TNUSRB சப் இன்ஸ்பெக்டர் (SI) தேர்வு நாள் அறிவிப்பு 2025 – முதன்மை எழுத்துத் தேர்வுக்கு நாள் வெளியீடு!

 Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

TNUSRB சப் இன்ஸ்பெக்டர் (SI) தேர்வு நாள் அறிவிப்பு 2025 – முதன்மை எழுத்துத் தேர்வுக்கு நாள் வெளியீடு!

முக்கிய தகவல்கள்:
📌 அறிவிப்பு வெளியீடு தேதி: 13.05.2025
📌 முன் அறிவிப்பு வெளியீடு: 04.04.2025 (அறிவிப்பு எண்: 01/2025)
📌 வாரியம்: தமிழ்நாடு униபார்ம்டு சர்வீசஸ் ரிக்ரூட்மென்ட் போர்டு – Egmore, Chennai – 8

📅 தேர்வு தேதிகள்:

தேதிநேரம்தேர்வுவிண்ணப்பம்
28.06.2025காலை 10:00 – மதியம் 12:30முதன்மை எழுத்துத் தேர்வுபொதுத்துறை விண்ணப்பதாரர்கள்
28.06.2025பிற்பகல் 03:00 – 04:40தமிழ் மொழித் தகுதி தேர்வுபொதுத்துறை மற்றும் துறைசார் விண்ணப்பதாரர்கள்
29.06.2025காலை 10:00 – மதியம் 01:00முதன்மை எழுத்துத் தேர்வுதுறைசார் விண்ணப்பதாரர்கள்

📌 கூடுதல் விவரங்கள்:

  • தமிழ்நாடு அரசு சீருடை பணிகள் தேர்வாணையம் (TNUSRB) மூலம் 2025 ஆம் ஆண்டுக்கான Taluk மற்றும் AR Police Sub-Inspectors பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது.
  • பொதுத்துறை மற்றும் துறைசார் விண்ணப்பதாரர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வும்தமிழ் மொழித் தகுதி தேர்வும் நடத்தப்பட உள்ளது.
  • தேர்விற்கான மையங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதற்கான விவரங்களை விரைவில் இணையதளத்தில் வெளியிட TNUSRB கோரிக்கை விடுத்துள்ளது.
  • மையம் தேர்வு செய்யவேண்டிய அதிகாரிகளுக்கு 13.05.2025க்குள் தகவல் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

🧭 இது தொடர்பான அதிகாரப்பூர்வ MEMO PDF:

விண்ணப்பதாரர்கள் கவனிக்க:

  • நேரம் மற்றும் மையங்களை உறுதிப்படுத்த TNUSRB-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்ந்து பார்வையிடுங்கள்.
  • தேர்வுக்கு தயாராக இருக்க, முன்கூட்டியே திட்டமிடுங்கள்.

  • 🛡️ TNUSRB சப் இன்ஸ்பெக்டர் (SI) தேர்வு நாள் அறிவிப்பு 2025 – முதன்மை எழுத்துத் தேர்வுக்கு நாள் வெளியீடு!
    TNUSRB சப் இன்ஸ்பெக்டர் (SI) தேர்வு நாள் அறிவிப்பு 2025 – முதன்மை எழுத்துத் தேர்வுக்கு நாள் வெளியீடு!

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

விருதுநகரில் மே 16-ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - இளைஞர்கள் கலந்துகொள்ள அழைப்பு

  Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்புகள் என்று மட்டுமில்லாமல், தனியார் நிறுவனங்களில் இருக்கும் வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு தகுதிக்கேற்று ஏற்படுத்தி தரும் வகையில் தமிழக அரசு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகிறது. அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் வரும் மே 16-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலையில்லாத இளைஞர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

தமிழ்நாடு அரசின் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் மே 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) விருதுநகர் மாவட்ட சாத்தூரில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதன் மூலம் வேலையில்லா இளைஞர்களுக்கு பலருக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம்.

தமிழக அரசு நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்

யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, டிஎன்பிஎஸ்சி, வங்கி, ரயில்வே பணி தேர்வுகளுக்கு தமிழக அரசு பயிற்சி அளித்து வருகிறது. இவைமட்டுமில்லாமல் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு தகுதிக்கேற்று தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் பெற்று தரப்படுகிறது. இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.

விருதுநகர் சாத்தூரில் வேலைவாய்ப்பு முகாம்

இந்நிலையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சாத்தூரில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் Adyar Anandha Bavan, Way2News, RK Motors, Anaamalais Toyota, IOB Resti போன்ற 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்துக் கொண்டு தகுதியானவர்களை வேலைக்கு எடுக்க உள்ளனர்.

தமிழ்நாடு அரசு மூலம் சாத்தூரில் நடைபெறும் இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை கலந்துகொள்ளலாம். மேலும், ஐ.டி.ஐ முடித்தவர்கள், டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் பொறியியல் படிப்பு முடித்த பட்டதாரிகளும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.,

விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூரில் S.H.N எட்வர்ட் மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற தனியார்துறை வேலைவாய்ப்பிற்கான அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், பல்வேறு தனியார் துறை வேலைவாய்ப்புகளை குறித்த தகவலை இந்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்

முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்டிற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை நேரிலோ அல்லது vnjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

TN - NHIS App Login Method & NHIS E-Card Download Procedure

 TN - NHIS App Login Method & NHIS E-Card Download Procedure
Untitled1_001

TN-NHIS  APP மூலமாக NEW NHIS ID CARD 2021 DOWNLOAD செய்வது எவ்வாறு?

TN-NHIS Appல் Login செய்யும் முறை & NHIS E-Card தரவிறக்கம் செய்வதற்கான வழிமுறை

Click Here to Download - TN - NHIS App Login Method & NHIS E-Card Download Procedure - Pdf

Breaking : 10ம் மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: முன்கூட்டியே வெளியீடு.

   Education News (கல்விச் செய்திகள்)   

IMG_20250514_115630

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் ( மே 16 ) வெளியிடப்படும்.

மார்ச் / ஏப்ரல் 2025 - இல் நடைபெற்ற 2024-2025 - ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு ( SSLC ) மற்றும் மேல்நிலை முதலாமாண்டு ( +1 ) பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 16.05.2025 ( வெள்ளிக்கிழமை ) அன்று அரசுத்தேர்வுகள் இயக்ககம் , பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் காலை 9.00 மணிக்கு வெளியிடப்படப்படவுள்ளது.

 மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் இணையதள முகவரி மற்றும் கால நேரம் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.
IMG-20250514-WA0010_wm

 16 காலை 10 ஆம் வகுப்பு முடிவும் , பிற்பகலில் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவும் வெளியீடு.

தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் . பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 

மேலும் , பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும் , தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி ( SMS ) வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

இன்ஜினியரிங் கல்லூரிகளில் கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் இட ஒதுக்கீடு பட்டியல்.

 IMG-20250513-WA0016_wm

இன்ஜினியரிங் கல்லூரிகளில் கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் இட ஒதுக்கீடு.

Government Eng College Cutoff details-(TNEA-2024)
Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

DTEd - தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு - மாணவர் சேர்க்கையினை அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றி இணையதளம் ( Online ) வாயிலாக நடத்திட அனுமதித்து ஆணை வெளியீடு

  Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250513_171756

பள்ளிக் கல்வி 2025-2026 - ஆம் ஆண்டிற்கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ( DIET ) , அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ( GTTI ) , ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ( BITE ) மற்றும் அரசு உதவிபெறும் / சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவணங்களில் மாணவர் சேர்க்கையினை அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றி இணையதளம் ( Online ) வாயிலாக நடத்திட அனுமதி வெளியிடப்படுகிறது.

Go.No.104 - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

தொடக்க கல்வி பட்டயத்தேர்வு: தனித் தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியீடு

  Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

43822115-chennai-03

தொடக்க கல்வி பட்டயத்தேர்வு அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் நடத்தப்படுகிறது. அந்தவகையில் முதலாம் ஆண்டு தேர்வுகள் வருகிற 23-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரையிலும், இரண்டாம் ஆண்டு தேர்வுகள் ஜூன் மாதம் 3-ந்தேதி முதல் 11-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கு, விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது. தேர்வர்கள், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி விவரங்களை பதிவிட்டு, தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு 2024-2025 - ல் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு திறமை தொடர் பட்டறை

  Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250513_184249

பள்ளிக் கல்வி - அரசு பள்ளிகளில் தற்போது மேல்நிலை முதலாமாண்டு தேர்வு எழுதியுள்ள மாணவர்களில் தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு 2024-2025 - ல் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு திறமை தொடர் பட்டறை -கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறுதல் - சார்பு .

