மத்திய கடல்சார் மீன்வள தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் 2025-27 மாணவர் சேர்க்கை தொடக்கம்

  Education News (கல்விச் செய்திகள்) 

1361355

மத்திய கடல்சார் மீன்வள தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில், 2025-27-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வரும் ஜூன் 16-ம் தேதி கடைசி நாளாகும்.


மத்திய மீன்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மத்திய கடல்சார் மீன்வள தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (சிப்நெட்) சார்பில், 2025-27-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மரைன் ஃபிட்டர், வெசல் நேவிகேட்டர் ஆகிய இரு பயிற்சிகள் இந்நிறுவனத்தில் அளிக்கப்படும். பயிற்சிக் காலம் 2 ஆண்டுகள். கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் தலா 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு 2025 ஆக.1-ம் தேதியன்று 15 முதல் 20 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.350. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.175. சென்னை, ராயபுரத்தில் உள்ள சிப்நெட் நிறுவனத்தில் இப்பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது ரூ.1,500 அரசு உதவித் தொகை வழங்கப்படும். இந்தப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 5-ம் தேதி நடைபெறும். தேர்வு முடிவு ஜூலை 14-ம் தேதி வெளிவரும்.


விண்ணப்பிக்க வரும் ஜூன் 16-ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்ப படிவங்களை www.cifnet.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு 044-25953769, 25952691, 90519 08995, 74014 73752, 99520 62628, 97886 71301 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

காட்சித் தொடர்பியல் படிப்புக்கு வேலை வாய்ப்பு எப்படி?

  Education News (கல்விச் செய்திகள்) 
கல்வி என்பது உண்மையான மூலங்களிலிருந்து கற்றுக் கொள்வதாகும். இதன் மூலம், தவறுகள் இல்லாத அறிவைக் குறைத்து, குறிப்பிட்ட தலைப்பு அல்லது துறையைப் பற்றிய அறிவியல் புரிதலை அதிகரிக்க முடியும். உலகிலும் இந்தியாவில் உள்ள தற்போதைய சூழ்நிலை, கற்றலுக்கு சிறந்த வாய்ப்பையும், எல்லையையும் வழங்குகிறது.


பி.எஸ்.சி. விஷுவல் கம்யூனிகேஷன் (எந்தப் பிரிவிலும் +2 தேர்ச்சி) போன்ற படிப்பைத் தேர்ந்தெடுப் பதன் மூலம், மாணவர்கள் உள்ளடக்கத்தை உருவாக்குவதன் மூலமும், தொழில் முனைவோராகவும் ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறைகளை ஆராய்வதற்கான வாய்ப்பு உள்ளது. எந்த ஓர் ஊடக தளத்திலும் உள்ளடக்கம் (content) தான் ஆட்சி செய்கிறது.

சிக்கல்களைத் தீர்ப்பதில் படைப்பாற்றல் மற்றும் புதுமையானது உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கு தேவையான குணங்கள் ஆகும். வழக்கத்துக்கு மாறான வழியில் சிந்திக்க வேண்டும் என்பது ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பு மாணவர்களுக்கு கட்டாயமாகும்.


பத்திரிகை, விளம்பரத் துறை, தொலைக்காட்சி மற்றும் வானொலி, திரைப்படம், இணையதளங்கள், வடிவமைப்பு மற்றும் கிராபிக்ஸ், அனிமேஷன், ஓடிடி தளங்கள், சமூக மற்றும் இணைய அடிப்படையிலான உள்ளடக்க உருவாக்கம், மக்கள் தொடர்பு, நிகழ்வு திட்டமிடல், புகைப்படம் எடுத்தல், ஊடக சந்தைப்படுத்தல், பார்வையாளர் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மூலோபாயவாதி, மொபைல் மற்றும் வலை பயன்பாடுகள் மேம்பாடு, வலைத் தொடர், குறும்படம் மற்றும் ஆவணப்பட தயாரிப்பு, யூடியூப் சேனல்கள் என பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன.


