்ச்சி பெற்றவர்களை, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) பதிவேற்றம் செய்வதற்கான இணையதளம் திறப்பு!

 IMG_20250606_182856

NMMS தேர்ச்சி பெற்றவர்களை, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) பதிவேற்றம் செய்வதற்கான இணையதளம் திறப்பு!

2025-26 Opening portal NMMSS (NSP)

👇👇👇👇

Download here

TNTEU - B.Ed.Result Published

 TNTEU B.Ed. / B.Ed. ( Spl . Edn . ) M.Ed. M.Ed. ( Spl . Edn . ) Result Galley is Semester ) Degree Examinations , March 2025 available in College Login - Reg 

am to inform you that the results of B.Ed. / B.Ed. ( Spl . Edn . ) / M.Ed. / M.Ed. ( Spl . Edn . ) ( Semester ) Degree Examinations , March 2025 are available in the College login . The Principals of the Colleges are requested to download the result galley by using the user name and password already provided.

 The College login link is available on the University website . The hard copy of the result galley will not be sent to the Colleges separately.

IMG-20250607-WA0009

EMIS - Transfer / Retirement ஆன ஆசிரியரின் பெயரை Common pool க்கு அனுப்பும் வழிமுறை

 IMG-20220906-WA0000

EMIS - Transfer / Retirement ஆன ஆசிரியரின் பெயரை Common pool க்கு அனுப்பும் வழிமுறை


 தங்கள் பள்ளியில் 31.5.2025 அன்று பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் & ஆசிரியர் அல்லாத பிற பணியாளர்கள் பெயர்களை அந்தந்தப் பள்ளி EMIS login லிருந்து Common pool க்கு retirement என தேர்வு செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


EMIS - பள்ளி login லிருந்து Transfer / Retirement ஆன ஆசிரியரின் பெயரை Common pool க்கு அனுப்பும் வழிமுறை


emis.tnschools.gov.in (school login)


⬇️

staff

⬇️

staff list

⬇️

Click the arrow mark 

⬇️

reason_ Retirement

⬇️

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 1 - ( Set - 2 ) Lesson Plan bh

 Ennum Ezhuthum Lesson Plan | 2025 - 2026


June - 2025


SET : 2

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Set - 2 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Set - 2 ) Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 1 - ( Set - 2 ) Lesson Plan - T/M - Download here