Search

இஞ்சி தண்ணீர் vs இஞ்சி தேநீர்.. நம் ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது.?

 நம்முடைய இந்திய சமையலறையில் கண்டிப்பாக இருக்கும் மற்றும் அதிகம் பயன்படுத்தப்படும் பிரபலமான பொருள் இஞ்சி. உணவின் சுவையை அதிகரிப்பதில் இருந்து ஸ்ட்ராங்கான டீ-யை தயாரிப்பது வரை பல வழிகளில் இஞ்சி நமது டயட்டில் ஒரு அங்கமாக இருக்கிறது. நாம் சாப்பிடும் உணவுகளின் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், நம்முடைய ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இஞ்சி இருக்கிறது. எனவே தான் பாலரும் தங்கள் டயட்டில் பல வழிகளில் இஞ்சியை சேர்த்து கொள்கிறார்கள்.


சிலர் இஞ்சி தரும் ஆரோக்கிய நன்மைகளை பெறுவதற்காக அதை தேநீராக தயாரித்து குடிப்பார்கள் சிலர் இஞ்சி தண்ணீரை குடிப்பார்கள். இருப்பினும் இந்த இரண்டில் நம்முடைய ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது என்ற கேள்வி பலரின் மனதில் அடிக்கடி எழுகிறது. இஞ்சி தண்ணீர் , இஞ்சி தேநீர் இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு சிறந்தது? பார்க்கலாம் வாருங்கள்…


இஞ்சி டீ: குளிர்காலம் அல்லது கோடை காலம் என எதுவாக இருந்தாலும் பலர் இஞ்சி டீ குடிக்க விரும்புகிறார்கள். பச்சை தேயிலையுடன் ஒப்பிடும் போது இஞ்சி டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்திருக்கிறது. இந்த கலவை பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. அதே சமயம் இஞ்சி டீ-யானது வாத தோஷத்தை பாதிக்க கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆயுர்வேதத்தின்படி வாத தோஷம் என்பது உடலின் அனைத்து உயிரியல் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் இயக்கத்தின் ஆற்றல் என குறிப்பிடப்படுகிறது. மேலும் இது காற்று மற்றும் விண்வெளி கூறுகளை குறிக்கும். இஞ்சி டீ-யை அதிகம் பருகுவதால் வாதத்தின் அளவு அதிகரிக்கலாம். உடலில் வாதத்தின் அளவு அதிகரிப்பது வாயு, உப்புசம் மற்றும் பதட்டம் போன்ற விரும்பத்தகாத விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

உலர்ந்த இஞ்சி தண்ணீர்: இஞ்சி டீ வாதத்தை தூண்டி தேவையற்ற சில விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் இருக்கும் நிலையில், உலர்ந்த இஞ்சி தண்ணீர் சிறந்ததாக இருக்கும். உலர்ந்த இஞ்சித் தூலாய் பயன்படுத்தி காய்ச்சப்படும் இந்த பானம் நம்முடைய செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது மற்றும் உப்புசத்தை போக்க உதவுகிறது. தவிர உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு உலர் இஞ்சி தண்ணீர் மிக பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் நொறுக்கு தீனிகளை சாப்பிட வேண்டும் என்ற ஏக்கத்தை குறைக்கிறது.


ஃபிரெஷ்ஷான இஞ்சி தண்ணீர்: உலர் இஞ்சி தண்ணீர் பல நன்மைகளை தரும் அதே நேரம் ஃபிரெஷ்ஷான இஞ்சிகொண்டு தயாரிக்கப்படும் தண்ணீரானது சளி அல்லது இருமலால் பாதிக்கப்பட்டிருந்தால் நிவாரணம் அளிக்க பெரிதும் உதவும். அதுமட்டுமின்றி நம்முடைய இதய ஆரோக்கியத்திற்கும் இது மிகவும் நன்மை பயக்கும். இஞ்சியில் gingerols நிறைந்திருக்கிறது. எனவே ஃபிரெஷ்ஷான இஞ்சியை கொண்டு தயாரிக்கப்படும் இஞ்சி தண்ணீர் ரத்த நாளங்களைநன்கு திறக்க உதவி பிளட் சர்குலேஷனை ஊக்குவிக்கிறது மற்றும் ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.

எது சிறந்தது.? இஞ்சி தண்ணீர் மற்றும் இஞ்சி டீ இரண்டுமே நமக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. உங்கள் உடலின் தேவைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப இஞ்சி தண்ணீர் அல்லது இஞ்சி டீ-யை தேர்ந்தெடுப்பது முக்கியமானது. உலர் இஞ்சி தண்ணீர் வாயு மற்றும் உப்புசம் போன்ற வாத தோஷம் தொடர்பான பிரச்சினைகளை சமாளிக்க உதவும் அதே நேரம், ஃபிரெஷ்ஷான இஞ்சி நீர் சளி தொந்தரவுகளை நீக்குகிறது மற்றும் ரத்த சுழற்சியை மேம்படுத்த உதவுகிறது.


🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment