Ennum Ezhuthum Lesson Plan | 2024 - 2025
Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term III - Empty Lesson Plan - Download here
Ennum Ezhuthum - 4,5th Std - Term III - Empty Lesson Plan - Download here
Education News, Employment News in tamil
Ennum Ezhuthum Lesson Plan | 2024 - 2025
Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term III - Empty Lesson Plan - Download here
Ennum Ezhuthum - 4,5th Std - Term III - Empty Lesson Plan - Download here
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெயர்ப் பட்டியலில் ஜனவரி 2-ம் தேதிக்குள் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமென தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் ந.லதா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2024-25) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப் பட்டியல் கடந்த டிச. 24-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் விடுபட்ட மாணவர்களை சேர்க்கவும், இறப்பு/ மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களை நீக்கவும் இறுதி வாய்ப்பு தற்போது வழங்கப்படுகிறது.
இதையடுத்து அனைத்துவித உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களும் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்களை ஜன.2-ம் தேதிக்குள் சரிசெய்ய வேண்டும்.
அதேநேரம் இறப்பு மற்றும் மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்கள் பெயர்களை மட்டும் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் நீண்ட விடுப்பில் உள்ள மாணவர்களின் பெயர்களை தன்னிச்சையாக நீக்கக்கூடாது. சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்களின் அனுமதி பெற்ற பின்னரே அத்தகைய மாணவர்களை இறுதி பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். இதற்கான அறிவுறுத்தல்களை சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நமது மின்னணு பணிப்பதிவேடு eSR ஐ தரவிறக்கம் செய்தல் மற்றும் விடுபட்ட விவரங்களை Edit செய்யும் வழிமுறை
e-SR Download Edit Procedure - Download here
ஆசிரியர் பட்டய தேர்வு எழுதியவர்களுக்கு வரும் 30ம் தேதி முதல் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது.
மாவட்ட சுகாதார சங்கத்தில் Staff Nurse காலிப்பணியிடங்கள் – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Dental Assistant, Staff Nurse மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 26 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு / 10ம் வகுப்பு / B.Sc / BDS / BSMS / D.Pharm / Diploma / M.Sc / Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.13,800/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
IIITDM காஞ்சிபுரத்தில் Junior Research Fellow வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.37,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.01.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
CMC வேலூர் கல்லூரியில் Senior Resident வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Senior Resident, Teacher, Physiotherapist மற்றும் பல்வேறு பணிக்கான 5 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Senior Resident, Teacher, Physiotherapist மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc / BE / B.Tech / M.Ed / M.Phil / M.Sc / MA / MCA / MD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.01.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
Click Here to Download - மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் - CEO Proceedings - Pdf
1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
உரிய அடையாள அட்டையின்றி அலுவலகங்களுக்கு வரும் அரசு ஊழியர்களை, ஜன., 1ம் தேதி முதல் திருப்பி அனுப்ப, போலீசார் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில், 16 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். தலைமை செயலர் முதல் குக்கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் வரை, பணியின் போது அடையாள அட்டையை கழுத்தில் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். தேவைப்படும் போது, தொடர்புடைய அதிகாரிகளிடம் அதை காண்பிக்க வேண்டும் என, மனிதவள மேலாண்மை துறை வாயிலாக, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இதற்கென முகாம்கள் நடத்தி புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை, மனிதவள மேலாண்மை துறை வழங்கியுள்ளது. ஆனால், இந்த உத்தரவை, அரசு ஊழியர்கள் பெரும்பாலானவர்கள், முறையாக கடைபிடிப்பது இல்லை.
உயர் அதிகாரிகளும் அடையாள அட்டை அணிவது கிடையாது.
தலைமை செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், வெளியே பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாரிடம், தங்கள் அடையாள அட்டையை காண்பித்து விட்டு செல்ல வேண்டும். ஆனால், அடையாள அட்டையை காண்பிக்காமல், பணிக்கு வேகமாக பலரும் செல்கின்றனர்.
இதை தட்டிக் கேட்கும் போலீசாரிடம், சில அரசு ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதை பயன்படுத்தி, கோரிக்கை தொடர்பாக வரும் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர், உரிய ஆவணங்களை காட்டாமல் உள்ளே சென்று, போராட்டத்தில் ஈடுபடும் சம்பவங்களும் நடக்கின்றன.
பல்வேறு துறைகளின் தலைமை அலுவலகங்கள் இயங்கும் சேப்பாக்கம் எழிலகம், நந்தனம், சைதாப்பேட்டை உள்ளிட்ட வளாகங்களிலும், இதேபோன்று பிரச்னை ஏற்படுகிறது. எனவே, மனிதவள மேலாண்மை உத்தரவை முழுமையாக பின்பற்ற தேவையான நடவடிக்கையை எடுக்கும்படி, போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
அரசு அதிகாரிகள் உரிய உத்தரவு பிறப்பிக்காத பட்சத்தில், முழுமையாக நடைமுறைப்படுத்த போலீசார் தயாராகி வருகின்றனர். அதன்படி, உரிய அடையாள அட்டை இல்லாமல், அரசு அலுவலக வளாகங்களுக்குள் நுழையும் ஊழியர்களை, ஜன., 1ம் தேதி முதல், திருப்பி அனுப்ப உள்ளனர்
.
பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்களின் வேலை வாய்ப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் ஓராண்டு கால தொழில் பயிற்சி திட்டத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிமுகப்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடிக்கும் மாணவர்களில் கணிசமானோர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3 ஆண்டு கால பொறியியல் டிப்ளமா படிப்பில் சேருகிறார்கள். அதேபோல், பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் 'லேட்ரல் என்ட்ரி' முறையில் நேரடியாக 2ம் ஆண்டு சேர்த்துக் கொள்ளப் படுகிறார்கள். அரசு பாலிடெக்னிக், அரசு உதவிபெறும் பாலிடெக்னிக், தனியார் சுயநிதி பாலிடெக்னிக் என 450க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகளில் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 50 ஆயிரம் மாணவர்கள் பயில்கின்றனர்.
ஓரு காலத்தில் பாலிடெக்னிக் டிப்ளமா படிப்பில் சேர இடம் கிடைப்பது கடினமாக இருந்து வந்த நிலையில், அண்மைக் காலமாக பாலிடெக்னிக் கல்லூரியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு கல்லூரியிலும் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என பல்வேறு பாடப்பிரிவுகளில் சுமார் 300 இடங்கள் இருந்தாலும் அதில் 50 சதவீத இடங்களே நிரம்புகின்றன.
இந்நிலையில், பாலிடெக்னிக் டிப்ளமா படிக்கும் மாணவர்களின் வேலை வாய்ப்புத் திறனை அதிகரிக்கவும், இன்றைய தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமை உடையவர்களாக அவர்களை உருவாக்கும் நோக்கிலும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பாலிடெக்னிக் பயிலும் மாணவர்களின் வேலை வாய்ப்புத் திறனை மேம்படுத்த ஓராண்டு கால தொழில்பயிற்சி திட்டத்தை (Industrial Training Program) நடப்பு கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின்படி, 3 ஆண்டு கால படிப்பில் மாணவர்கள் கடைசி ஓராண்டு ஏதேனும் ஒரு தொழில்பயிற்சி மையத்தில் நேரடி பயிற்சி பெறுவார்கள். அந்த மையம் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் அனுமதி பெற்றதாக இருக்கும். முதல் இரண்டு ஆண்டுகள் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து அங்கு தற்போதைய முறையில் தேர்வெழுதுவார்கள். 3ம் ஆண்டு முழுவதும் கல்லூரிக்கு வெளியே குறிப்பிட்ட தொழில் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுவார்கள். அவர்களுக்கு சம்பந்தப்பட்ட பொறியியல் பாடத்தில் தியரியுடன் செயல்முறை திறன், தகவல் தொடர்புத்திறன், நேரடி தொழில்பயிற்சி போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும்.
அந்த மையத்தில் மாணவர்களுக்கு இரண்டு செமஸ்டர் தேர்வுகள் (அக்டோபர் மற்றும் ஏப்ரல்) நடத்தப்பட்டு குறிப்பிட்ட மதிப்பெண் (கிரெடிட்) வழங்கப்படும். மதிப்பெண் விவரங்கள் மாணவர்கள் படித்து வந்த பாலிடெக்னிக் கல்லூரியில் சமர்ப்பிக்கப்படும். 3 ஆண்டு மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் டிப்ளமா வழங்கப்படும். இந்த புதிய திட்டத்தில் விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுவர். இத்திட்டத்தில் சேர விருப்பம் தெரிவித்த மாணவர்கள் அதன் பிறகு பழைய முறைக்கு மாறிக்கொள்ள முடியாது.
இத்திட்டத்துக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் இணையதளத்தில் வெளியிட்டு இது தொடர்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் கேட்டுப்பெற்றுள்ளது. இந்த ஓராண்டு கால தொழில்பயிற்சி திட்டம் குறித்து நடப்பு கல்வி ஆண்டில் (2024-2025) சேர்ந்துள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையர் டி.ஆபிரகாம் அறிவுரை வழங்கியுள்ளார்
அரசு விடுமுறை அளித்தால் 9 நாட்கள் வரை விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. போகி பண்டிகைக்கும் விடுமுறை அளிக்கப்படுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 14 செவ்வாக்கிழமை தை பொங்கல், ஜனவரி 15 புதன் திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 வியாழன் உழவர் திருநாள் வருகிறது. அரசு மனசு வைத்தால் அரசு ஊழியர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் 9 நாள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.
அதாவது பொங்கல் முந்தைய நாள் போகி பண்டிகை ஜனவரி 13ம் தேதி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் போகி பண்டிகை்கு அரசு விடுமுறை அளித்து வருகிறது. ஆகையால் அன்றைய தினம் அரசு விடுமுறை அளிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் ஜனவரி 11, 12ம் தேதிகள் சனி, ஞாயிறு விடுமுறை வந்து விடுகிறது. இடையில் ஜனவரி 17ம் தேதி வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கும் பட்சத்தில் மறுநாள் சனி, ஞாயிறு வார விடுமுறை வந்துவிடும். அப்படி வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கும் பட்சத்தில் மொத்தம் 9 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.
அப்படி விடுமுறை அளிக்காத பட்சத்தில் போகி பண்டிகைக்கு மட்டும் விடுமுறை அறிவித்தால் பள்ளி மாணவர்களுக்கு 6 நாட்கள் விடுமுறை கிடைக்கும். 9 அல்லது 6 நாட்கள் விடுமுறை கிடப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் பள்ளி மாணவர்கள் இப்போதே குஷியில் இருந்து வருகின்றனர். ஏற்கனவே அரையாண்டு விடுமுறை 9 நாட்கள் கிடைந்த நிலையில் மீண்டும் தொடர் விடுமுறை கிடைக்க உள்ளது.
TCS வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
Python Developer முன் அனுபவம்:
04 முதல் 08 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
TCS ஊதிய விவரம்:
தேர்வாகவும் தகுதியானவர்களுக்கு TCS-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
Python Developer தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.03.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.