High tech lab and smart class - Mock Drill Link


ஜூலை 15 ஆம் தேதி மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மாநிலத் திட்ட அலுவலகத்தில் இருந்து CCC (comment and control center) வழியாக மாணவர்களுடன் உரையாட உள்ளதால் அனைத்து அரசு பள்ளிகளிலும் high tech lab and smart class  தயார் நிலையில் இருக்க வேண்டும்.


 *இதன் முன்னோட்டமாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை Micro soft Team மூலம் Mock Drill நடைபெறும்.


அனைத்து  தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 


🟢 KELTRON நிறுவனம் மூலம்   SMART BOARD வழங்கப்பட்ட அரசு பள்ளிகளில் ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமையும் microsoft team மூலம் Mock Drill ( ஆறு வாரத்திற்கு )  நடைபெற உள்ளதாக மாநில திட்ட அலுவலகத்தில் இருந்து தகவல் வழங்கப்பட்டுள்ளது  இன்று (வெள்ளிக்கிழமை)  முதற்கட்ட  Mock Drill காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது இதற்கான link இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது 

Mock Drill Link - Click here

🟢 மேற்கூறிய முதற்கட்ட Mock Drill  ல் இரண்டு வழிகளில்   பங்கேற்கலாம் 


1. Smart  board இணைக்கப்பட்டுள்ள Personal Computer மூலம் வழியாக இக்கூட்டத்தில் இணையலாம் 


2.   நேரடியாக SMART BOARD வழியாக Mock Drill நிகழ்வில் இணைய வேண்டிய சூழல் இருந்தால் team  link ல்  Email id and password  உள்ளீடு செய்து  கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து பின்னர் Mock Drill  நிகழ்வில்  இணையலாம்


🟢 இன்று நடைபெறும் Mock drill  தொடர்பான login in இடர்பாடு இருந்தால் 044 - 40116100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் 


🟢  AIs அல்லது SMART BOARD பொறுப்பு ஆசிரியருக்கு தகவல் வழங்கி      keltron மூலம்  வழங்கப்பட்ட  Smart Board ல்    மேற்கண்ட வழிமுறையை பின்பற்றி   இந்நிகழ்வில் பங்கேற்பு செய்திட  கேட்டுக்கொள்ளப்படுகிறது


🟢 Procedure for  Smartboard to be in live 


Smart board 

⬇️

Network

⬇️

Wireless connection

⬇️

Select *smartclass*

⬇️


password : password  KELTRON நிறுவன மூலம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது


⬇️


Connect


⬇️


Then switch on ups, desktop.also...


Then smartboard in live list...


உதவி திட்ட அலுவலர் 

மாவட்ட திட்ட அலுவலகம் 

01.01.2025 நிலவரப்படி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்விற்கான முதுகலை ஆசிரியர்களின் உத்தேச முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு.

 IMG_20250606_194203

01.01.2025 நிலவரப்படி அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியராக பதவி உயர்வுக்கான தற்காலிக மூப்பு பட்டியல் முதுகலை ஆசிரியர்கள்/மொழி ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர்கள் (கிரேடு-I)/அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் பட்டியலை அறிவிப்பு பலகைகளில் காட்சிப்படுத்தி, அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை செய்து, ஆசிரியர் விவரங்களை சரிபார்த்து, EMIS ID மற்றும் UDISE எண்ணுடன் திருத்தங்கள்/சேர்த்தல்கள்/நீக்குதல்களை முடித்து, 13.06.2025க்குள் அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

01.01.2025 நிலவரப்படி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்விற்கான முதுகலை ஆசிரியர்களின் உத்தேச முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு.


HM TO HR SEC HM PROMOTION PANEL 2025 | Download here

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கியது சென்னை உயர்நீதிமன்றம்

 dinamaniimport202298originaldenies2

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது. மின்சாரம் துண்டிப்பால் நீட் மறு தேர்வு நடத்த கோரி 16 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை என மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளதால் மறுதேர்வு நடத்த முடியாது என தேசிய தேர்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, 16 மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

எண்ணும் எழுத்தும்’ பாடப் புத்தகங்கள் வழங்குவதில் கால தாமதம்: ஆசிரியர்கள், கல்வியாளர்கள் அதிருப்தி

 1364397

1 முதல் 5-ம் வகுப்புகளுக்கான ‘எண்ணும் எழுத்தும்’ பாடப் புத்தகங்கள் வழங்குவதில் கால தாமதம் நிலவுவதால் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் சுமார் 68 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்கள் கற்றல் மேம்பாட்டுக்காக பல்வேறு செயல்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், காலணிகள், சீருடைகள், காலேந்திகள் மற்றும் காலுறைகள், கம்பளிச்சட்டை, மழைக்கோட்டு, வண்ணப் பென்சில்கள், வண்ணக் கிரையான்கள், மிதிவண்டிகள், கணித உபகரணப் பெட்டிகள் மற்றும் புவியியல் வரைப்படம் உள்ளிட்ட நலத்திட்டப் பொருள்கள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.


இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் (2025-26) கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த ஜூன் 2-ம் தேதி திறக்கப்பட்டன. முதல்நாளே பள்ளி மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டுப் புத்தகம் உட்பட பல்வேறு பொருள்கள் அனைத்து பள்ளிகளிலும் வழங்கப்பட்டன. அதேநேரம் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கான ‘எண்ணும் எழுத்தும்’ பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை. மேலும், சீருடைகள் மற்றும் நோட்டுப் புத்தகங்களில் ஒரு பகுதிதான் வந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.


இது குறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, “1 முதல் 5-ம் வகுப்புகளில் பயிலும் குழந்தைகள் அடிப்படை கணிதத் திறனுடன் பிழையின்றி எழுதுவதையும், படிப்பதையும் உறுதி செய்யும் விதமாக ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் 2022-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கென பிரத்யேக பயிற்சி கையேடுகள் வடிவமைக்கப்பட்டு மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பாடத்திட்டம் எளிய முறையில் இருப்பதால் குழந்தைகள் மத்தியில் நல்வரவேற்பை பெற்றுள்ளது.


இந்நிலையில், நடப்பாண்டில் வழக்கமான பாடப்புத்தகங்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன. ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சி கையேடுகள் வழங்கப்படவில்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது இன்னும் கையேடுகள் விநியோகம் செய்ய ஒரு மாத காலமாகும். எனவே, அதுவரை பாடநூல்களை கொண்டு பயிற்றுவிக்குமாறு கூறிவிட்டனர். ஆனால், ‘எண்ணும் எழுத்தும்’ அடிப்படையில்தான் மாணவர்களுக்கு தேர்வுகளும் நடத்தப்பட்டு மதிப்பீட்டு பணிகள் நடைபெறுகின்றன. எனவே, கால தாமதமின்றி புத்தகங்களை விரைந்து வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்,” என்றனர்.

ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி: ஒன்றிய அளவில் ஜூன் 9-ம் தேதி தொடங்குகிறது

 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி, ஜூன் 9 முதல் 13-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி), அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம், 2022-23 கல்வியாண்டு முதல் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது.


இத்திட்டம் 2026-27 கல்வியாண்டு வரை தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ளது. எனவே, எண்ணும் எழுத்தும் சார்ந்து நடப்பாண்டில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களுக்கு முதல் பருவத்துக்கான பாடப்பொருள் உருவாக்கப் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன.


இந்நிலையில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் பாடப்பொருள் குறித்து முதல் பருவத்துக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி ஜூன் 9 முதல் 13-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதையடுத்து ஒன்றிய அளவில் ஆசிரியர்களை குழுக்களாக பிரித்து பயிற்சி வழங்க வேண்டும்.

அதேநேரம், பயிற்சி நாளில் அந்தந்த பள்ளிகளில் மாற்று ஆசிரியர்கள் மூலம் வகுப்பை தொடர்வதை உறுதி செய்ய வேண்டும். இதற்கான செலவீனத்தை ஆண்டு பராமரிப்பு நிதியில் இருந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




SMART BOARD / HI - TECH LAB HELPLINE NUMBER

 1749137654668

 SM & HTL HELPLINE NUMBER
👇👇👇👇

Download here

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

 பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தினம் நாளையுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. இதுவரை 2.9 லட்சம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.


தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அதில் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரி, அரசு கல்லூரி, அரசு நிதியுதவி பெறும் கல்லூரி, தனியார் சுயநிதி கல்லூரி ஆகிய அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.


இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப்ப பதிவு மே 7-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவிகள் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.


இந்நிலையில், 29-வது நாளான நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 2 லட்சத்து 90 ஆயிரத்து 678 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர்களில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 732 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியிருப்பதாகவும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், " பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் என்பதால் பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி விரைவாக விண்ணப்பித்து 9-ம் தேதிக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மாணவர்களுக்கு 11 கட்டுப்பாடுகள் விதித்து முதன்மை கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு.

 சாதி அடையாளங்களுடன் மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்று திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மு.சிவகுமார் அறிவுறுத்தியுள்ளார்.


கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளுக்கு மாணவர்கள் எவ்வாறு வரவேண்டும், என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து, முதன்மை கல்வி அலுவலர் மு.சிவகுமார் சுற்றறிக்கை ஒன்றை பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளார். அதன் விவரம்: மாணவர்கள் அனைவரும் அரசால் தெரிவிக்கப்பட்ட சீருடையையே அணிந்து வர வேண்டும்.


மாணவர்கள் முக்கால் அளவுள்ள மற்றும் இறுக்கமான கால்சட்டையை அணிந்து வரக்கூடாது. அரைக்கை சட்டை மட்டுமே அணிந்து வரவேண்டும். சட்டை மிகவும் இறுக்கமாக இருக்க கூடாது. கைப்பகுதி முழங்கை அளவுக்கு சற்றுமேல் இருக்குமாறு அமைய வேண்டும். தலைமுடியை ஸ்மார்ட் கட்டிங் செய்து வரவேண்டும். அதிக முடி வைக்க கூடாது.


கலர் கலரான பொட்டு வைத்து வருவது, வண்ணக் கயிறுகளை கையில் கட்டுவது, கழுத்தில் அணிவது கூடாது. சாதி அடையாளங்களை குறிக்கும் வகையில் பனியன் அணிந்து வருவதையும், சைக்கிள்களில் சாதி அடையாளங்களுடன் ஸ்டிக்கர் ஒட்டி வருவதையும் தவிர்க்க வேண்டும். மாணவிகள் நிறைய பொட்டு வைப்பதையும், கலர் ரிப்பன் கட்டி வருவதையும் தவிர்க்க வேண்டும்.


அரிவாள், கத்தி கூர்மையான பொருட்கள், சைக்கிள் செயின் போன்றவற்றை மாணவர்கள் கொண்டு வருகிறார்களா என்பதை கண்டறிய, தினமும் பள்ளி நுழைவாயிலில் மாணவர்களின் புத்தகப் பையை ஆசிரியர்கள் சோதனை செய்ய வேண்டும். நல்ல தூய்மையான காலணிகளை பயன்படுத்த வேண்டும். தன் சுத்தம் பேணுமாறு தினமும் வழிபாட்டுக் கூட்டத்தில் கூற வேண்டும். அவற்றை மாணவர்கள் கடைபிடிக்கிறார்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். நாப்கின் மற்றும் கழிவறையை பயன்படுத்தும் முறை, கைகளை சுத்தம் செய்வது பற்றி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்களிடையே மோதல் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பெற்றோருக்கான அறிவிப்பு: ஒவ்வொரு தேர்வுக்குப் பிறகும் ஆசிரியர்களை சந்தித்து, மாணவர்களின் முன்னேற்றம் மற்றும் பிற செயல்பாடுகள் குறித்து பெற்றோர்கள் கேட்டறிய வேண்டும். தினமும் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு விடுப்பு தேவை எனில், வகுப்பாசிரியருக்கு பெற்றோர் தகவல் தெரிவித்து விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.


தகவலின்றி மாணவர் பள்ளிக்கு விடுப்பு எடுத்தால், மறுநாள் பெற்றோர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் உரிய காரணம் தெரிவிக்க வேண்டும். மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கவும், அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையவும் பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

 13804976-anbilmahesh

திருச்சி மாவட்டம் ராஜீவ் காந்தி நகரில் ரூ.18.4 கோடியில் கட்டப்பட்ட உயர்நிலைப்பள்ளி கட்டட திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:


* தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் அந்த அளவிற்கு வீரியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


* இருந்தாலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


* தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.


