பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கையில் மாற்றம்

     Education News (கல்விச் செய்திகள்)
பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கை: அனைத்துப் பாடப்பிரிவினரும் சேரலாம்!

பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கையில் மாற்றம் குறித்து...

இனிமேல் பிளஸ் 2-வில் எந்த பாடப் பிரிவை எடுத்து படித்திருந்தாலும் பாலிடெக்னிக் படிப்பில் நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தொழில் நுட்பக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக 2-ஆம் ஆண்டு சேருவதற்கான (‘லேட்ரல் என்ட்ரி’ முறை) முறை உள்ளது. கணிதம், இயற்பியல் வேதியியல் உள்ளிட்ட பாடங்களுடன் பிளஸ் 2 முடித்த மாணவா்கள், 10-ஆம் வகுப்பு முடித்துவிட்டு அதன்பின் 2 ஆண்டு ஐடிஐ படித்தவா்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

முன்னதாக பிளஸ் 2-வில் கணித பாடத்தை பிரதானமாக எடுத்துப் படித்தவர்கள் மட்டுமே பாலிடெக்னிக் படிப்பில் நேரடி 2-ஆம் ஆண்டு வகுப்பில் சேரலாம் என்று விதி இருந்தது.

இந்த நிலையில், வணிகவியல் உள்பட அனைத்து பாடப்பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், வரும் கல்வியாண்டு முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொழில் நுட்பக் கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

accc6e7a-5c9d-44f5-a030-b37162efa51a

தொழில் நுட்பக் கல்வி இயக்கக ஆணையரின் அறிவுறுத்தலின்படி, பிளஸ் 2 தேர்வில் வணிகவியல் உள்பட அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் 2025-26-ஆம் கல்வியாண்டில், நேரடி இரண்டாம் ஆண்டு பட்டயபடிப்பில் சேர்க்கை செய்து கொள்ள அனைத்து பலவகை தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர்களுக்கும் அனுமதி வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு

 Education News (கல்விச் செய்திகள்) 

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான (டிடெட்) மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: தமிழகத்தில் 26 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கு 1,740 இடங்கள் உள்ளன. இதேபோல், 12 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 980 இடங்களும், 25 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 1,500 இடங்களும் உள்ளன. இவற்றில் 2025-26ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கோரி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய இயக்குநர் அரசுக்கு கருத்துரு அனுப்பினார்.

அதையேற்று தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப் பங்களை இணையவழியில் ஜூன் 6ம் தேதிக்குள் பெற வேண்டும். அவற்றின் மீதான பரிசீலனையை ஜூன் 11ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். மதிப்பெண், சாதி வாரியாக மாணவர்கள் ஜூன் 14-ம் தேதி தேர்வு செய்யப் படுவார்கள். அதன்பின் வகுப்புகள் ஜூன் 18ம் தேதி தொடங்கி நடைபெறும்.

அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கான கற்பித்தல் பயிற்சிகள் ஆகஸ்ட், நவம்பர் மாதங்களில் நடத்தப் படும். பொதுத் தேர்வு மே மாதம் நடைபெறும். இது தவிர நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் பூர்த்தியாகாமல் இருந்தால் அதை அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் முதல்வர்களே உடனடி சேர்க்கை மூலம் நேரடியாக நிரப்பிக் கொள்ளலாம். அதேபோல், நடப்பாண்டு டிடெட் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக பணிகள் முன்னெடுக்கப் பட்டுள்ளன. அதற்காக முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை ஒரு மாதம் முன்பாக ஜூனிலேயே நடத்தப் படும். அதற்கேற்ப கல்வியாண்டு ஜூன் முதல் மே மாதம் வரை மேற்கொள்ளப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TN SSLC - 11th Public Exam Result - School Education Direct Link

    Education News (கல்விச் செய்திகள்) 
மேல்நிலை முதலாமாண்டு  (11-ஆம் வகுப்பு) பொதுத்தேர்வு முடிவுகள் 16.05.2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு வெளியீடு

மாணவர்கள்  தங்களுடைய பதிவெண் மற்றும்  பிறந்த தேதி  ஆகியவற்றை  பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.