அரசு பள்ளி மாணவ , மாணவியர்களின் திறனைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் 2023-2024 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத்தேர்வு பார்வை 1 ல் காணும் அரசாணையின்படி நடத்தப்பட்டு வருகிறது . மேற்காண் பொருள் சார்ந்து தற்போது மேல்நிலை முதலாமாண்டு தேர்வு எழுதியுள்ள மாணவர்களில் தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு 2024-2025 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவ , மாணவியர்ளுக்கு பயிற்சி பட்டறை வகுப்புகள் கோயம்புத்தூர் மாவட்டம் , காருண்யா நிகர்நிலைப் பல்கலைக் கழக வளாகத்தில் 24.05.2025 முதல் 28.05.2025 வரை 5 நாட்கள் உண்டு உறைவிட முகாமாக நடைபெற உள்ளது.

Proceedings - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

SLAS - 2025 Report on Learning Outcomes

  Education News (கல்விச் செய்திகள்) 

IMG_20250512_174644

STATE LEVEL ACHIEVEMENT SURVEY ( SLAS ) 2025 Report on Learning Outcomes ( Government and Aided Schools )

SLAS - 2025 Report - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மத்திய கடல்சார் மீன்வள தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் 2025-27 மாணவர் சேர்க்கை தொடக்கம்

  Education News (கல்விச் செய்திகள்) 

1361355

மத்திய கடல்சார் மீன்வள தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில், 2025-27-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வரும் ஜூன் 16-ம் தேதி கடைசி நாளாகும்.

மத்திய மீன்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மத்திய கடல்சார் மீன்வள தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (சிப்நெட்) சார்பில், 2025-27-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மரைன் ஃபிட்டர், வெசல் நேவிகேட்டர் ஆகிய இரு பயிற்சிகள் இந்நிறுவனத்தில் அளிக்கப்படும். பயிற்சிக் காலம் 2 ஆண்டுகள். கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் தலா 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 2025 ஆக.1-ம் தேதியன்று 15 முதல் 20 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.350. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.175. சென்னை, ராயபுரத்தில் உள்ள சிப்நெட் நிறுவனத்தில் இப்பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது ரூ.1,500 அரசு உதவித் தொகை வழங்கப்படும். இந்தப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 5-ம் தேதி நடைபெறும். தேர்வு முடிவு ஜூலை 14-ம் தேதி வெளிவரும்.

விண்ணப்பிக்க வரும் ஜூன் 16-ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்ப படிவங்களை www.cifnet.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு 044-25953769, 25952691, 90519 08995, 74014 73752, 99520 62628, 97886 71301 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

காட்சித் தொடர்பியல் படிப்புக்கு வேலை வாய்ப்பு எப்படி?

  Education News (கல்விச் செய்திகள்) 
கல்வி என்பது உண்மையான மூலங்களிலிருந்து கற்றுக் கொள்வதாகும். இதன் மூலம், தவறுகள் இல்லாத அறிவைக் குறைத்து, குறிப்பிட்ட தலைப்பு அல்லது துறையைப் பற்றிய அறிவியல் புரிதலை அதிகரிக்க முடியும். உலகிலும் இந்தியாவில் உள்ள தற்போதைய சூழ்நிலை, கற்றலுக்கு சிறந்த வாய்ப்பையும், எல்லையையும் வழங்குகிறது.

பி.எஸ்.சி. விஷுவல் கம்யூனிகேஷன் (எந்தப் பிரிவிலும் +2 தேர்ச்சி) போன்ற படிப்பைத் தேர்ந்தெடுப் பதன் மூலம், மாணவர்கள் உள்ளடக்கத்தை உருவாக்குவதன் மூலமும், தொழில் முனைவோராகவும் ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறைகளை ஆராய்வதற்கான வாய்ப்பு உள்ளது. எந்த ஓர் ஊடக தளத்திலும் உள்ளடக்கம் (content) தான் ஆட்சி செய்கிறது.

சிக்கல்களைத் தீர்ப்பதில் படைப்பாற்றல் மற்றும் புதுமையானது உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கு தேவையான குணங்கள் ஆகும். வழக்கத்துக்கு மாறான வழியில் சிந்திக்க வேண்டும் என்பது ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பு மாணவர்களுக்கு கட்டாயமாகும்.