குறிப்பாக, பத்திரிகைத் துறை, பத்திரிகை, ஒளிபரப்பு, இணையம் போன்றவற்றில் வேலைவாய்ப்புக்கான துணைப் பிரிவுகள் அதிகம் உள்ளன. விளம்பரத் தொழில் (பதிப்பு எழுதுதல், ஊடகத் திட்டமிடுபவர்கள், காட்சிப்படுத்துபவர்கள், வாடிக்கையாளர் சேவை, விளம்பரம் தயாரிப்பு) அச்சு தயாரிப்பு (வடிவமைப்பாளர்கள், வடிவமைப்பு ஆலோசகர்கள், வெளியீட்டாளர்கள், மல்டிமீடியா உள்ளடக்க உருவாக்குநர்கள் போன்றவை), வலை வடிவமைப்பு (பெரிய நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் துறைகள், தனிநபர்களுக்கான உள் வடிவமைப்பாளர்கள் போன்றவை), நுணுக்கமான சந்தை மற்றும் தனிப்பட்ட தேவைகள் இரண்டிற்கும் யுஐ/யுஎக்ஸ் என்பது காலத்தின் தேவையாகும்.


காட்சி மற்றும் திரைப்படத் துறைகளில் ஸ்கிரிப்ட் எழுத்தாளர்கள், டி.ஜே., தொகுப்பாளர்கள், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், செட் மற்றும் கலை வடிவமைப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், ஒளிப் பதிவாளர்கள், ஆசிரியர்கள், டிஐ, ஒலி வடிவமைப்பாளர்கள் (பிஜிஎம், ஒலி எடிட்டிங்), ரேடியோ (ஆர்ஜே, நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், ஒலி பொறியாளர்கள்), பல்வேறு ஆர்வமுள்ள பகுதிகளுக்கான போட் காஸ்டிங், புகைப்படம் எடுத்தல் (விளம்பர புகைப்படக் கலைஞர் தயாரிப்பு, ஃபேஷன், தொழில், ஆட்டோமொபைல் போன்றவை), நிகழ்வுகள் (திருமணம், செயல் பாடுகள்), புகைப்பட பத்திரிகையாளர் உள்ளிட்ட துறைகளில் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதற்கேற்ப தங்களின் திறன்களை வளர்த்து கொண்டால் சாதிக்கலாம்.


மேற்குறிப்பிட்ட எந்த துறையிலும் வழக்கமான வேலையைத் தவிர சுயாதீன முறையில் (ஃபிரீலேன்சர்ஸ்) மற்றும் ஒரு சுய தொழில் செய்பவராக வோ அல்லது ஆலோசகராகவோ பணியாற்ற முடியும். சமூக ஊடகங்கள் அனைத்துத் துறைகளையும் ஆக்கிரமித்துள்ளன. செயற்கை நுண்ணறிவு, வி.ஆர். மற்றும் ஏ.ஆர். ஆகியவை அன்றாட வாழ்க்கையில் யதார்த்தமாகிவிட்டன. தொழில் நுட்ப கண்டுபிடிப்புக ளும் பொழுது போக்குக்கான தேவைகளும் மனிதர்கள் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் வரை பிரிக்க முடியாதவை. எனவே இந்த துறை சார்ந்த படிப்புகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் இருக்கும்.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பி.ஏ வரலாறு படிப்பு ஏன் முக்கியம்? - ஒரு தெளிவுப் பார்வை

  Education News (கல்விச் செய்திகள்) 

1361367

தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதிய புதிய படிப்புகள் தொடர்ந்து அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. அதே சமயம், முன்னரே, நடைமுறை யில் உள்ள பழைய பாடங்களுக்கும் மாணவ, மாணவிகளிடம் வரவேற்பு உள்ளது. அந்த வகையில், மாணவ, மாணவிகள் விரும்பிப் படிக்கும் துறைகளில் முக்கியமானதாக உள்ளது இளங்கலை வரலாறு (பி.ஏ ஹிஸ்டரி).


ஒவ்வொரு தனி நபருக்கும், ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு நகரத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும் ஒரு வரலாறு உண்டு. நம் முன்னோர்களின் வாழ்க்கை, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை அறிந்து கொள்ளவும், நம் நாட்டின் முந்தைய கால செயல்பாட்டையும், சிறப்பையும் அறிந்து கொள்ளவும் வரலாறு அவசியம். அந்தக் காலத்தில் நம் முன்னோர்களின் வாழ்வியல் முறைகள் எவ்வாறு இருந்தது, அவர்கள் எப்படி வாழ்ந்தனர், எந்த வகையான பொருட்களை பயன்படுத்திக் கொண்டனர் என்பதை அறிய வரலாறு மிகவும் முக்கியமானதாகும்.


இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வரலாறு பட்டப் படிப்பு தற்போதும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்களில் கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவ, மாணவிகள் வரலாறு பாடத்தை இளநிலை, முதுநிலை பிரிவுகளில் படித்து முடித்துவிட்டு வெளியே வருகின்றனர்.


பி.ஏ வரலாறு பாடம் குறித்து கோவையில் உள்ள கல்லூரி பேராசிரியர்கள் கூறியது: பி.ஏ வரலாறு பட்டப் படிப்பு மொத்தம் மூன்று வருடங்களை கொண்ட படிப்பாகும். பிளஸ் 2 வகுப்பில் எந்த பாடப் பிரிவை மாணவ, மாணவிகள் தேர்வு செய்து இருந்தாலும், பொதுத் தேர்வில் 50 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் பி.ஏ வரலாறு பாடத்தில் சேரலாம்.


மூன்று வருட படிப்பில் நாம் ஐரோப்பிய வரலாற்றையும், உலக வரலாற்றையும், இந்திய வரலாற்றையும், தமிழகத்தின் வரலாற்றையும், புவியியல், சட்டம், கலாச்சாரம், பாரம்பரியம், தொல்லியல் துறை, சுற்றுலாத் துறை, ஊடகவியல், பத்திரிகை , சமூக அறிவியல் பற்றியும் இந்த மூன்று வருடங்களில் படிக்கிறோம்.


பி.ஏ வரலாறு முடித்த பின்னர், எம்.ஏ வரலாறு படிக்கலாம். அல்லது தொல்லியல் துறை, பண்டைய இந்திய வரலாறு, இந்திய கலை வரலாறு போன்றவற்றை படிக்கலாம். அதேபோல், வரலாறு சார்ந்த முனைவர் பட்டப்படிப்புக்கும் படிக்கலாம்.


வரலாறு பாடத்தை படித்தவர்களுக்கு அரசுப் பணியில் வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் வரலாறு முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல், நாட்டின் அதிகாரம் மிக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் யு.பி.எஸ்.சி தேர்வுகளில் வரலாறு பாடப்பிரிவு முக்கியப் பங்கு வகிக்கிறது.


அதேபோல், மத்திய துணை ராணுவப் படைகள், ராணுவம், கப்பற்படை, ரயில்வே துறை போன்ற அரசுப் பணிகளிலும் வேலை வாய்ப்பு உண்டு. அதேபோல், தொல்லியல் துறை மற்றும் அதன் உட் பிரிவுத் துறைகளான தொல்லியல், உயிர் தொல்லியல், கலாச்சார வள மேலாண்மை, கள தொல்லியல், அருங்காட்சியகங்கள், ஆராய்ச்சித்துறைகள் போன்றவற்றில் வேலை வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.


மேலும், பழங்காலத்தை பற்றிய பயனுள்ள பதிவுகளை மதிப்பீடு செய்தல், சேகரித்தல், பாதுகாத்தல் ஆகியவை காப்பக வல்லுநரின் பணியாகும். இந்த காப்பாளர் பிரிவு, புலனாய்வு நிபுணர் போன்ற துறைகளிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன என்று அவர்கள் கூறினர்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

‘ஆடை வடிவடிமைப்பு’ படிப்புகளும் எதிர்காலமும் - ஒரு பார்வை

 Education News (கல்விச் செய்திகள்) 

1361369

உணவு, உடை, இருப்பிடம் இந்த மூன்றும் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது. இந்த மூன்றில் ஒன்றான உடைக்கு மனிதர்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். நம்மை ஒருவரிடம் எடுத்துக் காட்டுவதில் முக்கியப் பங்கு வகிப்பது உடை. உடையை வடிவமைப்பதற்கு தற்போதைய காலத்தில் ஆடை வடிவமைப்புத் துறை என பிரத்யேகமாக பட்டப்படிப்பு உள்ளது.


ஆடை வடிவமைப்புத் துறை குறித்து கோவையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் கூறியது: ஆடை வடிவமைப்புப் பிரிவு அறிவியல் மற்றும் கலை சார்ந்த ஒரு படிப்பாகும். தற்போதைய காலத்தில் இது ஒரு முக்கிய தொழிற் கல்வியாக மாணவர்களிடம் உள்ளது. ஆடை வடிவமைப்பு என்பது ஆடைகள் மற்றும் அணிகலன்களுக்கு நுட்பங்களை வடிவமைக்கும் ஒரு கலையாகும்.


