விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதற்காக மாணவர்களின் விவரத்தை சரிபார்க்க அறிவுரை

 இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதற்காக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களை எமிஸ் தளத்தில் உறுதிசெய்ய வேண்டுமென தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் 2012-13-ம் கல்வியாண்டு முதல் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.


அந்த வகையில் வரும் கல்வியாண்டின்(2025-26) முதல் பருவத்தில் இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதற்கான உத்தேச தேவைப் பட்டியல் எமிஸ் தளத்தின் மூலம் பெறப்பட்டு, மாணவர்கள் எண்ணிக்கை விவரம் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்துக்கு வழங்கப்பட உள்ளது.


எனவே, தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களின் விவரங்களும் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பது சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் மாவட்டக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3, 5, 8 வகுப்புகளுக்கு கற்றல் அடைவுத் திறன் தோ்வு

 தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு இந்த மாதம் கற்றல் அடைவுத் திறன் தோ்வு நடத்தப்படவுள்ளது.


இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக அவ்வப்போது ‘ஸ்லாஸ்’ எனும் மாநில கற்றல் அடைவுத் திறன் தோ்வு நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி நிகழாண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் 15.78 லட்சம் மாணவா்களுக்கு ஸ்லாஸ் தோ்வு ஜனவரி 3 அல்லது 4-ஆம் வாரத்தில் நடத்தப்பட உள்ளது.


இந்த தோ்வு கொள்குறி வினாத்தாள் அடிப்படையில் நடைபெறும்.


வினாத்தாளில் 3-ஆம் வகுப்பு 35 கேள்விகள், 5-ஆம் வகுப்புக்கு 45 வினாக்கள், 8-ஆம் வகுப்புக்கு 50 கேள்விகள் இடம்பெறும். இதற்கான அறைக் கண்காணிப்பாளா்களாக கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் 71,019 மாணவா்கள் நியமிக்கப்பட உள்ளனா். இவா்களுக்கு தோ்வுக்கு உரிய முறையான பயிற்சி வழங்கப்பட்டு பணிகளில் ஈடுபடுத்தப்படுவா்.


இதுதவிர தோ்வு கண்காணிப்பு பணிகளில் முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள் கட்டாயம் ஈடுபட வேண்டும். எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் தராமல் வழிகாட்டுதல்களின்படி தோ்வை சிறப்பாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடத்தி முடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் இடைநிற்றல் விகிதம் '0' - மத்திய கல்வி அமைச்சக அறிக்கையில் தகவல்

 

2023-24 ஆண்டில் தமிழ்நாட்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் '0' என மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆண்டு ஆய்வு அறிக்கையில் தகவல்...

...

IMG-20250102-WA0011

🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு.

 

2023-2024 - ஆம் ஆண்டிற்கான ' சி ' மற்றும் ' டி ' பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் ' சி ' மற்றும் ' டி ' பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் , குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட 163.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவு 👇👇👇

IMG-20250102-WA0013_wm



🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

IOB வங்கியில் Jewel Appraiser வேலைவாய்ப்பு 2024 – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 IOB வங்கியில் Jewel Appraiser வேலைவாய்ப்பு 2024 – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Jewel Appraiser பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Indian Overseas Bank காலிப்பணியிடங்கள்:

Jewel Appraiser பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Jewel Appraiser கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Indian Overseas Bank வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 25 என்றும் அதிகபட்ச வயதானது 65 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Jewel Appraiser ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Indian Overseas Bank-ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.

Indian Overseas Bank தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 24.01.2025 ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Cognizant நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

 Cognizant நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

Cognizant Technology Solutions ஆனது Process Executive பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
Cognizant பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Process Executive பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Process Executive கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 1 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Cognizant வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Process Executive ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Cognizant-ன் நிபந்தனைகளின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cognizant தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, Skill Test  மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

ஜனவரி 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!! ” வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆட்சியர் உத்தரவு”..!

 

ஜனவரி 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!! ” வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆட்சியர் அதிரடி உத்தரவு”..!

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதில், மார்கழி மாதம் திருமாலுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. மேலும், இந்த மாதத்தில்  பெண்கள் அதிகாலையில் எழுந்து விளக்கேற்றி திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளி எழுச்சி போன்ற பாடல்களை பாராயணம் செய்து திருமாலையும் ஆண்டாளையும் வழிபடுகிறார்கள். மேலும், இந்த மாதத்தில் தான் வைகுண்ட  ஏகாதசி வருகிறது.

அந்த வகையில், திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோவிலில் வரும் ஜனவரி 10ம் தேதி  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஜனவரி 25ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து, திருச்சியில் உள்ளூர் விடுமுறை அறிவித்த நாளில் பள்ளி, கல்லூரிகளுக்கு தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தால், அப்பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய யோசனை கொண்ட சிறுதொழில்களுக்கு நிதியுதவி..!! விண்ணப்பிக்கம் கடைசி தேதியை வெளியிட்ட தமிழக அரசு..!