பத்திரிகை, விளம்பரத் துறை, தொலைக்காட்சி மற்றும் வானொலி, திரைப்படம், இணையதளங்கள், வடிவமைப்பு மற்றும் கிராபிக்ஸ், அனிமேஷன், ஓடிடி தளங்கள், சமூக மற்றும் இணைய அடிப்படையிலான உள்ளடக்க உருவாக்கம், மக்கள் தொடர்பு, நிகழ்வு திட்டமிடல், புகைப்படம் எடுத்தல், ஊடக சந்தைப்படுத்தல், பார்வையாளர் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மூலோபாயவாதி, மொபைல் மற்றும் வலை பயன்பாடுகள் மேம்பாடு, வலைத் தொடர், குறும்படம் மற்றும் ஆவணப்பட தயாரிப்பு, யூடியூப் சேனல்கள் என பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன.

குறிப்பாக, பத்திரிகைத் துறை, பத்திரிகை, ஒளிபரப்பு, இணையம் போன்றவற்றில் வேலைவாய்ப்புக்கான துணைப் பிரிவுகள் அதிகம் உள்ளன. விளம்பரத் தொழில் (பதிப்பு எழுதுதல், ஊடகத் திட்டமிடுபவர்கள், காட்சிப்படுத்துபவர்கள், வாடிக்கையாளர் சேவை, விளம்பரம் தயாரிப்பு) அச்சு தயாரிப்பு (வடிவமைப்பாளர்கள், வடிவமைப்பு ஆலோசகர்கள், வெளியீட்டாளர்கள், மல்டிமீடியா உள்ளடக்க உருவாக்குநர்கள் போன்றவை), வலை வடிவமைப்பு (பெரிய நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் துறைகள், தனிநபர்களுக்கான உள் வடிவமைப்பாளர்கள் போன்றவை), நுணுக்கமான சந்தை மற்றும் தனிப்பட்ட தேவைகள் இரண்டிற்கும் யுஐ/யுஎக்ஸ் என்பது காலத்தின் தேவையாகும்.

காட்சி மற்றும் திரைப்படத் துறைகளில் ஸ்கிரிப்ட் எழுத்தாளர்கள், டி.ஜே., தொகுப்பாளர்கள், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், செட் மற்றும் கலை வடிவமைப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், ஒளிப் பதிவாளர்கள், ஆசிரியர்கள், டிஐ, ஒலி வடிவமைப்பாளர்கள் (பிஜிஎம், ஒலி எடிட்டிங்), ரேடியோ (ஆர்ஜே, நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், ஒலி பொறியாளர்கள்), பல்வேறு ஆர்வமுள்ள பகுதிகளுக்கான போட் காஸ்டிங், புகைப்படம் எடுத்தல் (விளம்பர புகைப்படக் கலைஞர் தயாரிப்பு, ஃபேஷன், தொழில், ஆட்டோமொபைல் போன்றவை), நிகழ்வுகள் (திருமணம், செயல் பாடுகள்), புகைப்பட பத்திரிகையாளர் உள்ளிட்ட துறைகளில் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதற்கேற்ப தங்களின் திறன்களை வளர்த்து கொண்டால் சாதிக்கலாம்.

மேற்குறிப்பிட்ட எந்த துறையிலும் வழக்கமான வேலையைத் தவிர சுயாதீன முறையில் (ஃபிரீலேன்சர்ஸ்) மற்றும் ஒரு சுய தொழில் செய்பவராக வோ அல்லது ஆலோசகராகவோ பணியாற்ற முடியும். சமூக ஊடகங்கள் அனைத்துத் துறைகளையும் ஆக்கிரமித்துள்ளன. செயற்கை நுண்ணறிவு, வி.ஆர். மற்றும் ஏ.ஆர். ஆகியவை அன்றாட வாழ்க்கையில் யதார்த்தமாகிவிட்டன. தொழில் நுட்ப கண்டுபிடிப்புக ளும் பொழுது போக்குக்கான தேவைகளும் மனிதர்கள் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் வரை பிரிக்க முடியாதவை. எனவே இந்த துறை சார்ந்த படிப்புகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் இருக்கும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பி.ஏ வரலாறு படிப்பு ஏன் முக்கியம்? - ஒரு தெளிவுப் பார்வை

  Education News (கல்விச் செய்திகள்) 

1361367

தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதிய புதிய படிப்புகள் தொடர்ந்து அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. அதே சமயம், முன்னரே, நடைமுறை யில் உள்ள பழைய பாடங்களுக்கும் மாணவ, மாணவிகளிடம் வரவேற்பு உள்ளது. அந்த வகையில், மாணவ, மாணவிகள் விரும்பிப் படிக்கும் துறைகளில் முக்கியமானதாக உள்ளது இளங்கலை வரலாறு (பி.ஏ ஹிஸ்டரி).

