Search

இதயத்தில் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவும் 5 காய்கறிகள்..!

 இன்றைய காலத்தில் இளம் வயதினர் கூட இதய நோய்களால் அதிகமாக பாதிக்கப்படுவதை பார்த்து வருகிறோம். இதற்கு முக்கிய கரணம் நமது வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்றுதான் கூற வேண்டும்.

காய்கறிகள் அதிகமாக கொண்ட சரிவிகித உணவுப் பழக்கத்தை பின்பற்றினால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். நம் இதய நலனிற்கு உதவி செய்யும் 5 காய்கறிகள் பற்றிதான் இப்போது பார்க்கப் போகிறோம்.

இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை மருத்துவ சிகிச்சையால் மட்டுமே குணப்படுத்த முடியும். இதய அடைப்புகளை சரி செய்யாவிட்டால் பெருந்தமனித் தடிப்பு நோய் உருவாகும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் சரிவிகித டயட்டில் ஒரு பகுதியாக இருக்கும் காய்கறிகள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. சில குறிப்பிட்ட காய்கறிகளில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது.

இவை இதய நோய் தாக்கும் அபாயத்தை குறைக்க உதவுகிறது. கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவி செய்வதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக பேண வேண்டுமென்றால் இந்த 5 காய்கறிகளை உங்கள் டயட்டில் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பச்சை இலை காய்கறிகள் :  உங்கள் இதயத்திற்கு சிறந்த நண்பனாக இருக்கிறது பச்சை இலை காய்கறிகள். கீரை, காலே, ஸ்விஸ் சார்டு (பெரும்பாளைக் கீரை) போன்றவற்றில் அதிகளவு வைட்டமின், தாதுக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது. இவை உங்கள் உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை குறைத்து இதய நலனை மேம்படுத்துகிறது.

ப்ரக்கோலி : மரம் போன்ற வடிவில் சிறியதாக இருக்கும் ப்ரக்கோலி, நம் இதயத்திற்கு உற்ற தோழனாக இருக்கிறது. ப்ரக்கோலியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடெண்ட், வைட்டமின், நார்ச்சத்து ஆகியவை நிறம்பியுள்ளது. இதிலுள்ள சல்ஃபோரபீன் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது.


தக்காளி : இதயத்திற்கு நன்மை செய்யும் லைகோபீன் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் தக்காளியில் அதிகமுள்ளது. இவை உங்கள் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வரும் ஆபத்தை குறைக்கிறது.

அவகேடோ : ஊட்டச்சத்து அதிகமுள்ள அவகேடோவில் இதயத்திற்கு நன்மை செய்யும் நிறைவுற்ற கொழுப்புகள் நிரம்பியுள்ளது. மேலும் இதிலுள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை ஒழுங்குப்படுத்த உதவுகிறது.


குடை மிளகாய் : குடை மிளகாயில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ அதிகமுள்ளது. இவை இதயத்தில் ஏற்படும் குறைபாட்டை குறைக்க உதவுவதோடு இதய நலனையும் மேம்படுத்துகிறது.

மருத்துவ சிகிச்சை அவசியம் : உங்கள் டயட்டில் காய்கறிகளை சேர்ப்பது இதய நலனை மேம்படுத்தும் என்றாலும் புகையிலை, மதுப்பழக்கம் போன்றவற்றை கைவிடுவதும், சரிவிகித டயட்டை பின்பற்றுவதும், மன அழுத்தம் இல்லாமல் வாழ்வதும், சீரான உடற்பயிற்சியும் அவசியமாகும். இதயத்தில் அடைப்பு அல்லது வேறு எந்தப் பிரச்சனை இருந்தாலும் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் உடல்நிலையை பொறுத்து உங்களுக்கு தேவையான சிகிச்சை, மருந்துகள், வாழ்க்கைமுறை மாற்றங்கள் ஆகியவற்றை அவர் பரிந்துரைப்பார். சில அரிதான சமயங்களில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரைக்கவும் வாய்ப்புள்ளது.


🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment