Day 61 | Biology | Classification of Living Organism - 2
Click here to download pdf file
🔻🔻🔻
Click here to join Group4 whatsapp group
Education News, Employment News in tamil
Day 61 | Biology | Classification of Living Organism - 2
Click here to download pdf file
🔻🔻🔻
Click here to join Group4 whatsapp group
Group 4 | Day 61 | குறுந்தொகை பாடல்கள், அறநூல்கள்
Click here to download pdf file
🔻🔻🔻
Click here to join Group4 whatsapp group
Day 60 | Biology | Classification of Living Organism
Click here to download PDF FILE
🔻🔻🔻
Click here to join Group4 whatsapp group
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் (ஏஐசிடிஇ) தரவுகளின் படி, 2022-23ம் கல்வியாண்டில் பொறியியல் படித்த மாணவர்களில் 80 விழுக்காடு பேர் வளாக வேலைவாய்ப்புகள் வாயிலாக (Placement Campus) பணி நியமனங்களை பெற்றுள்ளனர். பொறியியல் படித்த மாணவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புக் கிடைக்காது இருந்த நிலையில், தற்போதைய போக்கு ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஏஐசிடிஇ தரவுகளின் படி, 2022-23ம் கல்வியாண்டில் இளநிலை, முதுநிலை, சான்றிதழ் பட்டயம் என அனைத்து நிலைகளின் கீழ் பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்களில், 80.9 விழுக்காடு மாணவர்கள் வளாக வேலைவாய்ப்புகள் வாயிலாக (Placement Campus) பணி நியமனங்களை பெற்றுள்ளனர். கொரோனா பெருந்தொற்று பரவிய காலகட்டங்களான 2020-21ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 62 விழுக்காடாகவும், 2021-22ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 62.9 விழுக்காடாகவும் இருந்தது. அதேபோன்று, கொரோனா தொற்றுக்கு முந்தைய 2018-19ம் கல்வியாண்டில் 48.9 விழுக்காடாகவும், 2019-20ம் கல்வியாண்டில் 57.3 விழுக்காடாகவும் மட்டுமே இருந்தது.
கொரோனா தாக்குதலுக்குப் பிந்தைய உலகில், தொழிலாளர் சந்தை (Labour Market) முழு வீச்சில் செயல்பட தொடங்கியதும், வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகளில் மாணவர்கள் அதிகம் ஈடுபட தொடங்கியதும் இந்த சமீபத்திய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கொரோனா தொற்று முடிவடைந்த 2 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்திய பொருளாதாரம் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் உற்பத்தியை விரிவாக்கம் செய்து வருகின்றன . இதனால், முன்னெப்போதும் இல்லாத அளவு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
அதேபோன்று, ஏஐசிடிஇ நிர்வாகம் நிர்வகித்து வரும் internship portal-லும் இதற்கு முக்கிய காரணம் என்றும் தெரிவித்தார். இந்த இன்டெர்ன்ஷிப் போர்டல் மாணவர்களுக்கான உள்ளகப் பயிற்சி (இன்டெர்ன்ஷிப்) சேவையை வழங்கி வருகிறது. இந்த இணையப்பக்கம் இன்டெர்ன்ஷிப் தேடும் மாணவர்களையும், தனியார் வேலை வழங்குவோரையும் ஒருங்கிணைக்கிறது. உள்ளகப் பயிற்சியை முடித்த மாணவர்கள் அதே நிறுவனத்தில் பின்னாட்களில் பணி நியமனங்களைப் பெறுவதாகவும் தெரிவித்தார். மேலும், ரோபோடிக்ஸ் என்ஜினியரிங், பெட்ரோலியம் என்ஜினியரிங், வானூர்தி அறிவியல் (Aeronautics), செயற்கை நுண்ணறிவு / இயந்திரக் கற்றல் ஆகிய துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகம் உருவாகி வருவதாகவும் தெரிவித்தார்.
🔻🔻🔻
இரயில்வே பாதுகாப்புப் படை (Railway Protection force) என்பது இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளுள் ஒன்றாகும். இந்திய இரயில்வேயின் பாதுகாப்பிற்கும், பயணிகளின் பாதுகாப்பிற்கும் உருவாக்கப்பட்டது. கடந்த, ஓராண்டாகவே, இந்திய ரயில்வே பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் குறித்த தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம், 9000 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு குறித்து செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த செய்தியை ரயில்வே அமைச்சகம் மறுத்தது. இதுபோன்ற அறிவிப்புகள் எதையும் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்தது.
இந்நிலையில், இந்திய ரயில்வே பாதுகாப்புப் படை (Railway protection Force) மற்றும் சிறப்பு பாதுகாப்புப் படையில் (Railway Protection Special Force) காலியாக உள்ள 2,500 காவலர் பணியிட ஆட்சேர்க்கைக்கான ஒப்புதலை இந்திய ரயில்வே துறை வாரியம் வழங்கியுள்ளது. விரைவில், இதற்கான ஆள்சேர்க்கை அறிவிக்கை (Recruitment Notification) வெளியிடபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த ஆட்சேர்ப்பின் மூலம், இந்திய ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் சிறப்பு பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 2000 கான்ஸ்டபிள் (Constable) பணியிடங்களும், 250 துணை ஆய்வாளர் (Sub - Inspector) பணியிடங்களுக்கும் நிரப்ப ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. இந்த 10 சதவிகித இடங்கள் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 15 சதவிகித இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வயது வரம்பு : கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.07.2024 (ஜுலை மாதத்துக்குள் ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ் வெளியானால்) அன்று 18 -25 க்கு கீழ் இருக்க வேண்டும். துணை ஆய்வாளர் பதவிக்கு 20 - 25க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.
கல்வித் தகுதி: கான்ஸ்டபிள் பதவிக்கு 10ம் வகுப்பு அல்லது அதற்கு இனமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்…துணை ஆய்வாளர் பதவிக்கு, ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: கணினி வழியிலான எழுத்துத் தேர்வு , உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சேர்க்கை முறை நடைபெறும். எழுத்துத் தேர்வு, பொது விழிப்புணர்வு (General Awareness), பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Problem Solving ability), காரணங்கானல் (Logical Reasoning) ஆகிய மூன்று கூறுகளைக் கொண்டதாக உள்ளது. பொது விழிப்புணர்வு பகுதியில் 50 கேள்விகளும், பிரச்னை தீர்க்கும் ஆற்றல் பகுதியின் கீழ் 35 கேள்விகளும், காரணங்கானல் பகுதியின் கீழ் 35 கேள்விகளும் கேட்கப்படும். சிறியளவு பயிற்சி இருந்தால் கூட வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
எனவே, இந்த ஆட்சேர்ப்பு அறிவிவிக்கை தொடர்பான தகவல்களுக்கு https://rpf.indianrailways.gov.in/RPF//index.jsp என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தை அவ்வப்போது பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
🔻🔻🔻
சமூக பாதுகாப்புத்துறையின் மிஷன் வத்சால்யா திட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் நலக்குழு/இளைஞர் நீதிக்குழுமத்தில் (Child welfare committee and juvenile justice board ) காலியாகவுள்ள உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் (Data Entry Operator) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலும், இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கணினியில் டிப்ளமோ/சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை மற்றும் முதுநிலையில் தட்டச்சு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் பணியில் அனுபவமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 42-க்குள் இருக்க வேண்டும்.
மேற்காணும் தகுதியின் அடிப்படையில் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையிலான இப்பணியிடம் திறன் தேர்வு (Skill Test) மற்றும் நேர்முகத்தேர்வு வாயிலாக நிரப்பப்படவுள்ளது.
இப்பணியிடத்திற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தேனி மாவட்ட வலைதளத்தின் மூலம் (https://theni.nic.in/) விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அனைத்துக் கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களின் நகலினை சுயகையொப்பமிட்டு கீழ்கண்ட முகவரிக்கு பத்திரிக்கை செய்தி வெளிவந்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் 05/01/2024 முதல் 19/01/2024 அன்று மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், ஒருங்கிணைந்த பல்துறை வளாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தேனி மாவட்டம் - 625531 ஆகும்.
🔻🔻🔻
ஆயில் இந்தியா ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Senior Officer, Senior Geologist, Superintending Medical Officer, Superintending Engineer & Confidential Secretary பணிக்கென காலியாக உள்ள 102 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Officer, Senior Geologist, Superintending Medical Officer, Superintending Engineer & Confidential Secretary பணிக்கென காலியாக உள்ள 102 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s degree / Postgraduate / Engineering / MBA / Diploma / MS / MD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.50,000/- முதல் ரூ.2,20,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் Computer Based Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 29.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
🔻🔻🔻
தமிழக அரசில் ரூ.13,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!
தென்காசி மாவட்ட சுகாதார சங்கம் ஆனது Physiotherapist பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Physiotherapist பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.13,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
SIMCO நிறுவனத்தில் Office Assistant வேலைவாய்ப்பு – 40+ காலிப்பணியிடங்கள் || மாத ஊதியம்: ரூ.28,200/-
SIMCO ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Office Assistant, Sales Person, Supervisor பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
SIMCO வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Office Assistant, Sales Person, Supervisor பணிக்கென காலியாக உள்ள 48 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, Any Degree, Diploma, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.5,200/- முதல் ரூ.28,200/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 29.02.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
🔻🔻🔻
Central Bank of India ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Attender / Sub Staff, Watchman cum Gardener பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழ் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையவும்.
Central Bank of India காலிப்பணியிடங்கள்:
Central Bank of India வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Attender / Sub Staff, Watchman cum Gardener பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Attender கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 7ம் வகுப்பு / 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Central Bank of India வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் பணியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Attender ஊதிய விவரம்:
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.6,000/- முதல் ரூ.8,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Central Bank of India தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 23.01.2024ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
🔻🔻🔻
தனியார் நிறுவனமான Amazon ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Device Associate பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Amazon காலிப்பணியிடங்கள்:
Device Associate பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Device Associate கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Amazon வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Device Associate ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு Amazon-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியமாக வழங்கப்படும்.
Amazon தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Skill Test / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
🔻🔻🔻
மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Typist, Telephone Operator, Cashier, Xerox Operator பணிக்கான 33 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.71,900/- வரை ஊதியம் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
மெட்ராஸ் உயர் நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:
Typist, Telephone Operator, Cashier, Xerox Operator பணிக்கென காலியாக உள்ள 33 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Typist தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ராஸ் உயர் நீதிமன்ற வயது வரம்பு:
Typist ஊதிய விவரம்:
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
மெட்ராஸ் உயர்நீதிமன்ற விண்ணப்ப கட்டணம்:
Examination fee – ரூ.500/- (SC / SC(A) / ST தவிர மற்றவர்களுக்கு)
Typist தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Written Examination, Skill Test, Viva-voce மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
🔻🔻🔻
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு, NTTF இன்ஸ்டிட்யூட்டில் வேலைவாய்ப்புடன் கூடிய தொழில் துறை பயிற்சியை தாட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் மெக்கானிக்கல் புரொடக்சன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் பட்டயப் படிப்பு / பொறியியல் பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொழில்துறை சார்ந்த தானியங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி (Industrial Automation) மற்றும் டிஜிட்டல் உற்பத்தியில் (Digital Manufacturing) திறன் மேம்பாட்டு பயிற்சியை, NTTF மூலம் வழங்கவும், புகழ் பெற்ற தனியார் தொழில் சாலைகளில் வேலை வாய்ப்பு பெற்றுதரவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மெக்கானிக்கல் புரொடக்சன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் பட்டயப்படிப்பு/ பொறியியல் பட்டப்படிப்பு முடித்த 18 வயது முதல் 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 6 மாதம் ஆகும். மேலும் தங்கி படிக்கும் வசதியும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் மாணாக்கர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் (SSC and NSDC Approval Certificate) அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) ஆதிதிராவிட / பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில் தமிழ்நாடு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது
இதில், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் (Self Employment Programme for Youth (SEPY) கீழ் படித்த, வேலையற்ற இளைஞர்கள் தாட்கோ நிறுவனத்திடம் இருந்து ரூ.2.25 லட்சம் வரை தொழில் மானியம் பெற்று வருவாய் ஈட்டும் தொழிலை மேற்கொள்ளலாம்.இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம்: படித்த, வேலையற்ற அல்லது குறைவான சம்பளத்தில் வேலை செய்யும் ஆதி திராவிட இளைஞர்கள் தங்களுக்கு தெரிந்த விருப்பமான தொழிலில் மானியம் மற்றும் கடன் உதவி பெற்று வருவாய் ஈட்டி பயன்பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் பொருட்டு இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தகுதி: குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) மிகாமல் இருக்க வேண்டும்; வயது 18-க்கு மேல் 35-வயதிற்குள்ளாகவும் இருக்கவேண்டும்; கடன் மற்றும் மானியம் கோரும் தொழிலை பற்றி அறிந்தவராகவோ அனுபவம் உள்ளவராகவோ இருக்க வேண்டும்; விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்கக் கூடாது; தாட்கோ, மாநில அல்லது மத்திய அரசு அங்கீகரிக்கப்பட்ட தொழில் பயிற்சி நிறுவனங்களின் தகுதிச் சான்று பெற்றிருக்க வேண்டும்.