ஒவ்வொரு தனி நபருக்கும், ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு நகரத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும் ஒரு வரலாறு உண்டு. நம் முன்னோர்களின் வாழ்க்கை, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை அறிந்து கொள்ளவும், நம் நாட்டின் முந்தைய கால செயல்பாட்டையும், சிறப்பையும் அறிந்து கொள்ளவும் வரலாறு அவசியம். அந்தக் காலத்தில் நம் முன்னோர்களின் வாழ்வியல் முறைகள் எவ்வாறு இருந்தது, அவர்கள் எப்படி வாழ்ந்தனர், எந்த வகையான பொருட்களை பயன்படுத்திக் கொண்டனர் என்பதை அறிய வரலாறு மிகவும் முக்கியமானதாகும்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வரலாறு பட்டப் படிப்பு தற்போதும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்களில் கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவ, மாணவிகள் வரலாறு பாடத்தை இளநிலை, முதுநிலை பிரிவுகளில் படித்து முடித்துவிட்டு வெளியே வருகின்றனர்.

பி.ஏ வரலாறு பாடம் குறித்து கோவையில் உள்ள கல்லூரி பேராசிரியர்கள் கூறியது: பி.ஏ வரலாறு பட்டப் படிப்பு மொத்தம் மூன்று வருடங்களை கொண்ட படிப்பாகும். பிளஸ் 2 வகுப்பில் எந்த பாடப் பிரிவை மாணவ, மாணவிகள் தேர்வு செய்து இருந்தாலும், பொதுத் தேர்வில் 50 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் பி.ஏ வரலாறு பாடத்தில் சேரலாம்.

மூன்று வருட படிப்பில் நாம் ஐரோப்பிய வரலாற்றையும், உலக வரலாற்றையும், இந்திய வரலாற்றையும், தமிழகத்தின் வரலாற்றையும், புவியியல், சட்டம், கலாச்சாரம், பாரம்பரியம், தொல்லியல் துறை, சுற்றுலாத் துறை, ஊடகவியல், பத்திரிகை , சமூக அறிவியல் பற்றியும் இந்த மூன்று வருடங்களில் படிக்கிறோம்.

பி.ஏ வரலாறு முடித்த பின்னர், எம்.ஏ வரலாறு படிக்கலாம். அல்லது தொல்லியல் துறை, பண்டைய இந்திய வரலாறு, இந்திய கலை வரலாறு போன்றவற்றை படிக்கலாம். அதேபோல், வரலாறு சார்ந்த முனைவர் பட்டப்படிப்புக்கும் படிக்கலாம்.

வரலாறு பாடத்தை படித்தவர்களுக்கு அரசுப் பணியில் வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் வரலாறு முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல், நாட்டின் அதிகாரம் மிக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் யு.பி.எஸ்.சி தேர்வுகளில் வரலாறு பாடப்பிரிவு முக்கியப் பங்கு வகிக்கிறது.

அதேபோல், மத்திய துணை ராணுவப் படைகள், ராணுவம், கப்பற்படை, ரயில்வே துறை போன்ற அரசுப் பணிகளிலும் வேலை வாய்ப்பு உண்டு. அதேபோல், தொல்லியல் துறை மற்றும் அதன் உட் பிரிவுத் துறைகளான தொல்லியல், உயிர் தொல்லியல், கலாச்சார வள மேலாண்மை, கள தொல்லியல், அருங்காட்சியகங்கள், ஆராய்ச்சித்துறைகள் போன்றவற்றில் வேலை வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.

மேலும், பழங்காலத்தை பற்றிய பயனுள்ள பதிவுகளை மதிப்பீடு செய்தல், சேகரித்தல், பாதுகாத்தல் ஆகியவை காப்பக வல்லுநரின் பணியாகும். இந்த காப்பாளர் பிரிவு, புலனாய்வு நிபுணர் போன்ற துறைகளிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன என்று அவர்கள் கூறினர்.