பள்ளி சார்பில்  இணையத்தளத்தில் பதிவு செய்த தொலைப்பேசி எண்ணிற்கு மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக (SMS) அனுப்பப்படும்.

Result Link

👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾

Link 1 - Click here

Link 2 - Click here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TN SSLC - 10th Public Exam Result - School Education Direct Link

 10-ம்பொதுத்தேர்வு முடிவுகள் 16.05.2025 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு வெளியீடு

🛑மேல்நிலை முதலாமாண்டு (11-ஆம் வகுப்பு) பொதுத்தேர்வு முடிவுகள் 16.05.2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு வெளியீடு

மாணவர்கள் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.

பள்ளி சார்பில் இணையத்தளத்தில் பதிவு செய்த தொலைப்பேசி எண்ணிற்கு மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக (SMS) அனுப்பப்படும்.

Result Link

👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾

Link 1 - Click here

Link 2 - Click here

நடப்பு-நிகழ்வுகள்-ஏப்ரல்-2025 | TNPSC Current Affairs April 2025

 நடப்பு-நிகழ்வுகள்-ஏப்ரல்-2025 | TNPSC Current Affairs April 2025

Click here to download  - Tamil
Click here to download  - English

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் காலேஜ் அட்மிஷன் 2025 : என்னென்ன சான்றிதழ்கள் தயாராக இருக்க வேண்டும்? முழு பட்டியல் இங்கே

    Education News (கல்விச் செய்திகள்) 
12ம் வகுப்பு முடித்தவுடன் அனைவருக்கும் அடுத்த கட்டமாக கல்லூரி சேர்க்கை என்ற பெரிய கட்டத்தை கடக்க வேண்டிய நிலை ஏற்படும். அதன்போது கடைசி நேர டென்ஷன் ஏற்படாமல் இருக்க என்னென்ன சான்றிதழ்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதை இங்கே பகிர்கிறேன்.

முதலில் வாங்க வேண்டிய முக்கிய சான்றிதழ்கள்

✅ மதிப்பெண் சான்றிதழ்
✅ மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate – TC)

இரண்டும் பள்ளியிலிருந்து உடனே பெற்று வைத்துக் கொள்ள வேண்டும்.

📝 மற்ற கட்டாய சான்றிதழ்கள்

1️⃣ ஆதார் அட்டை
👉 இருப்பது கட்டாயம். திருத்தங்கள் இருந்தால் இ-சேவை மையத்தில் திருத்திக் கொள்ளலாம்.

2️⃣ பிறப்புச் சான்றிதழ்
👉 இல்லையெனில் தமிழக அரசு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

3️⃣ இருப்பிடச் சான்றிதழ்
👉 தமிழக அரசு ஒதுக்கீட்டில் சேர்வதற்காக முக்கியமானது.

4️⃣ ஜாதிச்சான்றிதழ்
👉 அரசு ஒதுக்கீட்டிலும், கல்வி உதவித் தொகைகளிலும் தேவைப்படும்.

5️⃣ வருமானச் சான்றிதழ்
👉 கல்வி உதவித் தொகை, கல்விக்கடன், அரசு நலத்திட்டங்களுக்கு பயன்படும்.

🧐 முக்கிய குறிப்புகள்

  • வருமானச் சான்றிதழ் காலாவதியாகும். அதனால் புதியதாக எடுத்து வைத்திருக்க வேண்டும்.
  • பிற மாநில மாணவர்கள் (8 முதல் 12ம் வகுப்பு தமிழகத்தில் படித்தவர்கள்) இருப்பிடச் சான்றிதழ் தேவையில்லை.

🎯 மாணவர்களுக்கு சில தனிப்பட்ட ஆலோசனைகள்

நான் என் அனுபவத்தில் பார்த்தது என்னவென்றால், பல மாணவர்கள் அறிவிப்பு வந்த பிறகு தான் ஓடி ஓடி சான்றிதழ்கள் எடுக்க முயற்சிக்கிறார்கள். இது நிறைய அழுத்தத்தை ஏற்படுத்தும்.
அதனால் இப்போதே எல்லா ஆவணங்களும் தயார் செய்து வையுங்கள்

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNPSC, SSC, RRB, Banking தேர்வுகளுக்கு சென்னையில் இலவச பயிற்சி - 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்

அரசு வேலையில் சேர வேண்டும் என்பது உங்கள் கனவா? தமிழ்நாடு அரசே இலவச பயிற்சி வழங்கி உங்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, வங்கி மற்றும் ரயில்வே ஆகியவற்றிக்கான போட்டித்தேர்வுகளுக்கு சென்னையில் 6 மாத கால பயிற்சியை கட்டணமில்லாமல் தமிழ்நாடு அரசின் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் வழங்குகிறது. ஆர்வமுள்ளவர்கள் இப்பயிற்சிக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

போட்டித் தேர்வுகள்
தமிழ்நாடு அரசின் உள்ள பல்வேறு பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். குரூப் தேர்வுகள், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வுகள் ஆகிய மூலம் ஒவ்வொரு ஆண்டு ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதே போன்று, மத்திய அரசில் இருக்கும் முக்கிய பணியிடங்கள் எஸ்எஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வு மையம் மூலம் நிரப்பப்படுகிறது.
பொதுத்துறை வங்கியில் இருக்கும் காலிப்பணியிடங்கள் IBPS மூலமும், ரயில்வேயில் இருக்கும் காலிப்பணியிடங்கள் RRB மூலமும் நிரப்பப்படுகிறது.

தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச பயிற்சி
அந்த வகையில், TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 இடங்களுக்கும், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

TNPSC, SSC, RRB, Banking தேர்வுகளுக்கு சென்னையில் இலவச பயிற்சி - 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்

Authored Byஜான்வி | Samayam Tamil | Updated: 14 May 2025, 6:09 pm
Subscribe

மத்திய, மாநில அரசு பணிகளில் சேர வேண்டும் என பலர் தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு தேவையான பயிற்சியை தமிழக அரசு வழங்குகிறது வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசின் டிஎன்பிஎஸ்சி, மத்திய அரசின் எஸ்எஸ்சி, ரயில்வே மற்றும் வங்கி பணிகளில் சேர விரும்புகிறவர்களுக்கு தமிழ்நாடு அரசின் போட்டித்தேர்வுகள் பயிற்சி மையம் மூலம் சென்னையில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
தமிழ்நாடு அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி (புகைப்படங்கள்- Samayam Tamil)
அரசு வேலையில் சேர வேண்டும் என்பது உங்கள் கனவா? தமிழ்நாடு அரசே இலவச பயிற்சி வழங்கி உங்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, வங்கி மற்றும் ரயில்வே ஆகியவற்றிக்கான போட்டித்தேர்வுகளுக்கு சென்னையில் 6 மாத கால பயிற்சியை கட்டணமில்லாமல் தமிழ்நாடு அரசின் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் வழங்குகிறது. ஆர்வமுள்ளவர்கள் இப்பயிற்சிக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

போட்டித் தேர்வுகள்
தமிழ்நாடு அரசின் உள்ள பல்வேறு பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். குரூப் தேர்வுகள், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வுகள் ஆகிய மூலம் ஒவ்வொரு ஆண்டு ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதே போன்று, மத்திய அரசில் இருக்கும் முக்கிய பணியிடங்கள் எஸ்எஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வு மையம் மூலம் நிரப்பப்படுகிறது.

