கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராயிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு!!

 கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராயிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு.. 

இந்த கல்வியாண்டில்

கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை  சேர்க்க வேண்டும் என்று உள்ளவர்கள் கீழ்கண்ட விசயங்களை முதலில் சரிசெய்து வைத்து கொள்வது கடைசி நேர அலைச்சலையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.

🔵 மாணவர்களின் பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ 10 ம், ஸ்டாம்ப் சைஸ் போட்டோ 4 ம் எடுத்து வைத்துக் கொள்ளவும். மேலும் அவற்றை டிஜிட்டல் வடிவிலும் வாங்கி வைத்துக்கொள்ளவும்.

🔵 மாணவர்கள் பெயரில் ஏதேனும் ஓர் தேசிய மயமாக்கபட்ட வங்கியில் [Nationalized bank] சேமிப்பு கணக்கு ஒன்று துவக்கி வைத்துகொள்ளவும், வங்கி கணக்கு துவங்க பான் கார்டு PAN CARD இல்லாதவர்கள் விடுமுறையில் விண்ணப்பித்து எடுத்துக் கொள்ளவும்.

🔵 பிறப்பு சான்றிதழ் (Birth certificate) ஒரிஜினல் இல்லாதவர்கள் பஞ்சாயத் போர்டு /நகராட்சி/ மாநகராட்சி ஏதேனும் ஒன்றில் விண்ணப்பித்து புதிய பிறப்பு சான்றிதழ் வாங்கி வைத்து கொள்வது நல்லது. 

🔵 சாதி சான்றிதழ் (Community certificate) இல்லாதவர்களும் / ஒரிஜினல் தங்கள் கைவசம் இல்லாதவர்ககளும் இது சமயம் புதியது ஒன்று வாங்கி வைத்து கொள்ளவும். இச்சான்று தற்போது QR code-உடன் கூடிய டிஜிட்டல்/பிடிஃஎப் வடிவில் கொடுக்கப்படுகிறது.

இந்த சான்றிதழ் கல்லூரியில் அரசு இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்க தேவை. மேலும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இது தேவை.

🔵 பிறப்பிட சான்றிதழ் (Nativity certificate) இல்லாதவர்கள் புதியது ஒன்று வாங்கி வைத்து கொள்ளவும். இச்சான்று தற்போது QR code உடன் கூடிய digital வடிவில் கொடுக்கப்படுகிறது.

இந்த சான்றிதழ் நீங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்தான் என்பதை உறுதிபடுத்தி, பொறியியல்/ மருத்துவ கல்லூரியில் அரசு இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்க தேவை.

🔵 முதல் தலைமுறை பட்டதாரி (First generation graduate certificate) சான்றிதழை, தகுதியானவர்கள் வாங்கி வைத்துக்கொள்ளவும். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்லூரி கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.

🔵 வருமான சான்றிதழ் (Income certificate) தேவையுள்ளவர்கள் வாங்கி வைத்துக்கொள்ளவும். இது பள்ளி, கல்லூரிகளில் கல்வி உதவித்தொகை மற்றும் வருவாய்வழி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தேவை.

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், பிறப்பிட சான்றிதழ் தேவையுள்ள மாணவர்கள் இப்பொழுதே இ- சேவை மையங்கள் மூலம்  விண்ணப்பித்து வாங்கி வைத்து கொள்ளவும். 1-2 வாரங்களுக்குள் கிடைத்துவிடும்.

🔵 நீட் தேர்வு மற்றும் மருத்துவ சேர்க்கைக்கு (MBBS / BDS) விண்ணப்பிக்க விரும்புவர்கள், போட்டோ மற்றும் கைரேகைகளை டிஜிட்டல் வடிவில் ஸ்கேன் செய்து வைத்திருக்கவேண்டும். மேலும் பெற்றோர்களின் சாதி சான்றிதழும் தேவை.

பெற்றோர்களுக்கான அறிவுரை,

1. மாணவர்களின் பெயர்கள் இதுவரை ரேஷன் கார்டு எனும் குடும்ப அட்டையில் சேர்க்காதவர்கள் இப்பொழுதே சேர்த்து  கொள்வது  நல்லது.

2. மாணவர்களின் மாற்று சான்றிதழ் (TC), மதிப்பெண் சான்றிதழ் (10th, 11th and 12th Mark sheets) மற்றும் எல்லா சான்றிதழ்களையும் ஜெராக்ஸ் எடுத்து வீட்டிலும் அல்லது எல்லா சான்றிதழ்களையும் கணிப்பொறியில் PDF/JPEG  வடிவில் சேமித்து வைத்துகொள்ளவும். குறைந்தது எல்லாவற்றிலும் 10 காப்பிகள் (ஜெராக்ஸ்) தேவை.

3. பிள்ளைகளுக்கு +2 பரிட்சை முடிவுகள் வரும் முன்பாக தாங்கள் பிள்ளைகளை எந்த கல்லூரியில் / எந்த பாடப்பிரிவில் சேர்ப்பது என பேசி தீர்மானம் செய்து வைத்து கொள்வது நல்லது.

4. மாணவர்களின் பெயர்கள், பிறந்த தேதி, முகவரி, பெற்றோர்களின் பெயர்கள் எல்லா சான்றிதழ்களிலும், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களிலும்,  எழுத்துப்பிழை இன்றி சரியாக, ஒரே மாதிரியாக உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும்.

