தமிழ்நாட்டில் பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எல்லாம் ஆவின் பாலகங்களை நாம் பார்த்து விட முடியும். தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான ஆவின் பால் நிறுவனம் சாதாரண மக்களும் Franchise முறையில் ஆவின் பாலகங்களை திறப்பதற்கான வாய்ப்பு வழங்குகிறது.
ஆவின் பாலகம்:
ஆவின் பாலகங்களில் கடையின் அளவை பொறுத்து பால் மட்டுமில்லாமல் ஐஸ்கிரீம், பிஸ்கட், பால்கோவா, மில்க் ஷேக், லெசி, சூடான பால், பாதாம் பால் ஆகியவற்றை விற்பனை செய்யலாம். அந்த வகையில் ஆவின் பாலகத்தை திறப்பது எப்படி அதற்கு எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்ற விவரங்களை நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
எப்படி விண்ணப்பம் செய்வது?:
பொதுமக்கள் அதிகம் வந்து செல்லகூடிய இடங்களில் ஆவின் கடைகளை அமைத்தால் நாம் நல்ல லாபம் பார்க்கலாம். ஆவின் பாலகம் அமைப்பதற்கு நாம் சொந்தமாக இடம் வைத்திருந்து அதனை தயார் செய்யலாம் அல்லது வாடகைக்கும் கடை எடுத்து கொள்ளலாம். ஆவின் நிறுவனம் மூன்று அளவிலான கடைகளுக்கு அனுமதி வழங்குகிறது. கடை அளவு: டைப் ஏ வகை கடைகள் 8*8 சதுர அடி பரப்பில் இருந்தாலே போதும். டைப் பி வகை கடைகள் 10*10 சதுர அடி பரப்பிலும், டைப் சி வகை கடைகள் 15*15 சதுர அடி பரப்பிலும் இருக்க வேண்டும். கடைகளில் அளவை பொறுத்து நம் முதலீடும், விற்பனை விகிதமும் மாறுபடும்.
எவ்வளவு முதலீடு தேவை:
கடையின் அளவு மற்றும் நாம் அதில் விற்பனை செய்ய இருக்கும் பொருட்களின் வகையைப் பொறுத்து அந்த கடையை நிறுவுவதற்கான அனைத்து உபகரணங்களையும் அமைக்க வேண்டி இருக்கும். நாம் முன்பே கூறியதை போல இது கடையின் அளவைப் பொறுத்து மாறுபடும். இதன்படி குறைந்தபட்சம் 1.5 லட்சம் ரூபாயில் இருந்து அதிகபட்சம் 6 லட்சம் ரூபாய் வரை இவ்வகையான கடைகளை நிறுவுவதற்கு செலவாகும் என ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு குறிப்பிடுகிறது.
எவ்வளவு டெபாசிட் தேவை?:
மேலும் செக்யூரிட்டி டெபாசிட் என 30 ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும். இது மீண்டும் திரும்ப வழங்கக்கூடிய ஒரு தொகை என ஆவின் தரப்பு தெரிவிக்கிறது. கடையை நடத்துவதற்கு என ஒரு செலவினம் இருக்கும். இதனை working capital என அழைக்கின்றனர். கடையின் விற்பனை விகிதத்தை பொறுத்து இது மாறுபடும். சராசரியாக இது மாதத்திற்கு 5 முதல் 10 லட்சம் வரை இருக்கலாம் என சொல்லப்படுகிறது
தொடர்பு எண்கள்:
கடை தயாராக இருக்கிறது, முதலீட்டுக்கு பணமும் இருக்கிறது என்பவர்கள் 9043099905, 9566860286 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இதில் ஆவின் நிறுவன அதிகாரிகள் கடை நிறுவுவது தொடர்பான ஆலோசனைகள், திட்டங்கள், முதலீடுகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் வழங்குவார்கள். கடையை நேரில் வந்து பார்வையிட்டு தொழிலை மேம்படுத்தும் ஆலோசனையும் வழங்குவார்கள்.
எவ்வளவு லாபம்?:
கடை நிறுவியவர்கள் கடைக்கு தேவைப்படும் பொருட்களை 48 மணி நேரத்திற்கு முன்னதாகவே ஆவின் செயலியில் ஆர்டர் பதிவு செய்ய வேண்டும். இந்த பொருட்கள் ஆவின் மொத்த விற்பனை டீலர்கள் அல்லது ஆவின் நிறுவன வாகனம் மூலம் விநியோகம் செய்யப்படும். பொருட்களின் பில்லிங் விலையில் டிரேட் மார்ஜின் 8 முதல் 18 சதவீதம் வரை கிடைக்கும்.
ஆவின் பாலகம் திறக்க எவ்வளவு முதலீடு தேவை? எப்படி விண்ணப்பம் செய்வது?
பள்ளிக்கல்வியில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு விருப்பப் பணி மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு.
Education News (கல்விச் செய்திகள்)
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு விருப்பப் பணி மாறுதல் கலந்தாய்வு.
தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மனமொத்த மாறுதல் வழங்க அனுமதி வழங்கப்பட்டு 08.05.2025 அன்று சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயிலாக ஆணை வழங்கப்பட்டுள்ளது . இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் வட்டாரவளமையங்களில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கு கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் மாவட்டத்திற்குள் விருப்ப மாறுதல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது
Consolidated staff transfer Proceedings - Download here
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 73,000 பேர் விண்ணப்பம்: தரவரிசை பட்டியல் சில தினங்களில் வெளியீடு
Education News (கல்விச் செய்திகள்)
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 72,943 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 65 சதவீதம் அதிகமாகும். தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்கள் இருக்கின்றன. இதில் 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
அதேபோல், 3 அரசு பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 250 பிடிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் போக, மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. தனியார் கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,900 இடங்கள் உள்ளன. அதில், 126 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
இந்நிலையில், 2025-26-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு https://tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது ஜூன் 25-ம் தேதியுடன் நிறை வடைந்தது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஆர்வமாக விண்ணப்பித்தனர். நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், அரசு ஒதுக்கீட்டுக்கு 42 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் விண்ணப்பித்துள்ளனர்.
மொத்தம் 72,943 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டைவிட 65 சதவீதம் கூடுதல் எனவும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், விண்ணப்பதாரர்களின் நீட் மதிப்பெண்களை மத்திய அரசிடமிருந்து பெற்று அதன் அடிப்படையில், சில தினங்களில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )
அரசுப் பணியாளர்களுக்கான திருமண முன்பணத்தை உயர்த்தி அரசாணை வெளியீடு!
Education News (கல்விச் செய்திகள்)
Loans and Advances by the State Government Marriage Advances to Government employees - Enhancement of amount - Orders - Issued .
அரசுப் பணியாளர்களுக்கான திருமண முன்பணத்தை உயர்த்தி `(Fifteen Months Basic Pay or Rupees Five Lakh, whichever is less)` அரசாணை வெளியீடு!
G.O.Ms.No.148 - Marriage Advance - Download here
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )
DSE - TRANSFER COUNSELLING SCHEDULE | 2025 - 2026
Education News (கல்விச் செய்திகள்)
DSE - COUNSELLING SCHEDULE | 2025 - 2026

Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )
Teachers Counselling Revised Schedule 2025 - 2026 Published
Education News (கல்விச் செய்திகள்)
2025- 26 Teachers Counselling Schedule Revised.pdf