பொதுத்துறை வங்கியில் இருக்கும் காலிப்பணியிடங்கள் IBPS மூலமும், ரயில்வேயில் இருக்கும் காலிப்பணியிடங்கள் RRB மூலமும் நிரப்பப்படுகிறது.

தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச பயிற்சி
அந்த வகையில், TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 இடங்களுக்கும், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

பயிற்சி வகுப்புகள்
இதற்கான பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது.
பயிற்சி பெற தகுதிகள் என்ன?
பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01.01.2025 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி, போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவும் தங்கும் வசதிகளும் இல்லை
விண்ணப்பங்கள் வரவேற்பு
போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று சேர்க்கை, நடைபெற உள்ளது. பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் https://www.cecc.in/ 16.05.2025 முதல் 31.05.2025 வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-25954905 மற்றும் 044-28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
தேர்வு செய்யப்படும் முறை
பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப தேர்வர்கள் தெரிவு செய்யப்பட்டு தேர்வர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும். ஜூன் மாதம் முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

டிஜிட்டல் முறையில் உங்கள் பொருளை சந்தைப்படுத்துவது எப்படி? தமிழக அரசு தரும் 2 நாள் பயிற்சி

 Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் ஏராளமான தொழில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் (Digital Marketing Workshop) குறித்த இரண்டு நாள் பயிற்சி சென்னையில் நடைபெற உள்ளது. தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிகங்கள் நடத்தும் நபர்கள் இந்த பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் ஏராளமான தொழில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிகங்களுக்கான டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பட்டறை பயிற்சி ( Digital Marketing Workshop for Entrepreneurs & Small Business) வரும் 2 நாட்களுக்கு சென்னையில் நடைபெற உள்ளது.

மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் பயிற்சி
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் சுயமாக தொழில் தொடங்க, தொழிலை முன்னேற்றி லாபம் பெறுவது எப்படி, தொழில்நுட்பங்களை தொழிலில் உபயோகிப்பது உள்ளிட்ட பல பயிற்சிகள் வழங்கப்படுகிறது. குறைந்த கட்டணத்தில் நிபுணர்கள் கொண்டு பல்வேறு மாவட்டங்களில் குறுகிய கால பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், தொழில் செய்பவர்களுக்கு உதவும் வகையில் மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் பயிற்சி வழங்கப்படுகிறது.

சென்னையில், "தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிகங்களுக்கான டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பட்டறை" பயிற்சி வரும் 28.05.2025 முதல் 29.05.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சிப் பட்டறையின் என்னென்ன பயிற்சிகள் கற்பிக்கப்படும்?

  • வணிக சந்தைப்படுத்துதலின் அடிப்படைகள்
  • வளர்ச்சிக்கான அலகு பொருளாதாரம்
  • முக்கிய அளவீடுகளைப் புரிந்துகொள்ளுதல்
  • அதிக மாற்றும் சந்தைப்படுத்துதல் புனலை உருவாக்குதல்
  • டிஜிட்டல் சந்தைப்படுத்துதலின் இரகசியங்கள்
  • வெற்றிக்கான தந்திரங்கள் மற்றும் கருவிகள்
  • குறிப்புக்கான நிகழ்வு ஆய்வுகள்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் https://www.editn.in/ என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

அலுவலக முகவரி மற்றும் தொலைபேசி எண்

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032.
தொலைபேசி எண்கள் : 9543773337. 9360221280

முன்பதிவு அவசியம்
தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் வழங்கப்படும் மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் பயிற்சி மூலம் உங்கள் தொழிலை டிஜிட்டல் முறையில் முன்னெடுக்கலாம். தற்காலத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் அவசியம் என்பது முக்கியமாக பார்க்கப்படும் நிலையில், தொழில் செய்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள இணையதளம் வழியாக முன்பதிவு செய்ய வேண்டும். இப்பயிற்சி பெறும் நபர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.