5. கல்லூரி சேரக்கை தகவல்களை நாளிதழ், டிவி மற்றும் தொடர்புடைய இணையதளம் மூலம் அறிந்து வரவும்.

6. தற்பொழுது பெரும்பாலான  கலை/அறிவியல்/பொறியியல் /சட்டக் கல்லூரி படிப்புகளுக்கு  சேருவதற்க்கு  ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

7. பெரும்பாலான தனியார் கலை-அறிவியல் கல்லூரிகள் சேர்க்கை விண்ணப்ப விநியோகம்/ ஆன்லைன் பதிவை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. பிளஸ் 2 ரிசல்ட் வெளியான சில தினங்களில் பொறியியல் கலந்தாய்வு, பொது மருத்துவ கலந்தாய்வு மற்றும் வேளாண் படிப்புகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப் படலாம்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

DRDO ஆணையத்தில் Research Associate காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்க தவறாதீர்கள்

   Education News (கல்விச் செய்திகள்) 

DRDO ஆணையத்தில் Research Associate காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

DRDO DEBEL ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Research Associate பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ME / M.Tech / Ph.D தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

Research Associate பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ME / M.Tech / PhD தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு DRDO-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.05.2025ம் தேதிக்குள் hrd.cebel.debel@gov.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Assistant வேலை – சம்பவம்: ரூ.25,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

   Education News (கல்விச் செய்திகள்) 

அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Assistant வேலை – சம்பவம்: ரூ.25,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Assistant பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

Project Assistant பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ME / M.Tech / M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

+2 துணை தேர்வு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

  Education News (கல்விச் செய்திகள்) 

IMG_20250508_163256_wm

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், துணை தேர்வுக்கு மே 14 முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் 

ஜூன் 25ம் தேதி முதல் துணை தேர்வுகள் நடைபெறும்

+2 மதிப்பெண் பட்டியலை தேர்வுத்துறை இணையதளத்தில் வரும் மே 12ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மே 13 முதல் 17 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் ஊழியர்களின் விவரம் கோருதல் சார்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்

  Education News (கல்விச் செய்திகள்) 

IMG_20250508_172355

தமிழ்நாடு அமைச்சுப் பணியில் 30.06.25 நிலவரப்படி  தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் ஊழியர்களின் விவரம் கோருதல் சார்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் 08.06.25..

Over 3 Years Staff Particulars Proceedings

👇👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

+2 மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் & விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு!

  Education News (கல்விச் செய்திகள்) 

IMG_20250508_172803

+2 மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் & விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு!

+2 Scan Copy Application &  Mark Statement Downloading.pdf

👇👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

12.05.2025 முதல் +2 மதிப்பெண் பட்டியல் விநியோகம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு - Scan Copy க்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகளும் வெளியீடு!

 Education News (கல்விச் செய்திகள்) 

IMG_20250508_195744

12.05.2025 முதல் +2 மதிப்பெண் பட்டியல் விநியோகம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு - Scan Copy க்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகளும் வெளியீடு!

08.05.2025 அன்று மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது . இதனைத் தொடர்ந்து 12052025 அன்று காலை 11.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து அனைத்து மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்ட USER ID , PASSWORD- ஐக் கொண்டு தங்கள் மாணவர்களுக்கு உரிய மதிப்பெண் பட்டியலை ( Statement of Marks ) பதிவிறக்கம் செய்து , அச்சான்றிதழ்களில் உள்ள விவரங்களைச் சரிபார்த்து , தலைமையாசிரியரின் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டுத் 12.05.2025 அன்று முதலே மாணவர்களுக்கு வழங்கலாம் அல்லது மாணவர்கள் தங்களது பிறந்த தேதி , பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . தனித்தேர்வர்கள் தங்களது பிறந்த தேதி , பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் , உரிய மதிப்பெண் பட்டியலை ( Statement of Marks ) தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 கூடுதல் அறிவுரைகள்👇👇👇

DGE Proceedings - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

நேரடியாக நிரப்பப்படும் அரசுப் பணியிடங்களுக்கு நியமனத்தின் பொழுது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் - ஆணையரின் கடிதம், நாள் : 07-05-2025

 Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250509_090235

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககம் - மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையர்/ வட்டார வளர்ச்சி அலுவலர்களால் நேரடியாக நிரப்பப்படும் அரசுப் பணியிடங்களுக்கு நியமனத்தின் பொழுது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் - ஆணையரின் கடிதம், நாள் : 07-05-2025

Commissioner's letter👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் Counsellor வேலை – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க

  Education News (கல்விச் செய்திகள்) 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் Counsellor வேலை – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Counsellor பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

Counsellor பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.9,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 23.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

சென்னை துறைமுகத்தில் BE முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்: ரூ.1,20,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

  Education News (கல்விச் செய்திகள்) 

சென்னை துறைமுகத்தில் BE முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்: ரூ.1,20,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Manager (IT) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சென்னை துறைமுக அறக்கட்டளை ஆனது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையவும்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Manager (IT) பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.1,20,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 14.05.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பாரதியார் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

  Education News (கல்விச் செய்திகள்) 

பாரதியார் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

பாரதியார் பல்கலைக்கழகமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.31,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Bharathiar University காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc in Zoology / Marine biology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழக வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bharathiar University தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.