 

புதிய யோசனை கொண்ட சிறுதொழில்களுக்கு நிதியுதவி..!! விண்ணப்பிக்கம் கடைசி தேதியை வெளியிட்ட தமிழக அரசு..!

வேலையில்லா பட்டதாரிகளின் நலன் கருதி பல வேலைவாய்ப்பு திட்டங்களை தமிழக அரசு உருவாக்கி வருகிறது. மேலும் சொந்த தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு பயிற்சிகள் மற்றும் கடன் உதவியும் அளித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு புத்தொழில் இயக்கம் (TANSEED) 7-வது பதிப்பிற்கான விண்ணப்பங்களை பெறத் தொடங்கியுள்ளது.
இந்த டான்சீட் திட்டம் என்பது 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டு பசுமைத் தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களை முதன்மை பங்குதாரர்களாக கொண்ட நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம் வரை நிதி உதவியாக வழங்குகிறது. மேலும், இத்திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு ஒரு வருட கால தொழில் வளர் பயிற்சி, வழிகாட்டுதல்கள் மற்றும் தேசிய அளவிலான புத்தொழில் நிகழ்வுகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற விரும்பும் புத்தொழில் நிறுவனங்கள் www.startuptn.in இணையதளத்தின் வழியாக  ஜனவரி 15, 2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் தமிழ்நாட்டினை தலைமையகமாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும், மத்திய அரசின் DPIIT தளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exam tips : பொதுத் தேர்விற்கு தயாராவது எப்படி? மாணவர்களுக்கு உதவும் டிப்ஸ்; கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

 Tips to prepare for Public Exam 2024 : தமிழ்நாட்டில் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மார்ச் மாதம் முதல் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறவுள்ளது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை பொறுத்தவரை உயர்கல்விக்கான மூல பாடத்தை தேர்வு செய்யும் வகையில் அமையும். 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்விக்கு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் முதன்மையானவை. இந்நிலையில், தேர்விற்கு மாணவர்கள் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகிறார்கள். பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உதவும் சில முக்கிய குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.


மாணவர்களின் நேர மேலாண்மை

பாடங்களை விரைவாக படிக்க வேண்டும் என்றால், அந்தளவிற்கு அதற்கான மனநிலையும் தேவை. அந்த மனநிலை ஏற்படுத்திக்கொள்ளுவதில் மாணவர்கள் தங்களில் கவனத்தை செலுத்த வேண்டும். முதற்கட்டமாக மாணவர்கள் நேர மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும். காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருக்கிறார்கள் என்பது முதல் இரவு தூக்குவது வரை ஒரு நேர அடிப்படையில் கவனம் செலுத்திப் படிப்பது சிறந்த முறையாகும். பள்ளிக்கு செல்வது, உணவு, படிக்கும் நேரம் என்று மட்டுமில்லாமல் உடற்பயிற்சிக்கும் நேர ஒதுக்குவது அவசியம்.


சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருத்தல்

உங்களுடைய அதிக நேரத்தை எடுத்துகொள்ளும் வலிமை சமூக ஊடகங்களுக்கு உள்ளது. மாணவர்கள் அதிக நேரம் சமூக ஊடகங்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும். இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றில் பொழுதுபோக்கிற்கு செலவிடும் நேரத்தை கட்டுபடுத்துவது மிக அவசியமான ஒன்று. அதிக நேரம் சமூக ஊடகங்களில் செலவிடுவது தேர்வு நேரத்தில் கவனச் சிதறலை ஏற்படுத்தக்கூடும்.

காலை, மாலை உடற்பயிற்சி

பள்ளி மாணவர்கள் தினசரி உடற்பயிற்சியை பழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். காலை அல்லது மாலை உடற்பயிற்சி செய்ய வேண்டும். மிக கடினமான உடற்பயிற்சி அல்லாது சிறிய அளவிலான மூச்சுப் பயிற்சி, மனதை நிலைப்படுத்த உதவும் தியானம் ஆகியவற்றை செய்யலாம். தொடர்ந்து படித்துக்கொண்டு இருக்காமல் சிறிய இடைவெளிக் கொடுத்து அமைதியாக இருப்பது மனதை சாந்தப்படுத்த உதவும்.


மனப்பாடம் செய்வதை தவிர்க்கவும்

படிக்கும் மாணவர்கள் எந்த சூழ்நிலையில் படிக்கிறார்கள் என்பது முக்கியமானது. அமைதியான சூழலை தேர்வு செய்வது உங்களுக்கு உதவும். மனப்பாடும் செய்வதை தவிர்ந்து, பாடத்தை புரிந்து படிக்கவும். தொடக்க முதலே விரைவாக படிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக படிக்கலாம். மனநிலை நிலைப்படுத்தி, அமைதியான சூழலில் நிதானமாக படித்தால் எளிதாக படிக்கலாம்.