ஆடை வடிவமைப்பாளர் ஒரு சிந்தனையை ஒரு வடிவமைப்பாய் மாற்றி, பின்னர் அந்த வடிவமைப்பை தான் நினைத்தபடி ஆடையாகமாற்றுவார். ஆடை வடிவமைப்புக்கு இளநிலை, முதுநிலையில் படிப்புகள் உள்ளது. இளநிலையில், பி.எஸ்சி காஸ்டியூம் டிசைனிங் மற்றும் பேஷன், பி.வொக் (b.voc) கார்மென்ட் டிசைனிங், பேஷன் டெக்னாலஜி ஆகிய பட்டப்படிப்புகள் உள்ளன. பி.எஸ்சி காஸ்டியூம் டிசைனிங் மற்றும் பேஷன் துறையில், ஆடை வடிவமைப்பு மட்டுமின்றி, சிகை அலங்காரம், முக அலங்காரம் போன்றவற்றையும் சிறப்புத் தொழிற்கல்வியாக மாணவர்கள் படிப்பர்.


பி.வொக் கார்மென்ட் டிசைனிங் பிரிவில் ஆடை வடிவமைப்புடன் சேர்த்து, ஆடையின் தன்மை மற்றும் பின்னலாடைகளை பற்றியும் படிக்கலாம். ஃபேஷன் டெக்னாலஜி பிரிவில் ஆடையில் அறிவியல் நுட்பங்களை சேர்த்து கூறுவது ஆகும். இப்படிப்புக்கு அறிவியல் அடித்தளம் மிகவும் அவசியமாகும். ஃபேஷன் டெக்னாலஜி படிப்பு நூல் துணியாய் மாறி ஆடையாய் உருமாற்றம் பெறும் வரையில் அமைந்திருக்கும்.


மேற்கண்ட ஆடை வடிமைப்புத் துறைகளில் சேர பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் எந்தப் பாடப்பிரிவையும் தேர்ந்தெடுத்து படித்திருக்கலாம். அதே சமயம் ஃபேஷன் டெக்னாலஜி பாடத்துக்கு மட்டும் அறிவியல் சார்ந்த பாடப்பிரிவு படித்திருப்பது அவசியமாகும். ஆடை வடிமைப்பு படிப்புகளில் தையல் ஒரு முக்கியப் பிரிவாகும். இப்படிப்புகளை படிக்க தையல் தெரிந்திருக்க வேண்டும். தையல் தெரியவில்லை என்றாலும், இக்கல்வி படிக்கும் போது கற்றுத் தரப்படும்.


தற்போதைய நவீன உலகில் ஆடை வடிவமைப்புக்கு வேலை வாய்ப்பு சிறப்பானதாக உள்ளது. ஆடை வடிவமைப்பு பயின்ற மாணவர்கள் தொழில் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். தவிர, ஆடை வடிவமைப்பு சார்ந்த சுய தொழிலையும் செய்யலாம். மேலும், ஒருவரை ஒருவர் சார்ந்திருக்காம ல் சுயமாக தொழில் செய்யவும் இப்படிப்புகள் உதவுகின்றன என்று அவர்கள் கூறினர்.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

கல்லூரிகளில் சேர்வதற்கான இணையதள முகவரி மற்றும் விண்ணப்பத்தின் கடைசி தேதி குறித்த தகவல்கள்

 Education News (கல்விச் செய்திகள்) 

.com/

தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான அரசு மற்றும் தனியார் உயர் கல்வி கல்லூரிகளில் சேர்வதற்கான TNEA, TNGASA, TNAU, TNDALU, மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் ஆகியவற்றின் விண்ணப்பத்தின் கடைசி தேதிகள் பற்றிய விளக்கமான உரை கீழே:


முக்கிய அறிவிப்பு – TNEA மற்றும் பிற உயர் கல்வி சேர்க்கை விண்ணப்பங்கள் குறித்து:


ஒரு ஆண்டை வீணாக்க வேண்டாம்! 

கீழ்க்கண்ட உயர் கல்வி சேர்க்கைகளுக்கான விண்ணப்பத்தின் கடைசி தேதிகளை மறவாமல் கவனிக்கவும்:


TNEA (Engineering – அரசு மற்றும் தனியார் கல்லூரிகள்):


கடைசி தேதி: 06.06.2025


பி.இ / பி.டெக் போன்ற பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பம்.


அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு சேர விரும்புவோர் தவறவிடக்கூடாது.


TNGASA (Government Arts & Science Colleges Admission):


கடைசி தேதி: 27.05.2025


அரசுத் திறனாய்வுத் தேர்வு அடிப்படையில் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பம்.


TNAU (Agriculture, Fisheries, Forestry – Govt & Private):


கடைசி தேதி: 31.05.2025


வேளாண்மை, மீன்வளம், வனவியல் போன்ற பாடங்களில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள்.


Government Polytechnic Colleges Admission (Diploma Courses):


கடைசி தேதி: 06.06.2025


10ம் வகுப்பிற்கு பிறகு அரசுப் பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிக்க விரும்புவோருக்கு.


TNDALU (Law Colleges – Govt & Private):


கடைசி தேதி: 31.05.2025


சட்டப் படிப்புகளுக்கான (5 வருட மற்றும் 3 வருட) சேர்க்கை. அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சட்டக் கல்லூரிகள்.


குறிப்பு:


மாணவர்கள் ஒவ்வொரு சேர்க்கைக்கும் தனித்தனியாக ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.


தேவையான சான்றிதழ்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் (TC, Marksheet, Caste, Income, Nativity, First Graduate, etc).


கடைசி நாளில் இணையதளங்களில் டிராஃபிக் அதிகம் இருக்கும். ஆகையால் முன்பே விண்ணப்பிக்கவும்.


"கடைசி நாளை தவற விட்டால், ஒரு வருடம் வீண்!" என்பதனை நினைவில் வையுங்கள்.


அதிகாரப்பூர்வ இணையதள முகவரிகளும், கடைசி தேதிகளும் 


1. TNEA – Engineering Admission

துறை: அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள்


கடைசி தேதி: 06.06.2025


இணையதளம்: https://www.tneaonline.org


2. TNGASA – Arts & Science Colleges Admission

துறை: அரசு கலை & அறிவியல் கல்லூரிகள்


கடைசி தேதி: 27.05.2025


இணையதளம்: https://www.tngasa.in


3. TNAU – Agriculture, Horticulture, Forestry, Fisheries

துறை: வேளாண்மை மற்றும் தொடர்புடைய படிப்புகள் (அரசு + தனியார்)


கடைசி தேதி: 31.05.2025


இணையதளம்: https://tnau.ac.in


4. Government Polytechnic Colleges Admission

துறை: டிப்ளமோ படிப்புகள் – அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள்


கடைசி தேதி: 06.06.2025


இணையதளம்: https://tnpoly.in/


5. TNDALU – Law Colleges Admission

துறை: அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள்


கடைசி தேதி: 31.05.2025


இணையதளம்: https://www.tndalu.ac.in


பயனுள்ள ஆலோசனை:

விண்ணப்பிக்கும் முன்:


உங்கள் அனைத்து சான்றிதழ்களும் PDF வடிவில் தயார் இருக்கட்டும்.


புகைப்படம் மற்றும் கையெழுத்து (signature) JPEG/PDF வடிவில் தயார் இருக்கட்டும்.


இணையதள வழிகாட்டல்களை பூரணமாகப் படித்த பிறகு மட்டுமே விண்ணப்பிக்கவும்.


சந்தேகம் ஏற்பட்டால் அண்ணா பல்கலைக்கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட TFC மையங்களுக்கு நேரில் சென்று உதவி பெறலாம்


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பிறப்பு சான்றிதழ் தொலைந்து போய்விட்டதா? எளிதாக டவுன்லோடு செய்வது எப்படி?

 Education News (கல்விச் செய்திகள்) 
இன்றைக்கு ஒருவர் பிறந்ததற்கு அடையாளமே பிறப்பு சான்றிதழ் தான்.. அந்த காலத்தில் பிறந்தவர்களை பதிவு கூட செய்திருக்க மாட்டார்கள். இன்றைக்கு பிறப்பை பதிவு செய்யாமல் அவர் வாழவே முடியாது. பிறப்பு பதிவு கட்டாயம் ஆகும். பிறப்பு சான்றிதழ் இல்லாமல் படிப்பது தொடங்கி எதுவும் செய்ய முடியாது. பிறப்பு சான்றிதழ் தான் ஒருவரின் அடையாளம். பிறப்பு சான்றிதழ் தொலைந்து போனால், அதனை எப்படி வாங்குவது, புதிதாக பிறப்பு சான்றிதழ் வாங்குவோர் எப்படி ஆன்லைனில் எளிதாக டவுன்லோடு செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.