திட்டமதிப்பீட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதிகபட்சமாக 30% அல்லது ரூ.2.25 இலட்சம் இதில் எது குறைவானதோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். இவ்வாறு விடுவிக்கப்படும் மானியம் முன் விடுவிப்பு மானியமாக (Front End Subsidy) இருக்கும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர் கீழ்கண்ட நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்: - துவங்க உத்தேசித்துள்ள தொழிலை விண்ணப்பதாரரே தெரிவு செய்து கொள்ள வேண்டும்; இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் சொத்து விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே - பதிவு செய்யப்பட வேண்டும்; விண்ணப்பதாரர் தொழில் புரிவதற்காக கடன் மற்றும் மானியம் பெறப்பட்ட மாவட்டத்திலேயே தொழில் புரிய வேண்டும்.
விண்ணப்பம் பெறும் முறை:- விண்ணப்பம் இலவசமாக மாவட்ட மேலாளர்கள் அலுவலகத்தில் வழங்கப்படும் அல்லது தாட்கோ இணையதளத்தில் (www.tahdco.tn.gov.in) உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யலாம். இணையதளத்தில் Self Employment Programme for Youth என்ற இணைப்பைக் கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் (2 நகல்களில்) விண்ணப்பதாரரின் புகைப்படம் ஓட்டப்பட்டு கீழ்க்கண்ட ஆவணங்கள் இணைத்து மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். சாதி சான்று; குடும்ப ஆண்டு வருமானச் சான்று; குடும்ப அட்டை நகல் / வட்டாட்சியர் கையொப்பமிடப்பட்ட இருப்பிட சான்று; விலைப்புள்ளி டின் எண்னுடன் (Quotation with TIN No.); ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் (வாகன கடனுக்கு மட்டும்); முன் அனுபவச் சான்றிதழ்; மாவட்ட மேலாளர் மற்றும் வங்கி கோரும் இதர ஆவணங்கள்
திட்ட மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு சொத்து உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதை உறுதியளித்து விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதார்களைத் தெரிவு செய்யும் முறை: மாவட்ட மேலாளர்களால் பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து மாவட்ட அளவிலான கீழ்கண்ட அலுவலர்களைக் கொண்ட தேர்வுக் குழு விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும்.மாவட்ட மேலாளர் தலைவர்/ மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் உறுப்பினர்/ பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் - உறுப்பினர் ஆகியாரைக் கொண்ட தேர்வு குழுவினரால் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தாட்கோ மானியத் தொகைக்கான பரிந்துரையுடன் வங்கிக்கு அனுப்பப்படும்.
நிதி விடுவிக்கும் முறை:- வங்கிகடன் தொகை அளிப்பதற்கான ஒப்புதல் கடிதம் (Form III) பெறப்பட்டவுடன் தாட்கோ மானியம் மாவட்ட ஆட்சியரின் செயல்முறை ஆணைப்படி வங்கிக்கு நேரடியாக விடுவிக்கப்படும். வங்கி மேலாளர், திட்ட மதிப்பீட்டின்படி சொத்து உருவாக்குவதற்கான தொகையினை விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள நிறுவனத்திற்கு தொழில் புரியத் தேவையான பொருட்கள் / வாகனங்கள் வாங்குவதற்காக நேரடியாக விடுவிப்பார்.
🔻🔻🔻