அட்டவணை போட்டு படித்தல்

உங்களுக்கு எளிதாக இருக்கும் பாடங்கள், கடினமாக இருக்கும் பாடங்கள் என பிரித்துக்கொள்ளவும். ஒரு நாளில் எளிமை பாடங்களில் சில மணி நேரம், கடினமான இருக்கும் பாடங்களில் சில மணி நேரம் என வகைப்படுத்த படிக்கலாம். இதனால் சீக்கீரம் சோர்வடைவதை தவிர்க்கலாம். என்னென்ன பாடங்கள் எப்போது படிக்கலாம் என அட்டவணை போட்டுக்கொள்ளுவது சிறந்த வழியாக இருக்கும்.


தினசரி பள்ளியில் படிக்கும் பாடங்களை அன்றே முடிப்பது சிறந்தது

தினசரி பள்ளியில் கற்பிக்கப்படும் பாடங்களை அன்றே படித்து முடிப்பது சிறப்பாக இருக்கும். இறுதி நேரத்தில் மொத்தமாக படிக்க வேண்டும் என்றால் அதிக கடினமாக மாறிவிடும். எனவே அன்று பாடத்தை அன்றே படித்து முடிக்க வேண்டும். அதே நேரம், ஒரு நாள் தொடக்கம் முந்தைய நாள் படித்தவை எவ்வளவு புரிந்தது என்பதை ஒரு சிறிய தேர்வு வைத்து சரிபடுத்திக்கொள்ள வேண்டும்.


முந்தைய ஆண்டு வினாத்தாள்

எப்போது முதலில் புத்தகத்தை முழுமையாக முடிப்பது சிறந்தது. புத்தகங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும். அதனை தொடர்ந்து, முந்தைய ஆண்டு வினாத்தாள்களை வைத்து தேர்வு எழுதி பார்ப்பது ஒரு சிறப்பாக முன்னேற்றமாக இருக்கும். அதில் நீங்கள் செய்யும் தவறுகளை சரிபார்க்கும்போது மீண்டும் அதனை செய்யாமல் இருக்கலாம்.


அரசு வெளியிட்டுள்ள மாதிரி வினாத்தாள்

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவும் வகையில் பள்ளிக் கல்வித்துறை மாதிரி வினாத்தாள் மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு எளிமையாக விடையளிக்கும் வகையில் மாணவர்களுக்கு உதவும் புத்தகங்கள் குறைந்த கட்டணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுத் தேர்விற்கு தயார் ஆகும் மாணவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.


பாட வாரியாக தேர்வு

படித்தவரை உள்ள பாடங்களுக்கு நீங்களே ஒரு சிறிய தேர்வு வைத்துக்கொள்ளவும். படித்தவரை எவ்வளவு தெரிகிறது, என்னென்ன மேலும் படிக்க வேண்டும் என்பதை குறித்து அறிந்துகொள்ள முடியும். வாரத்திற்கு ஒரு முறை இத்தேர்வை எழுதுவது நல்லது. தேர்வு நேர அச்சத்தை குறைக்கவும் இது உதவும்.


இறுதி நேரத்தில் கடைபிடிக்க வேண்டியவை

தேர்வு நெருங்கும் நேரத்தில் மாணவர்களுக்கு தேர்வு குறித்த அச்சம் ஏற்படும். உங்கள் புத்தகங்களை தாண்டி எதும் கேட்கப்படபோவது இல்லை. நிதானமாக யோசித்து தெரிந்த தகவலை எழுத வேண்டும். தேர்வு அச்சம் ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே பாடங்களை முடிப்பது நல்லது. சரியான நேரத்திற்கு தூக்குவது, முறையான உணவு எடுத்துக்கொள்ளுவது, உடற்பயிற்சி, மனநிலையை சமப்படுத்துவது போன்ற சிறிய சிறிய காரியங்கள் கண்டிப்பாக உங்களுக்கு இறுதி நேரத்தில் கைக்கொடுக்கும்.

Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 3 - ( Unit - 1 ) Lesson Plan

Ennum Ezhuthum - 4 & 5th Std - Term 3 - ( Unit - 1 ) Lesson Plan

ஐனவரியில் 3,5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு SLAS Exam - Dir Proceedings

 IMG_20241231_124926


அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 3,5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு SLAS Exam ஜனவரி 3 அல்லது 4 ஆவது வாரத்தில் நடைபெற உள்ளது.

Dir Proceedings - Download here


🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 140 பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் (Upgraded Superintendent) பணியிட விவரங்கள் வெளியீடு.

 IMG_20241230_191654

பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 140 பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் (Upgraded Superintendent) பணியிட விவரங்கள் வெளியீடு.👇👇👇

DSE - Upgraded Superintendent Vacancy List - Download here


Ennum Ezhuthum - Term 3 - Subject Wise No of Activities & Weekly Plan

 CLASS : IV & V TERM - 3 : ENNUM EZHUTHUM SUBJECT WISE NO . OF ACTIVITIES : 2024-25


TERM - 3 ENNUM EZHUTHUM ACTIVITIES WEEKLY PLAN : 2024-25

👇👇👇

Download here