மார்ச் 1, 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு

 தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் சதி திட்டத்தை பா.ஜ., வெளிப்படையாக அறிவித்துள்ளது. தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்னரே நான் எச்சரித்து இருந்தேன். அது இப்போது நிரூபணம் ஆகிவிட்டது. பா.ஜ.,வுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் வாயிலாக, பழனிசாமி இந்த சதி திட்டம் குறித்து பேசாமல் அமைதி காப்பதோடு, இந்த துரோகத்திற்கு துணை போகிறார்.


நியாயமான தொகுதி மறுவரையறை என்ற கோரிக்கையில் தமிழக மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம். மத்திய அரசு எங்களுக்கு தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2025-2026 ம் கல்வியாண்டிற்கான முதல் கட்ட பள்ளி மான்ய 50% நிதியை மாவட்டங்களுக்கு பகிர்ந்தளித்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செல்முறைகள்!

 IMG_20250604_195810

2025-2026 ம் கல்வியாண்டிற்கான முதல் கட்ட பள்ளி மான்ய  50% நிதியை மாவட்டங்களுக்கு பகிர்ந்தளித்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செல்முறைகள்!


மத்திய கல்வி அமைச்சகத்தின் , திட்ட ஒப்புதல் குழு 2025.2026 ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்காக , UDISE 2023-2024 - ன்படி பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியம் பரிந்துரை வழங்கியுள்ளது.

 முதல் கட்ட தொகையினை அனைத்து அரசு பள்ளிகளுக்கு வழங்கிடும் வகையில் மாவட்டங்களுக்கு பின்வரும் அட்டவணையின்படி விடுவிக்கப்பட்டுள்ளது . இத்தொகையினை அந்தந்த பள்ளி மேலாண்மைக் குழுவின் ( SMC ) வங்கிகணக்கிற்கு 03 நாட்களுக்குள் அனுப்பிவைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

School Grant 2025-26.pdf

👇👇👇👇

Download here

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

 எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புக்கு ஜூன் 6-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். தேசிய தேர்வு முகமையிடம் இருந்து நீட் மதிப்பெண் பெற்று கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


சென்னை அண்ணாசாலயில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கூட்டரங்கில், 2025-26-ம் கல்வியாண்டுக்கான தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான (இளங்கலை மருத்துவ படிப்புகள்) இடப்பங்கீட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ப.செந்தில்குமார், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, தேர்வுக்குழு செயலாளர் தேரணிராஜன், துணை இயக்குநர் கராமத் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


கூட்டம் முடிவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த கூட்டத்தில் 2025-26-ம் ஆண்டுக்கான இடப்பங்கீடு இறுதி செய்யப்பட்டது. கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை முறையாக நடைபெறுவது மற்றும் தனியார் கல்லூரிகள் கல்விக் கட்டணம் தவிர விடுதிக் கட்டணம் போன்ற பிற கட்டணங்களை வெளிப்படையாக அறிவிப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது. தமிழகத்தில் கடந்த ஆண்டு வரை நீட் தேர்வு முடிவு வெளியான பிறகு தான் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் வெளியிட்டு பெறப்பட்டன. பல்வேறு காரணங்களால் நீட் தேர்வு முடிவு வெளியாவது தாமதம் ஏற்படும் போது, மாணவர்களின் விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் மிகவும் குறைவதால், மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.


அதனால், இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் இந்த ஆண்டு நீட் தேர்வு முடிந்த பிறகு மாணவர்களின் 12-ம் வகுப்பு இறுதி தேர்வு முடிவு வெளியான பின்னர் பெறப்பட்டால் மாணவர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதுடன், விண்ணப்பங்கள் சரி பார்ப்பதற்கும் அதிக கால அவகாசம் இருக்கும். மாணவர்களுக்கு சிரமம் குறைவதுடன் சரிபார்ப்பு பணிகளும் சிறப்பாக நடைபெற்று, தவறான மற்றும் போலியான விண்ணப்பங்களை நிராகரிக்க வசதியாக இருக்கும்.


இந்த ஆண்டு முதல் முறையாக நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே, ஜூன் மாதம் 6-ம் தேதி முதல் இளங்கலை மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்துக்கான கால அவகாசம் அதிகமாக இருப்பதால் மாணவர்களுக்கான சிரமங்கள் வெகுவாக குறையும். மாணவர்கள் நீட் தேர்வு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய முடியாதோ என்ற சந்தேகம் கொள்ள தேவையில்லை. வழக்கமாகவே மாணவர்கள் பதிவேற்றம் செய்யும் நீட் தேர்வு மதிப்பெண்கள் தேசிய தேர்வு முகமை அளிக்கும் தரவுகளின் அடிப்படையிலேயே சரிபார்க்கப்படும். எனவே தற்போதும் மாணவர் பதிவேற்றம் செய்யும் நீட் வரிசை எண் மற்றும் நீட் நுழைவுச்சீட்டு அடிப்படையில் தேசிய தேர்வு முகமை அளிக்கும் மதிப்பெண்கள் பெறப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்படும். நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், விண்ணப்பம் சமர்ப்பிக்க விரும்பும் மாணவர்களுக்காக விண்ணப்பத்துக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும். அந்த கால அவகாசம் 5 நாட்கள் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாணவர் சேர்க்கை - வயது தளர்வாணை கோரும் படிவம்

 மாணவர் சேர்க்கை - வயது தளர்வாணை கோரும் படிவம்

Age Relaxation Format .pdf

👇👇👇

Download here

மத்திய அரசு நடத்திய அடிப்படை எழுத்தறிவு தேர்வில் தமிழ்நாடு 100 சதவீத தேர்ச்சி

 13798674-exam

வயது வந்தோருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை உருவாக்குவதற்காக மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் உள்ள பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறை சார்பில் நாடுதழுவிய அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.


எழுத்தறிவு இல்லாத 1 கோடியே 77 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கு பயிற்சி அளித்து தேர்வு நடத்தப்பட்டது. அதில், 34 லட்சத்து 31 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றனர். இவர்களில், தமிழ்நாட்டில் பதிவு செய்திருந்த 5 லட்சத்து 9 ஆயிரத்து 694 பேருக்கும் சான்றிதழ் அளிக்கப்பட்டது.


எனவே, 100 சதவீத தேர்ச்சி பெற்று, முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. திரிபுரா, டெல்லி ஆகியவை 2 மற்றும் 3-வது இடங்களை பிடித்துள்ளன.

ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை மற்றும் பண்டிகை முன்பணம் உயர்வு - அரசாணைகள் வெளியீடு!


ஓய்வூதிய நிலுவை இனங்களை முடித்தல் மற்றும் ஓய்வூதியம் ( GPF ) மற்றும் பங்களிப்பு ஓய்வூதியம் ( CPS ) கருத்துருக்களை உரிய காலத்தில் தயார் செய்து நிலுவைகளை முடித்தல் சார்ந்து 07.06.2025 அன்று அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களிலும் ஆய்வுக் கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

பார்வையிற்காண் கடிதத்தில் கூறப்பட்டுள்ள அறிவுரைகள் மற்றும் 10.06.2025 அன்று தலைமைச்செயலகத்தில் நிதித்துறை முதன்மைச்செயலர் அவர்களால் நடைப்பெறவுள்ள ஆய்வு கூட்டத்தின் பொருட்டு GPF DCRG CPS ஓய்வூதிய நிலுவை இனங்களைவிரைவில் முடிக்கும் வகையில் 07.06.2025 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் கல்வி மாவட்டம் அளவில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு ஆய்வுக்கூட்டம் ஏற்பாடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் நிலுவையில் உள்ள அனைத்து DDO- க்களுக்கு ( தலைமயாசிரியர் ) ஆய்வு கூட்டம் நடத்திடவும் , முதன்மை கல்வி அலுவலர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தியும் ஏப்ரல் 2024 முதல் மே 2025 வரை ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்ளுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம் ( GPF ) . பணிக்கொடைத்தொகை ( DCRG ) மற்றும் பங்களிப்பு ஓய்வூதியம் ( CPS ) ஆகியவற்றினை தற்போதைய நிலையினை இணைப்பிலுள்ள EXCEL படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக ஆர் பிரிவு மின்னஞ்சலிற்கு அன்று மாலைக்குள் உரிய விவரங்களை சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 அனைத்து மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்தும் பட்டியலை தொகுத்து சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பிட அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 அறிவுரைகள்

DSE Proceedings - Download here