Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19.07.2025 நாளை ( சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
வேலைவாய்ப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,("St. Ann's college of arts and science") திண்டிவனம் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில்150ற்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது.
வயது: 18 வயது முதல் 35 வயது வரையிலான வேலை தேடுபவர்கள் கலந்து கொள்ளலாம்.
கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி முடித்தவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம்.
150க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான 15000க்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் ஆண் பெண் இரு பாலரும் கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 9499055906 / 9080515682 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
0 Comments:
Post a Comment