2000க்கு பிறகு பிறப்பு சான்றிதழ் வாங்காமல் விட்ட பலர் இன்று அவதிப்படுகிறார்கள். அதற்கு கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்து, அதன்பிறகு அவர் விஏஓ மூலம் விசாரித்து தான் பிறப்பு சான்றிதழ் வழங்குவார். அந்த முறை எளிதானது கிடையாது. சற்று சவாலானது.. முன்பு நீதிமன்றத்தில் போய் பிறப்பு சான்றிதழ் வாங்கினார்கள். இப்போது கோட்டாட்சியரிடம் தான் விண்ணப்பித்து வாங்க முடியும். பிறப்பு சான்றிதழ் மட்டுமல்ல.. இறப்பு சான்றிதழ் வாங்கவும் கோட்டாட்சியரிடம் தான் போய் விண்ணப்பிக்க வேண்டும். அவர் தான் விசாரணை நடத்தி, அதன் அடிப்படையிலேயே சான்றிதழ் கிடைக்கும். எனவே பிறப்பு, இறப்பு பதிவை உடனே செய்து, சான்றிதழ் வாங்கி கொள்வது நல்லது.

birth2-1747043167

அதேநேரம் ஒருவேளை பிறப்பு சான்றிதழ் வாங்கி அசல் ஆவணம் தொலைந்து போனால், எப்படி சான்றிதழ் வாங்குவது என்பதையும், புதிதாக பிறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்கள் ஆன்லைனிலேயே சான்றிதழை எப்படி டவுன்லோடு செய்வது என்பதையும் இந்த பதிவில் பார்ப்போம்.


சென்னை மாநகராட்சியில் வாழ்பவர்கள் பிறப்பு சான்றிதழை டவுன்லோடு செய்ய ஒரு இணையதளம் உள்ளது. https://chennaicorporation.gov.in/Tamil/online-civic-services/birthCertificate.do?do=show என்ற இணையதளத்தில் பதிவு எண், குழந்தையின் பெயர், பாலினம், பிறந்த தேதி, குழந்தை பிறந்த இடம், தந்தையின் பெயர், தாயின் பெயர் போன்ற விவரங்களை கொடுத்து பதிவு செய்து டவுன்லோடு செய்யலாம்.


சென்னையை தவிர மற்ற பகுதி மக்கள் பிறப்பு சான்றிதழை https://crstn.org/birth_death_tn/BCert என்ற இணையதளத்தில் டவுன்லோடு செய்யலாம். *RCHID என்று அழைக்கப்படும் குழந்தை பதிவு எண் வேண்டும். குழந்தை பிறப்பதற்காக தாயை மருத்துவமனையில் சேர்க்க எண் தருவார்கள். அந்த எண் தான் RCHID எண் ஆகும். அதன்பிறகு பாலினத்தை தெரிவிக்க வேண்டும். அடுத்ததாக எந்த மாவட்டம் என்பதை செலக்ட் செய்ய வேண்டும். அதில் எந்த மருத்துவமனை என்ற ஆப்சன் ஓபன் ஆகும். அந்த மருத்துவமனையை தேர்வு செய்ய வேண்டும். பிறந்த தேதி மற்றும் மொபைல் நம்பர் மற்றும் வெரிபிகேசன் போன்றவற்றை பதிவு செய்தால், பிறப்பு சான்றிதழை டவுன்லோடு செய்ய முடியும்.


பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை, பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சியாகும். குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற முடியும். பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகும். பிறப்பு சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர, வாக்காளார் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் பெற பாஸ்போர்ட், விசா உரிமம், அயல்நாட்டில் குடியுரிமை பெற ஆகியவற்றிற்கு இன்றியமையாத ஆவணம் ஆகும்.


ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவில் உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமும் இன்றி பதிவு செய்ய முடியும். 12 மாதங்களுக்கு பிறகு 15 வருடங்களுக்குள் ரூ.200 தாமதக்கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரை பதிவு செய்யலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய முடியாது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )